JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER BORN/ DIED MAY 26, 2014
JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER BORN/ DIED MAY 26, 2014 ஜெயலக்ஷ்மி [ராதா-ஜெயலக்ஷ்மி] பின்னணிப் பாடகி மேடைக்கச்சேரிகளிலும், திரையிசைப் பாடல்களிலும் பிரபலமாக விளங்கியவர்கள் ராதா-ஜெயலக்ஷ்மி இருவரும். ஆண்கள் மட்டுமே மேடைகளில் கச்சேரிகள் செய்துவந்த 1930-களில் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் ஒரு புரட்சி நடக்கத் தொடங்கியது. மேடைகளில் பெண் பாடகிகள் தோன்றி இசை ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் பிரபலமான பாடும் இணையாக பவனி வந்தார்கள். மிக இளவயதிலேயே தங்கள் இனிய குரல் வளத்தாலும், விறுவிறுப்பான இசையினாலும் இசை ரசிகர்களைக் கவர்ந்தார்கள். ராதா-ஜெயலக்ஷ்மி சகோதரிகளில் ஜெயலக்ஷ்மிக்கு சினிமாவுக்குப் பொருத்தமான குரல் அமைந்திருப்பதை அறிந்து 1950-இல் கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ”ஏழை படும்பாடு” திரைப்படத்தில் விதியின் விளைவால் அனாதையானேன் என்ற சோகப் பாடலை பாடியபடியே திரையிசையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் 1951-இல் வீணை எஸ்.பாலசந்தர் ‘கைதி’ என்ற ஒரு படத்தை எடுத்தார். இதில் பாலசந்தரே கதாநாயகன் விஜயனாக நடித்தார். இந்தப் படத்தில் ஜெய...