Posts

Showing posts with the label 1602

DUTCH EAST INDIA COMPANY FORMED 1602 MARCH 20

Image
  DUTCH EAST INDIA COMPANY  FORMED 1602 MARCH 20 தமிழ் அடிமைகள் ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?   தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்...

ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12

Image
ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12 . அபுல் ஃபசல் (Abu'l Fazl ibn Mubarak, பாரசீக மொழி: ابو الفضل, ஜனவரி 14, 1551 - ஆகஸ்ட் 12, 1602) பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி. 1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இ...