SEVEN MARRIAGES ,ONE BETROTHED KALYANA RANI RELEASED AT UDUMALPET
SEVEN MARRIAGES ,ONE BETROTHED KALYANA RANI RELEASED AT UDUMALPET புகார் கொடுக்க யாரும் முன்வராததால் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி விடுவிப்பு தாராபுரம் : தாராபுரம், திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக பிடிபட்ட பெண் குறித்து மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் தங்களை ஏமாற்றியதாக யாரும் புகார் தர முன்வராததால் போலீசார் அந்த பெண்ணை விடுவித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் செல்வகுமார்(32). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் போதுபட்டி கிராமத்தில் வசித்த பவித்ரா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த மாதம் பவித்ரா 15 சவரன் நகைகளுடன் மாயமானார். இதுபற்றி தாராபுரம் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். போலீசார் பவித்ராவை தேடிவந்த நிலையில், பவித்ரா வேறொரு நபருடன் உடுமலையில் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செல்வகுமாருடன், மாறுவேடத்தில் போலீசார் உடுமலை சென்று கண்காணித்தனர். நேற்று முன்தினம் உடுமலை பஸ்...