G.VARALAKSHMI, ACTRESS, BORN, SEPTEMBER 13, OR SEPTEMBER 27 -2006 NOVEMBER 26
G.VARALAKSHMI BORN SEPTEMBER 13 OR SEPTEMBER 27 -2006 NOVEMBER 26 ஜி. வரலட்சுமி (G. Varalakshmi, தெலுங்கு: జి.వరలక్ష్మి) என அழைக்கப்படும் கரிக்கப்பட்டி வரலட்சுமி (Garikapati Varalakshmi, செப்டம்பர் 27, 1926[1] - நவம்பர் 26, 2006)[2][3] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின், மேடை நடிகையாகவும், திரைப்பட கதாநாயகி மற்றும் இயக்குனராகவும் அறியப்படுகிறார். குணச்சித்திர பாத்திரங்களும் நடித்த ஜி.வரலட்சுமி, பின்னணியும் பாடியுள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு ஜி. வரலட்சுமி, ஆந்திர பிரதேசம் ஓங்கோல் எனும் பகுதியில் நாயுடு குடும்பத்தில் 1926 செப்டம்பர் 27[4] ஆம் திகதி சுப்பராமய்ய நாயுடுவின் இரண்டாவது புதல்வியாகப் பிறந்தார் வரலட்சுமி.[1] இவருக்கு முன்னும் பின்னும் இரு சகோதரிகள். இவரது இளமைப் பருவம் குண்டூரில் கழிந்தது. உள்ளூர் கான்வெண்டில் படித்தார், ஆனாலும் படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளியில் படிக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1] நாடகங்களில் நடிப்பு சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தூரத்து உறவினர் துங்கல சலபதி ராவ் என்பவர் விஜயவாடாவில் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார...