K.L.V.VASANTHA BIOGRAPHY 1923 -2008
K.L.V.VASANTHA BIOGRAPHY 1923 -2008 கே.எல்.வி.வசந்தா தமிழ் சினிமாவிலும் திரைக்கதை உண்டு, அதற்கு இணையான பிரம்மாண்டம் உண்டு என்பதை உலகத்துக்கு உரக்கச் சொன்ன முதல் படம் வாசன் இயக்கித் தயாரித்த ‘சந்திரலேகா’. ஆம்! ‘சந்திரலேகா’ படத்தின் கால அளவைக் குறைத்து, அதன் ஆங்கில மொழியாக்கப் பதிப்பை, அமெரிக்கா, ஜப்பான், பல ஸ்காண்டிநேவியன் நாடுகள் எனத் துணிந்து திரையிட்டு, தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தார் வாசன். அப்படிப்பட்ட பிரம்மாண்டக் காவியத்தின் கதாநாயகியாக வாசனால் முதலில் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர் கே.எல்.வி.வசந்தா. ‘சுலோச்சனா’ படத்துக்குப் பின், வி.என்.ஜானகி, மாதுரி தேவி, அஞ்சலி தேவி, ஆகிய புதிய கதாநாயகிகளின் வரவு, வசந்தா போன்ற சீனியர்களின் புகழை மங்கச்செய்துவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவந்த புதிய கதாநாயகிகளை அமர்த்த வேண்டிய தொழில்போட்டிக்குத் தப்பவில்லை. இருப்பினும் வசந்தாவை மாடர்ன் தியேட்டர்ஸ் வஞ்சனை இன்றி முதல் ஐந்து ஆண்டுகள் ஆதரித்தது. ஜெமினியின் தயாரிப்பான ‘நந்தனார்’(1942) படத்தின் பாட்டுப் புத்தகத்தின் உள் அட்டையில் ‘சந்திரல...