FIRST GENOCIDES IN CEYLON -SRILANKA 1956 JUNE 11 DIED 150-200
FIRST GENOCIDES IN CEYLON -SRILANKA 1956 JUNE 11 DIED 150-200 இலங்கையில்முதல் இனக்கலவரம் கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் -என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தா க்குதல் ஆகும்[3]. கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்ற த்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பாராமுகமாக இருந்த காவல்து றையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமை யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கலவரங்களின் பின்னணி[தொகு] பிரித்தானியக் குடியேற்றக் காலப் பகுதியில் இலங்கையில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு அரச சேவையாளர்கள் சிறுபான்மையினரான தமிழர்களாக இருந்தனர். தமிழர் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலைத்தேய முறையிலான கல்வி அமெரிக்...