Showing posts with label JIKKI. Show all posts
Showing posts with label JIKKI. Show all posts

Tuesday, 17 August 2021

JIKKI ,SINGER BORN 1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16

 

JIKKI ,SINGER BORN 

1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16



ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.


கலையுலக வாழ்வு[தொகு]

ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மாதியாகையாகொல்லபாமாமனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய்உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில[தொகு]

  • அருள்தாரும் தேவமாதாவே
  • ஆசைநிலா சென்றதே
  • காதல் வாழ்வில் நானே
  • கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
  • மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
  • என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
  • மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
  • ஜீவிதமே சபலமோ
  • கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
  • கள்ளங்கபடம் தெரியாதவனே
  • காதல் வியாதி பொல்லாதது
  • ஊரெங்கும் தேடினேன்
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • நான் வாழ்ந்ததும் உன்னாலே
  • பச்சைக்கிளி பாடுது
  • அழகோடையில் நீந்தும் அன்னம்
  • நாடகமெல்லாம் கண்டேன்
  • பூவாமரமும் பூத்ததே
  • உள்ளம் ரெண்டும் ஒன்று*
  • இன்று நமதுள்ளமே*
  • கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
  • சின்னப்பெண்ணான போதில
  • கண்களால் காதல்காவியம்
  • யாரடி நீ மோகினி
  • பேசும்யாழே பெண்மானே
  • அன்பே என்றன் முன்னாலே
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  • காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
  • ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
  • நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)

Sunday, 3 November 2019

JIKKI ,THE LEGEND SINGER ,BORN 1935,NOVEMBER 3- 2004 AUGUST 16



JIKKI ,THE LEGEND SINGER ,BORN
1935,NOVEMBER 3- 2004 AUGUST 16




ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி

கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார். ஜிக்கி என்று பிரபலமாக அழைக்கப்பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணிக்கு வயது 70. மறைந்த பாடகர் ஏ.எம்.ராஜாவின்மனைவிதான் ஜிக்கி. 7 வயதில் நடிக்க வந்த ஜிக்கி பின்னர் பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார். ஞானசெளந்தரி என்ற படம்தான் ஜிக்கியின் முதல் பாடல் இடம்பெற்ற படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம்ஆகிய மொழிகளில் ஜிக்கி எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். யாரடி நீ மோகினி, துள்ளாத மனம் துள்ளும், நாயகன் படத்தில் நான் சித்தால் தீபாவளி, சொல்லு சொல்லுஆகியவை ஜிக்கியின் பிரபல பாடல்களில் சில. தமிழக அரசின் கலைமாணி விருதைப் பெற்றிருந்த ஜிக்கி, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜிக்கி மரணமடைந்தார்.அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். ஜிக்கியின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் பலியாகிவிட்டது நினைவுகூறத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/2004/08/17/jikki.html

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994

ஜிக்கி ( Jikki , 1937 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.
கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில்,
ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா ,
தியாகையா , கொல்லபாமா , மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் , ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல்
மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய் ,
உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல்
கே. வி. மகாதேவன் இசையமைத்த
குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான
ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல்
மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.  1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.


ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994).



தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார்.
“அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
“அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே” என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் 'மந்திரி குமாரி' திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த 'குமாரி' படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா - ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான 'ஆஹ' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு 'அவன்' என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது.
“கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் - பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு 'மகேஸ்வரி' படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.
திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் 'கல்யாணப்பரிசு' படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து 'தேன்நிலவு' (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.
“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும்.
1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று.




ஜிக்கி [பின்னணிப் பாடகி]
தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார். “அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.

பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு  கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி “அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே”என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் ‘மந்திரி குமாரி’  திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.

1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த ‘குமாரி’ படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா – ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ‘ஆஹ’ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ‘அவன்’ என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது. “கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் – பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு ‘மகேஸ்வரி’ படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து ‘தேன்நிலவு’ (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும். 

1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று. 

Monday, 3 July 2017

A.M.RAJAH , PLAYBACK SINGER ,TALENTED TYRANT MUSIC DIRECTER BORN 1929 JULY 1 -1989 APRIL 8


A.M.RAJAH , PLAYBACK SINGER ,

TALENTED  TYRANT MUSIC DIRECTER  

BORN 1929 JULY 1 -1989 APRIL 8

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989) ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் பிறந்தார்  . மூன்றுவயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பன் கல்லுரியில் பி ஏ முடித்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கிய ராஜா பல போட்டிகளில் வென்றார். தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 
1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். 


இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.

திரையிசைப் பாடகராக[தொகு]

இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெ ற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாள ம் கண்ட எச். எம். வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்க ளைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவு செய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. 

ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.


1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழை த்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பா டல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.


துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. 

சிற்பி செதுக்காத பொற்சிலையே, 

தென்றல் உறங்கிய போதும் 


போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட 


துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, 

பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, 
ஓகோ எந்தன் பேபி 

போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். 


மைனர் லைஃப் ரொம்ப ஜாலி 


போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். 


முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்க ளைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். 


மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் 


கலையே என் வாழ்க்கையின் 


வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். 


தேன்நிலவு படத்தில் வரும் 

காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.

அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட 


வாடிக்கை மறந்ததும் ஏனோ, 

கண்மூடும் வேளையிலும் 

போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். 


மெல்லிய நடை கொண்ட 

நிலவும் மலரும், 
இதய வானின் உதய நிலவே, 
கண்ணாலே நான் கண்ட கணமே 

போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. 


மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்),, கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.


ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்க ளுக்காக தொடர்ந்து பாடினார். 


பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. 


பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. 


ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.


நடிகராக[தொகு]

ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார்.

 அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.


1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் 

" அழகு நிலவின் பாவனையிலே " என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ. எம். ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.

ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. 


இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். 


கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருக்கிறார்.


இசையமைப்பாளராக[தொகு]





இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பா ளராக்கியது.


1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. 


இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.


வேறு மொழிகளில்[தொகு]

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ. எம். ராஜா மட்டுமே. 1952இல் வி. தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் லோகநீதி என்ற படம் வழியாக ஏ. எம். ராஜா மலையாள திரையுலகில் நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச் சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். 

கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ. எம். ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .


ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமை த்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டி லும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். 


வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. 


உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாட லில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ. எம். ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்ற பாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.


தெலுங்கில் ஏ. எம். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. 


தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டி லோனா'  [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும்.

பிற்காலம்[தொகு]




நடுவே திரைவாழ்க்கையில் ஏ. எம். ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக் கச்சேரிகள் மூலமாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் வி. குமார் ஏ. எம். ராஜாவை மீண்டும் பாடவைத்தார். 

ரங்கராட்டினம் படத்துக்காக ஏ. எம். ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ?, புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... ஆகியன குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இரு பாடல்க ளும் சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 


1973இல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ. எம். ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 


1975இல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ. எம். ராஜா இசையமைத்தார். 


இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 


1970இல் ஏ. எம். ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார்.


 1970இல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்தப் பயணம் நீண்டது.




இன்று நாம் கேட்கும் திரை இசை தென்னிந்திய திரையிசையின் பொற்காலத்தின் சிறந்த இன்னிசை மெட்டுகளின் சாயல் கூட இல்லாத ஒன்று. இசை என்ற பெயரில் இன்று அவதாளத்துக்குள் கலந்துகட்டி நிறுத்தப்படும் விதவிதமான ஒலிகளை சகித்துக் கொள்வது உண்மை யான இசைரசிகனைப் பொறுத்தவரை துன்பமானதுதான். 

