CHANDRASHEKHAR AZAD ,FREEDOM FIGHTER DIED 1931 FEBRUARY 27
CHANDRASHEKHAR AZAD ,FREEDOM FIGHTER DIED 1931 FEBRUARY 27 சந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad, உருது: چندر شیکھر آزاد; இந்தி: चंद्र शेखर आज़ाद; 23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர். வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு] சிறுவயது[மூலத்தைத் தொகு] ஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது. இவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் க...