Showing posts with label TRUE. Show all posts
Showing posts with label TRUE. Show all posts

Sunday, 27 September 2020

TRUE LIFE OF S.P.BALASUBRAMANIAM

 


TRUE LIFE OF S.P.BALASUBRAMANIAM


.இப்படிப்பட்ட ஒரு நண்பனுக்கா இளையராஜா

துரோகம் பண்ணினார் ? .


------------------


------

-2017 ஜனவரியில், குமுதத்திற்காக எடுத்த நேர்காணலில், தன் மனதுக்குள் இருந்த, இந்த உணர்வை வெளிப்படுத்தினார் எஸ்.பி.பி.,

இது, 2017, ஏப்ரல், குமுதம் லைப் இதழில் பிரசுரமானது என நினைவு. அந்த பேட்டியை, அப்படியே இங்கு பகிர்கிறேன்...

------------------------------------


50 வருட திரை இசை வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்த திருப்தியுடன் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கிறார் பாடும் நிலா பாலு. பொறியியல் படிக்க நெல்லூரில் இருந்து சென்னை வந்த சிறுவனை தமிழ் சினிமா இசையின் தவிர்க்க முடியாத குரலாக கொண்டாடித் தீர்த்தவர்கள் தமிழர்கள். அவர்களை சந்தித்து நன்றி நவிலும் பணியில் மும்முரமாக இருக்கிறார். அதற்காக உலகம் முழுவதும் சுற்றி எஸ்.பி.பி. லைவ் நடத்திக் கொண்டிருக்கும் இந்த உலகம் சுற்றும் பாடகனை ஒரு காலை வேளையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.


உங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகனாக ஒரு வாழ்க்கையை இளம் வயதில் உங்களால் வாழ முடிந்ததா?


நான் ஒரு இஞ்ஜினியர் ஆகணும் என்பது தான் என் அப்பாவின் கனவு. ஐ வாஸ் எ வெரி குட் ஸ்டூடண்ட். ஸோ, எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனா நம்ம முயற்சி இல்லாமலேயே, நமக்குத் தெரியாமலேயே நான் ஒரு பாடகனாக வந்ததால கடவுள் தந்த பரிசா தான் இந்த வாழ்க்கையை நினைக்கிறேன்.

தெலுங்கில் என் முதல் பாடலை நான் பாடின பிறகு அப்பாவிடம் போய் விஷயத்தை சொன்னேன். ‘யாரோ தயவு பண்ணி உனக்கு படத்துல பாட சான்ஸ் கொடுத்திருக்காங்கடா...! கண்டசாலா முன்னால நீ எல்லாம் ஒரு எலி. அவர் ஒரு ஐராவதம் மாதிரி இருக்கார். எதோ வாய்ப்பு கிடைச்சிருக்கு பவ்யமா இரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நல்லா ப்ராக்டீஸ் பண்ணி மேல வா. ஆனா படிப்பை மட்டும் விட்டுடாத’ என்றார்.

நான் என் இன்ஜினியரிங்கை தொடர்ந்து படிச்சுகிட்டே தான் பாடிகிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துல காலேஜூக்கே போக முடியாத அளவுக்கு நான் மியூஸிக்ல பிஸி ஆன பிறகு, காலேஜில் அட்டென்டன்ஸ் பிரச்னை எல்லாம் வந்தது. மியூசிக்கா, படிப்பானு முடிவு செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்பாகிட்டயே போய் ஐடியா கேட்போம்னு முடிவு பண்ணினேன். ஒருவேளை அப்பா, ‘போய் படிக்கிறதை பாருடா’னு சொன்னா, மியூசிக்கை ஏறகட்டிட்டு இன்ஜினியரிங்கை தொடரலாம் என்பது தான் என் ஐடியா. அவர் அப்படித் தான் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்து போனேன்.

ஆனால் அவரோ, ‘நீ நல்ல பையன். நல்லா படிச்ச. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருங்காலத்துல உனக்கு எது சாப்பாடு போடும்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனா ஒன்ணு. ஒரே சமயத்துல ரெண்டு குதிரையில சவாரி செய்யணும்னு மட்டும் எப்பவும் நினைக்காதே. உனக்கு எது பிடிக்குதோ அதுல மனசு வச்சு நல்லா உழைச்சு மேல வா. நீ இதை தான் செய்யணும்னு நான் சொல்லமாட்டேன்’ என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

சரி... ரெண்டு வருஷம் பார்ப்போம். மியூசிக் சரியா வர்லனா திரும்ப பையை தூக்கிட்டு காலேஜூக்கே போயிடலாம் என்ற முடிவோட தான் இசைத் துறைக்கு வந்தேன். ஆனா அப்புறம் திரும்பிப் பார்க்க கூட கடவுள் எனக்கு நேரம் கொடுக்கல.

எங்கப்பாவோட அந்த கனவை நிறைவேற்ற முடியாம போச்சு. ஆனா எங்க அப்பா இருக்குற வரைக்கும் நான் செய்யுற வேலையை பார்த்து சந்தோஷப்பட்டுட்டு தான் இருந்தார்.


நீங்கள் ஏன் இப்போது வரை முறையாக சங்கீதம் பயில முயற்சிக்கவில்லை?


சினிமாவில் நான் பாட ஆரம்பித்த பிறகு, நான் முறையா சாஸ்திரீய சங்கீதம் பயின்று கச்சேரி பண்றதை பார்க்கணும் என்று அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். கண்டிப்பா பண்றேன்னு சொல்லி இருந்தேன். ஆனா மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் ஒரு நாளுக்கு ஆறேழு ரிக்கார்டிங்கெல்லாம் பாடிட்டு இருந்ததால, அவரோட அந்த ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்ற முடியாமலேயே போச்சு.

இப்ப வரைக்குமே சாஸ்திரீய சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது, ‘எனக்கு ஆதார ஸ்ருதியில இருந்து சங்கீதம் கற்றுக் கொடுங்க’னு யார்கிட்டயாவது போய் கேட்டா, ‘விளையாடாதீங்க சார். உங்களுக்கு தெரியாத சங்கீதமா’னு கேட்டு திருப்பி அனுப்பிடறாங்க. நான் என்ன செய்யுறது சொல்லுங்க? பிஸியா இருக்குறதுனால கத்துக்க முடியலனு சொல்றது எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிறேனோனும் தோணுது. இனிமே கத்துக்க முடியுமோ முடியாதோ? அதை காலத்துகிட்டயே விட்டுட்டேன்.


இளையராஜா?


வயசுலயும், வித்தையிலயும் எனக்கு சீனியர். சினிமாவில் எனக்கு ஜூனியர். இளையராஜாவுக்கு முன்னாலயே பாரதிராஜா தான் எனக்கு ஃப்ரெண்ட். அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கும்போது தற்செயலா எனக்கு அறிமுகமானான். அவன் நாடகத்துக்கு போய் நான் லைவ்வா பாட்டு பாடுவேன். எனக்கு கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க வரும். அதனால அவன் நாடகத்துக்கு வாசிச்சிருக்கேன். இப்படி நாங்க நண்பர்களானோம்.

அப்ப நான் ஒரு சின்ன கார் வாங்கி இருந்தேன். நானே தான் டிரைவிங். கச்சேரிக்காக எங்க வெளியில போனாலும் பாரதிராஜா என் கூடவே இருப்பான். நிறைய கதைகள் சொல்லுவான். எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்டு திங்கிங்கா இருக்கும். அவனோட 16 வயதினிலே கதையை நானும் அவனுமே சேர்ந்து தயாரிக்கிறதா முடிவு பண்ணினோம். அப்ப எந்த மொழிப் படமா இருந்தாலும் பெங்களூர்ல ஷூட்டிங் நடத்துனா மானியம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுக்காக பெங்களூர்ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வேலை பார்த்தோம். ஆனா ஆரம்பகட்ட ஷூட்டிங் நடத்தக்கூட எங்களால காசு புரட்ட முடியல. அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் அவனுக்கு சான்ஸ் கிடைச்சது.

