Posts

Showing posts with the label POETRY DAY

WORLD POETRY DAY MARCH 21

Image
WORLD POETRY DAY MARCH 21 கவிதைகள்  வண்ணங்களால் ஆனவர் சித்தப்பா பள்ளியில் பெயிண்ட் அடித்துக்  கொண்டிருந்த  சித்தப்பாவை கண்டும் காணாமல்  கடந்திருக்கிறேன் மதிய இடைவேளையில் வண்ணம் அப்பிய முகத்தோடு  என்னைப் பார்த்தவரை  தூரத்திலிருந்தே ஜாடையில்  வகுப்புக்கு நேரமாச்சு  என்று தவிர்த்திருக்கிறேன் மாலைவரை அந்தப் பக்கம்  செல்லாமலே கவனமாய்  பள்ளி வளாகம் கடந்திருக்கிறேன் நண்பனுக்குத் தெரிந்திருக்குமோ  என்று சந்தேகப் பார்வை  பார்த்திருக்கிறேன் பெயிண்ட் அடித்து சம்பாதித்த  காசில் அன்று இரவே  செல்லகுமாரா திரையரங்கிற்கு  அவரோடு இணைந்த கைகள்  படம் பார்க்கச் சென்றிருக்கிறேன் இடைவேளையில் வெட்கமே இல்லாமல்  அவர் வாங்கிக் கொடுத்த  போண்டாவையும் சமோஸாவையும்  ருசித்து தின்றிருக்கிறேன் வண்ணங்களால் ஆனவர் சித்தப்பா அவர் அடித்த பெயிண்ட்களால் ஆனவை என் வானவில் போண்டாவும் சாமோஸாவும் நன்றியுடையவைகள் .....! - கவிஜி புது வீடு கம்பீரமாக எழுந்து  நிற்கிறது என் புது வீடு....