ஏ.எம்.ராஜா போன்றவர்களின் நேற்றைய இன்னிசை மெட்டுகளை கேட்டவர்களுக்கு இன்றைய திரையிசையில் ரசிக்க அதிகமில்லை. தேன் தடவிய வெல்வெட் மென்மை கொண்ட குரலாக ஏ.எம்.ராஜா ஐம்பது களிலும் அறுபதுகளிலும் காதலர் நெஞ்சங்களையும் இசைக்காதலர் உள்ளங்களையும் ஒருங்கே ஆட்சி செய்தார். அவரது குரலில், நிலா நிரப்பிய இரவுகளின் அமைதியையும் கோடைத் தென்றலின் மென்கு ளிரையும் நினைவில் எழுப்பும் ஒரு மாயம் இருந்தது.


டி.எம்.சௌந்தரராஜன், கண்டசாலா, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜெ.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரை பாடல்களின் எண்ணிக்கையை வைத்தும் புகழை வைத்தும் தென்னிந்திய திரையி சையின் உச்ச நட்சத்திரங்களாகச் சொல்லலாம். 


மென்மையான காதலுணர்வுகளை தொட்டெழுப்பும் இன்னிசை மெட்டுகளை பாடும் தனித்திறமையால் ஏ.எம்.ராஜா இவ்வரிசையில் சற்றே தனித்து நிற்கிறார். அவருக்கே உரிய தனித்தன்மைகளாக இரண்டு கூறுகளைச் சொல்லலாம். ஒன்று அவர் பாடும்போது எப்போதும் நம்மை வந்து தீண்டும் ஆத்மார்த்தமான மன எழுச்சியும் பாடலில் உணர்ச்சிக ளுக்கு அவர் கொடுக்கும் உயிரும். 


இன்னொன்று, அவரது இனிய மென்குரல். இவ்விரண்டு அம்சங்களும் இணைந்து ஏறத்தாழ அவரது அனைத்து பாடல்களையும் நெஞ்சை தொட்டுச்செல்லும் அனுபவங்களாக ஆக்குகின்றன.


பட்டுபோல நம்மை வருடிச்செல்லும் ஏ.எம்.ராஜாவின் குரலும் இசை பாணியும், மேலான இசை ஒருபோதும் உரத்ததல்ல என்று காட்டியபடியே உள்ளன. அவரது குரல் எந்தவிதமான முயற்சியும் தெரியாத அளவுக்கு இலகுவானது. அதே சமயம் எந்த உச்சத்துக்கும் ஆழத்துக்கும் சாதாரண மாக சென்றுவருமளவுக்கு திறன் கொண்டது...சுருதி விலகாதது... தென்னிந்திய இசைநட்சத்திரங்களில் முற்றிலும் சுருதிசுத்தமான குரல் ஏ.எம்.ராஜாவுடையதுதான். ஆகவேதான் அன்றைய பாடல்பதிவுமுறை களில் உள்ள குறைபாடுகளையெல்லாம் தாண்டி அவரது பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் நம் செவிகளுக்கு இனிதாக இன்றும் உள்ளன.


ஏ.எம்.ராஜா ஒரு முழுமையான இசைக்கலைஞர். தென்னிந்திய இசையின் ஒரே வெற்றிகரமான 'இசையமைப்பாளர்-பாடகர்' அவர்தான். ஹேமந்த் குமாரை விட்டால் இந்தியிலும்கூட அவருக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்-பாடகரைக் காணமுடியாது. 


ஏ.எம்.ராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தூய இன்னிசை மெட்டு கொண்டவை, ஆனால் அவையெல்லாம் பெரும்புகழ் பெற்று அவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக நிலைநிறுத்தின. 


ஆடிப்பெருக்கு என்றபடத்தில் பி.சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..'என்ற பாடல்...சுசீலாவின் குரலின் உச்சத்திற்குபோகும் திறனையும் ஆழத்திற்குச் செல்லும் திறனையும் வெளிப்படுத்தும் இப்பாடலின் மெட்டு, எத்தனை நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவுகிறது என்பதை கவனித்தால் இத்தகைய மெட்டை எளிதாக நம்மைக் கவரும் ஒரு பாடலாக அமைத்து, அதன் மெட்டுக்கும் பின்னணி இசைக்கும் இடையே துல்லியமான ஒருமையை உருவாக்கியுள்ள ஏ.எம்.ராஜா எத்தனை திறன் வாய்ந்த இசையமைப்பாளர் என்பது புரியும். 


இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த சோபா. அது ஒரு பெரும் வெற்றி. 


1960ல் வெளிவந்த 'பெள்ளி கானுக' அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக ஆக்கியது.


1959ல் வந்த 'கல்யாணப்பரிசு', இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம். ஜெமினி கணேசனை நட்சத்திரமாக்கிய படம் அது. 


சிவாஜி கணேசன் பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பேரில் படத்தயாரிப்பில் இறங்கியபோது ஏ.எம்.ராஜாவை 'விடிவெள்ளி' என்ற அந்தப்படத்தின் இசையமைப்பாளராக தேர்வுசெய்தார் என்பது இன்றும் நினைவுகூ ரப்படுகிறது. 


'அன்புக்கோர் அண்ணி' 'தேன்நிலவு' போன்ற படங்களின் பாடல்கள் அவற்றின் மெட்டுகளுக்காகவே பெரும்புகழ்பெ ற்ற வை.

ஏ.எம்.ராஜாவின் இசையமைப்பு முறையும் அவரது குரலைபோலவே மென்மையானது. அவரது மெட்டுகள் முற்றிலும் அசலானவை. ஒருகாலத்தில் தமிழ்த் திரையிசையின் ராஜாவாகவே அவர் கருத ப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 

1952ல் தட்சணாமூ ர்த்தியின் இசையமைப்பில்'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாள த்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொ ற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர்.



தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் 'அப்பு சேஸி பப்பு கூடு' படத்தில் இடம்பெற்ற' மூகவைன ஏமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே'] இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்.
1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற'மதுர மதுரமீ சல்லனி ரேயி' 'அனுராகாலு தூரமுலாயெனா', 1957ல் 'அக்கா செல்லுலு' ப்டத்தில் இடம்பெற்ற 'அண்டு மாமிடி' போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மாரேனா' என்ற பாடல்தான்.

'அலாதீன் அற்புத தீபம்' படத்தில் இடம்பெற்ற 'அந்தால கோனேட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம்' படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என தெலுங்கில் அவரது அழியாப்பாடல்களின் பட்டியலை பெரிதும் நீட்டமுடியும்.



அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வுசெய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப்ப குதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன.

ஒருநாள் பின்னிரவில் அவற்றை கேட்க நேர்ந்த ஜெமினி எஸ் எஸ் வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான 'சம்சார'த்தில் தலைப்புப் பாடலைப்பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.


1951ல் கே.வி.மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது 'குமாரி' என்ற படத்தில் 'அழியாத காதல் வாழ்வில்..' என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்க ளைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார்.


வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ரஃபி மற்றும் தலத் மெஹ்மூத் ஆகியோரின் பாட்டுமுறை களின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலி செய்யாமல் தன்னுடைய சுயமான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா. மிக மென்மையாகவும் உணர்ச்சிபூர்வ மாகவும் பாடும்முறை அது.


'சிற்பி செதுக்காத பொற்சிலையே' 'தென்றல் உறங்கியபோதும்' போன்றவை போலான துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ.எம்.ராஜாவை தமிழில் நீங்காப்புகழ்பெறச்செய்தன. மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான 'ஆடாத மனமும் ஆடுதே', 'பாட்டு பாட வா பார்த்து பேச வா', 'ஓகோ எந்தன் பேபி' போன்ற பாடல்க ளிலும்கூட ஒரு மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். 'மைனர் லைஃப் ரொம்ப ஜாலி' போன்ற பாடலக்ளை கூட அவர் தன் தனித்துவம் கொண்ட பாணியில் பாடியுள்ளார்.


மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித்தெள்¢வுடன் இயல்பாக பாடியுள்ளார். 'மீண்ட சொற்கம்' படத்தில் வரும் 'கலையே என் வாழ்கையின்' என்ற வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல், 'தேன்நிலவு' படத்தில் வரும் ஹம்சானந்தி ராகத்தில் அமைந்த 'காலையும் நீயே' போன்ற பாடல்கள் உதாரணம்.


அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' 'கண்மூடும் வேளையிலும்' போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட 'நிலவும் மலரும்' 'இதய வானின் உதய நிலவே' 'கண்ணாலே நான் கண்ட கணமே' போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை.


தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. 'மாசிலா உண்மைக்காதலே' [அலிபாபாவும் 40 திருடர்களும்] 'கண்களின் வார்த்தைகள் புரியாதோ' [களத்தூர் கண்ணம்மா] போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா எம்.ஜி.ஆர், என்.டி ராமராவ், நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், சத்யன், பிரேம் நசீர் போன்ற நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார்.

 பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது.

எந்த நடிகருக்காகவும் அவர் தன் குரலையும் பாடல்முறையையும் மாற்றிக் கொள்ளவில்லை. அவரைப்பொறுத்தவரை பாடல் என்பது போலி செய்வதோ நடிப்பதோ அல்ல, இதயபூர்வமானது அது. பாடலை திரைபப்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக எண்ணாமல் திரைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு தனித்த கலையாக அவர் கண்டிருக்கவேண்டும். இந்த அம்சத்தால்தான் அவரது பாடல்கள் அவை இடம்பெற்ற படங்களின் காட்சி களை மீறி, மிகை நடிப்பு, மிகை உணர்ச்சிகளின் துணை இல்லாமலேயே, இன்றும் தனித்து நிற்கின்றன.
ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார்.

பின்னர் 'பக்க இந்டி அம்மாயி' என்ற தெலுந்கு படத்தில் ஒரு இசைக்கலைஞனாக முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் 'படோஸன்' என்றபேரில் மறுஆக்கம் செய்யப்பட்டபோது கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்டி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தார்.


1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் 'அழகு நிலவின் பவனியிலே' என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா 'நான் உன்னை மணம்செய்துகொள்ள விரும்புகிறேன்' என்று அந்த பாடல்த்தாளில் எழுதி சகபாடகி ஜிக்கியிடம் கொடுத்தார். அது திருமணத்தில் முடிந்தது. தென்னிந்திய திரைவானின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர் ஜிக்கி. பி.சுசீலா போன்ற பெரும்பாடகிகள் கூட தொடக்க கால பாடல்களில் ஜிக்கியின் பாணியால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதிக்கு ஆறு குழந்தைகள். அவர்களில் சந்திரசேகர் தந்தையின் குரல் வளம் ஓரளவு கொண்டவர்.


ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச்சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ஆஹ்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். 'பகுத் தின் ஹுயே' போன்ற படங்களுக்கும் ஏ.எம்.ராஜா பாடினர். ராஜாவின் பாடுமுறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் 'அதி மதுரா அனுராகா' போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். புகழ்பெற்ற பல சிங்களப்பாடல்களும் அவர் பாடியிருகிறார்.


ஏ.எம்.ராஜாவின் வெற்றி போராடாமல் கிடைத்த ஒன்று. அவருடைய திறமை காரணமாக வாய்ப்புகளும் புகழும் தேடி வந்து சேர்ந்தன. ஆனால் இந்த நிலைமை அதிகநாள் நீடிக்கவில்லை. இந்திய திரைப்படங்களில் பொதுவாக உருவான சில போக்குகளும் அதன் விளைவாக வந்த புதுப் பாடகர்களும் காரணமாக அவரது இடம் இல்லாமலாயிற்று. இந்திய திரையுலகம் பெரும் படநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்ட காலம் போய், கதாநாயக நடிகர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆயிற்று. 


கதாநாயக நடிகர்கள் பெரும் புகழ்பெற்றபோது அவர்களுக்கு ஏற்ப தங்கள் குரலையும் பாடுமுறையையும் மாற்றி பாடும் பாடகர்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. அத்துடன் ஏ.எம்.ராஜா சற்று கறாரான தொழில் நோக்கு கொண்டவர்.


வளைந்துகொடுப்பதும் இச்சகம் பேசுவதும் அவரது இயல்புக்கு மாறானவை. ஆகவே திரையுலகில் அவருக்கு நண்பர்கள் குறைவு. பாடுவதில் அவருக்கு இருந்த சரளம் பழகுவதில் இருக்கவில்லை. திரை இசை பற்றி அவருக்கு திட்டவட்டமான கருத்துக்கள் இருந்தன, அவற்றில் அவர் சமரசம் செய்யவும் விரும்பவில்லை. அவர் பின்வாங்க நேர்ந்தமை க்கு இதெல்லாம்தான் முக்கியமான காரணம்.


இயக்குநர் ஸ்ரீதர் ஒருமுறை நினைவுகூர்ந்தார், தேன்நிலவு படத்துக்கு இசையமைக்கும்போது ஏ.எம்.ராஜா அவரது மெட்டில் ஒரு சிறு ஒலிக்குறிப்பைக்கூட மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். கண்னதாசனின் பல்லவி, இசையுடன் இசைவதற்கு ஒரு சிறிய மாற்றம் தேவைப்பட்டது. 


ஏ.எம்.ராஜா பிடிவாதம் செய்யவே கண்ணதாசனே பல்லவியை மாற்றிக் கொண்டார். அவருடன் சேர்ந்து இயங்கிய பல இசைக்கலைஞர்கள், அவர் பாடல்களை அமைக்கும்போது விட்டுக்கொடுக்காத பிடிவாதம் கொண்டவர் என்பதை சொல்லியிருக்கிரார்கள்.


தேன்நிலவு படத்துக்கான பாடல்களை அமைக்கும்போது ஸ்ரீதருக்கும் ஏ.எம்.ராஜாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. படத்துக்கு பின்னணி இசையமைக்க ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். பிரச்சினை எம்.ஜி.ஆர் வரை சென்று அவர் கட்டாயப்படுத்தியதனால் ஏ.எம்.ராஜா அதற்கு ஒப்புக்கொண்டார். 


அடுத்தபடமான 'நெஞ்சில் ஓர் ஆலய'த்துக்கு இசையமைக்க ஸ்ரீதர் ஏ.எம்.ராஜாவைக் கேட்டுக்கொண்டாலும் ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். ஆகவே வாய்ப்பு விஸ்வநாதன்-ராமமூர்த்திக்குப் போயிற்று. 


மறக்கமுடியாத பாடல்களை கொடுத்த ஸ்ரீதர்-ஏ.எம்.ராஜா கூட்டு அங்கே முடிந்தது. உண்மையில் என்ன நடந்தது என்பதெல்லாம் இன்றுவரை ஊகங்களே. சாதனையாளர்களை மறப்பதிலும் புறக்கணிப்பதிலும் திரையுலகுக்கு தனக்கே உரிய வேடிக்கையான வழிகள் உண்டு. 


மேதைகள் புறக்கணிப்பின் இருளில் உழலும்போது திரையுலகு அரைகுறையாளர்களை தூக்கிப்பிடிக்கிறது. திரையுலகத்தின் வணிக வேகத்தில் பலசமயம் மேதைகளுக்கு இடமிருப்பதில்லை. ஏ.எம்.ராஜா அவரது சாதனைகள் மறக்கப்பட்டு திறமை புறக்கணிக்கப்பட்டபோது, தன்னை மெல்ல திரையுலகிலிருந்து விலக்கிக்கொண்டார். கூடவே ஜிக்கியையும் புகழின் உச்சியிலிருந்தபோதே திரையுலகிலிருந்து விலகச்செய்தார் என்பது அவர் செய்த பெரும் பிழை என்று பலர் கூறுகிரார்கள்.


