Posts

Showing posts with the label HIGH PITCH

T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21

Image
T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21 நான் என்றுமே தொலைக்காட்சியின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளுக்கு (reality music shows) எதிரானவன். அதற்கான காரணங்களை முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனால் பல மொழிகளில் இந் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் என்னை அவற்றின் நடுவராக இருக்கச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! அதற்குக் கொடுக்கப்படும் பணமும் உடனடியாகக் கிடைக்கும் புகழும் மிகவும் சபலமூட்டுபவைதான். ஆனால் நான் எப்போதும் திடமாகவே முடியாதென்று சொல்லிவிடுவேன். இந்தவகையான இசைப்போட்டி நிகழ்ச்சிகள் இசையுணர்வுக்குத் தீங்கானவை என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருக்கிறது என்றாலும் சில தருணங்களில் இந்நிகழ்ச்சிகளில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. முதல் ஆச்சரியம், ஒருமுறை இப்போட்டி ஒன்றில் வென்ற ஒரு 17 வயதுப் பாடகர் அவர் ஏ.எம். ராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னது. அதைப்பற்றி ஏ.எம்.ராஜா பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், சிறுவர் வரிசைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 வயதான கிருஷ்ணமூர்த...

T.R.MAHALINGAM HIGH PITCH VOICE SINGER BORN 1924 JUNE 16-1978 APRIL 21

Image
T.R.MAHALINGAM  HIGH PITCH VOICE SINGER,ACTOR  BORN 1924 JUNE 16-1978 APRIL 21 தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)[1] 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன. ‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம். ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து. வாழ்க்கைக் குறிப்பு 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்...