PETER III OF RUSSIA BORN 1728 FEBRUARY 21- 1762 JULY 17
PETER III OF RUSSIA BORN 1728 FEBRUARY 21- 1762 JULY 17 உருசியாவின் மூன்றாம் பீட்டர் (21 பெப்ரவரி 1728 – 17 ஜூலை [யூ.நா. 6 ஜூலை] 1762) (உருசியம்: Пётр III Фëдорович, பியோத்தர் III ஃபியோதரவிச்) 1762 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் உருசியாவின் பேரரசராக இருந்தார். இவர் உள முதிர்ச்சி இல்லாதவர் என்றும், அளவுக்கு அதிகமாக பிரசியாவை ஆதரித்தவர் என்றும், இதனால் மக்களால் விரும்பப்படாதவராக இருந்தார் என்றும் பெரும்பாலான வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவரது மனைவி தலைமை ஏற்று நடத்திய சதியொன்றைத் தொடர்ந்து இவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி இரண்டாம் கத்தரீன் ஆட்சியைக் கைப்பற்றினார். இளமைக் காலமும் இயல்புகளும்[தொகு] பீட்டர் கீல் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், ஓல்ச்ட்டீன்-கொட்டோர்ப்பின் டியூக் ஆன கார்ல் ஃபிரீட்ரிக். தாயார் உருசியாவின் முதலாம் பீட்டருக்கும், அவரது இரண்டாவது மனைவி முதலாம் கத்தரீனுக்கும் பிறந்த அன்னா பெட்ரோவ்னா என்பவராவார். இவர் பிறந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது தாயார் இறந்துவிட்டார். 1739 ஆம் ஆண்டில் இவரது தந்தையும் இறந்துவிட்டா...