GORA NADU கோரநாடு – பகுதி 1 & 2 BLITZKRIEGKK
GORA NADU கோரநாடு – பகுதி 1 & 2 BLITZKRIEGKK எழாலேறு: வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வான்புக ழோர்கோர நாடு. கடல்நீர் உறிஞ்சிக் கருநிறம் கொண்ட கவின்மழை மேகங்கள் வானத்தை சற்றே கைநீட்டித் தொட்டுவிட எத்தனிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகட்டுடன் இதழோடு இதழ் சேர்த்துக்கொண்டிருக்கும் இனிய வேளையில், அந்த மேகங்களின் மேலே இரு புறமும் விரிந்தும் குறுகியும் நீண்ட சிறகுகளால் மேகக் குதிரைகளைக் கட்டி இழுத்துப் பறந்தவாறே வட்டமடித்துக்கொண்டு, பரவி விரிந்திருக்கும் காட்டுப்பகுதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அத்தனை மரங்களையும் ஊடுருவித் தனக்கேற்ற இனியதோர் இரையாக நின்றுகொண்டிருக்கும் ஒரு காட்டுமுயலைக் கடைக்கண்களால் குறிபார்த்தபடி, காற்றைக்கிழித்து, மின்னலைப் போலே சட்டெனக் கீழிறங்கி, நீண்ட நெடுந்தூரம் ஒற்றைப் பாய்ச்சலில் ஓங்கி இரு கால்நகங்களால் அம்முயலைக் கழுத்து நரம்புகள் உடையுமளவு இறுக்கக் கவ்விப் பிடித்து, அதே வேகத்துடன் மேல்நோக்கிப் பறந்து மலைமுகட்டின் உச்சிக்கு சென்று அமர்ந்த எழால் என்று அழைக...