Posts

Showing posts with the label ALCOHOL

OPERATION ALCOHOL ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன்

Image
ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன் வவுனியா, நெழுக்குளம் வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம். நெழுக்குளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை. முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்பாட்டிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது. இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம். அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத்திடம் அனுமதி வாங்கி முகாமில் இருக்கும் ஓ எல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர். ஒரு பெரிய வேப்ப மரத்தின் கீழ் தறப்பாள்களை விரித்து கிட்டத்தட்ட 40 மாணவர்களுக்கு மேல் படிக்கத் தொடங்கினோம். எனக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள். அருண், லூக்கு, டிலக்சன், ஜூலியட், பவதாரணி இப்படியாக. தர்ஷிகாவும் அறிமுகமானாள். அவள் எனக்கு கணிதம் சொல்லிதர...