ஏ.எம்.ராஜா தன் திறமையிலும் தன் கருத்துக்ளிலும் திடமான நம்பிக்கை உடையவர், ஆகவே அவர் எதற்காகவும் வருந்தவோ தயங்கி நிற்கவோ இல்லை. அவருக்கு, ஆரம்பகாலத்தில் அவர் நடத்திய வாடகைக் கார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. ஜிக்கியுடன் இணைந்து இந்தியாவிலும் உலகமெங்கும் அவர் தொடர்ந்து மேடைநிகழ்ச்சிகள் நடத்திவந்தார். அவரது இசைக்குழுவில் கொஞ்சகாலம் இளையராஜா கித்தார் வாசித்தார். 


திரையிசையில் உச்சியில் இருக்கும்போதே ஏ.எம்.ராஜா வாடகைக்கார் தொழிலையும் செய்து வந்தார் என்பது அவருக்கு திரையுலகுமீதிருந்த அவநம்பிக்கையை காட்டுகிறது. அது தன் உலகமல்ல என்று உள்ளூர அவர் உணர்ந்திருக்கலாம்... அவருக்குள், மிக ஆழத்தில் ஒரு அமைதியி ன்மை, ஒரு வலி ஒளிந்திருந்திருக்கவேண்டும்.... அதுதான் அவரைக் காதலின் வலியையும் தாபத்தையும் அத்தனை நுட்பமாகவும் உருக்க மாகவும் தன் பாடல்களில் வெளிப்படுத்தும்போதே தன் வெளித்தோற்ற த்தில் கடுமையையும் கண்டிப்பையும் காட்டச்செய்தது என்றும் இருக்கலாம்.



1987ல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் அளித்த பேட்டியொன்றில் ஏ.எம்.ராஜா ஒரு பாடகராகவும் இசையமைப்பாளராகவும் தன் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.


 "என் பாடல்கள் காலம் கடந்தும் நினைக்கப்படுகின்றன, நேசிக்கப்படு கின்றன. இன்றும் நான் அவற்றை மேடையில் பாடி புகழுடனூம் செல்வ த்துடனும் வாழமுடிகிறது. இசைவாழ்வில் வந்த பின்னடைவுகள் பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை" என்றார். 


சற்று தத்துவார்த்தமாக ஏ.எம்.ராஜா சொன்னார், "அதெல்லாம் விதி! கல்யானப்பரிசு, தேன்நிலவு போன்ற படங்களில் இசையமைத்ததைவிட இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம், செய்ய இப்போதும் என்னால் முடியும் என்றே உணர்கிறேன். ஆனாலும் எல்லாம் திருப்தியாகவே உள்ளன. பாடகராக, இசையமைப்பாளராக வாழவேண்டுமென்று விரும்பினேன், வாழ்ந்தேன்" என்றார் ஏ.எம்.ராஜா.


ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டுதான் இருந்தார். 1989 ஏப்ரல் எட்டாம்தேதி கன்யாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் ரயிலை தவறவிட்டுவிட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் ரயில் நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார். ஜிக்கி ரயிலில் அமர்ந்து ஜன்னல்வழியாக அந்தக் காட்சியை பார்கக் நேர்ந்தது.

நம் தனிமைகளில் இனிமையாக, ஆறுதலாக ஒலிக்கும் ஏ.எம்.ராஜாவின் பாடல்கள்....திங்களுறங்கிய போதும் தென்றலுறங்கியபோதும் உறங்காமல்* நம் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது மென்மைக் குரல்....தென்னிந்திய திரையிசையின் நிகரற்ற அந்த இனிமைக்குரலுக்கு அஞ்சலி.