Posts

Showing posts with the label MIRZA BAGRU

BAHADUR SHAH, THE FATHER OF INDEPENDENCE

Image
BAHADUR SHAH, THE FATHER OF INDEPENDENCE இந்திய சுந்தந்திர போராட்டத்தின் தந்தை பகதூர் ஷா அறிமுகம் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்ட வலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த புரட்சியில் ஈடுபட்ட, தலைமை தாங்கியவர்களின் வரலாறு இருட்டடிப்பு  செய்யப்பட்டு விட்டது. டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணை பற்றி 1948ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு புத்தகம் எழுதினார். “இதே செங்கோட்டையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் இந்தியாவின் கடைசி மொகலாயச் சக்கரவர்த்தி” என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு ஆதரவளித்ததாக அந்தச் சக்கரவர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்படி இந்திய விடுதலைப்போரில் பெரும்பங்காற்றி அதன் காரணமாகவே தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையிலேயே மரணமடைந்த மாவீரன் பகதூர்ஷாவின் 150வது நினைவு ஆண்டில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். இவ்வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாத இதழில் 2012...