Posts

Showing posts with the label KATHIGASU

SYBIL KATHIGASU ,FREEDOM IGHTER,ACTIVISTS BORN 1899 SEPTEMBER 3-1948 JULY 12

Image
SYBIL KATHIGASU ,FREEDOM IGHTER,ACTIVISTS BORN 1899 SEPTEMBER 3-1948 JULY 12 மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.  சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்.[1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்.[2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது.[3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[4] வரலாறு[தொகு ] சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.[5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர். சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேச...