Posts

Showing posts with the label AAKRI RAASTHA

AAKRI RAASTHA , HOW FILMED

Image
AAKRI RAASTHA , HOW FILMED திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பி தழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே... மும்பையில் சந்தித்தேன் “வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து “உங்க...