இதுக்கு இடையில நான் நிறைய மேடை கச்சேரிகள்ல பாடிகிட்டு இருந்தேன். அனிருத்தா என்கிறவர் தான் எங்க டீம் லீடர். அவர் தான் முதல் முதலா எனக்கு மேடையில பாடுற வாய்ப்பு தந்தவர். அவர் ஒரு ஹார்மோனியம் ப்ளேயர். கார்பரேஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார்.

எங்க வீட்டுல நாங்க ஒருநாள் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப ‘நாங்க பாராதிராஜா ஊர்காரங்க. அண்ணன் தான் உங்கள பார்த்துட்டு வர சொல்லி அனுப்பினாருனு மூணு பசங்க வந்தாங்க. ‘யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பீங்க’னு கேட்டதும், ‘தம்பி ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பான்’ என்றார் பாஸ்கர். எங்க வாசிப்பானு சொன்னேன்.

ரெண்டு கையிலயும் பெல்லோஸ் போட்டு ரெண்டு கையாலயும், டாக்டர் ஷிவாகோ படத்துல வர்ற லாராஸ் மெலடி தீம் வாசிச்சான்... அசந்துட்டேன் நான். ‘எங்க மியூசிக் படிச்சீங்க’னு கேட்டேன். ‘எங்கயும் படிக்கல’ என்றார். ‘அப்புறம் எப்படி வெஸ்டர்ன் வாசிக்கிறீங்க’னு கேட்டதும், ‘என்னை அறியாமயே வாசிக்கிறேன் சார். எனக்கு மியூசிக் தெரியாது’ என்றார். அடடா இந்த பையனை விட்டுடக் கூடாதுனு மனசு அடிச்சுகிட்டது. ஆனா ஹார்மோனியத்துக்கு ஏற்கெனவே அனிருத்தா இருக்காரேனு சொன்னதும், ‘நான் கிடார் கூட வாசிப்பேன்’ என்றார். அதிலிருந்து எங்கள் குழுவின் கிடார் ப்ளேயர் ஆனார் ராஜா.

அதன்பிறகு அனிருத்தா வேலை காரணமாக எல்லா கச்சேரிக்கும் வரமுடியாமல் போனதால் ராஜா ஹார்மோனிய ப்ளேயர் ஆனார். அமர் சிங் என்ற கங்கை அமரன் கிடாரிலும், பாஸ்கர் ட்ரிபிள் காங்கோவிலும் அமர்ந்தனர். குழு பெயரை ‘பாவலர் சகோதரர்கள்’னு வச்சோம். ஆயிரக்கணக்கான கச்சேரிகள் பண்ணோம்.

அதுக்கு அப்புறம் தான் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிடாரிஸ்டா சேர்ந்தார். அப்ப ராஜா கம்போஸ் பண்ணின நிறைய பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் பேரில் வந்தது. அப்பவே ரொம்ப டிசிப்ளினா இருப்பார். அந்த நோட் சரியா வாசிக்கலனு ரிக்கார்டிங்ல யாராவது சொன்னா, ‘திரும்ப போட்டு கேளுங்க. நான் சரியா தான் வாசிச்சிருக்கேன்’னு போல்டா பேசுவார். அவர் இசை மேல அவருக்கு அப்படியொரு நம்பிக்கை எப்போதுமே உண்டு. அவருடைய attitude அப்படி. இப்போது கூட ராஜாவை சில நேரங்களில் தவறாக சிலர் நினைப்பதற்கு அந்த attitude தான் காரணம்.


ராஜாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்?


ரொம்ப பிடிச்சது அவனோட முயற்சி, டெடிகேஷன், டிசிப்ளின். புயலே அடிச்சாலும் ரிக்கார்டிங்குக்கு அவன் லேட்டா வந்தது இல்ல.

பிடிக்காதது... அவனை சுத்தி ஒரு சின்ன வட்டம் போட்டுகிட்டு அதுக்குள்ளயே இருந்துட்டான். யாரையுமே கிட்ட நெருங்கவிட்டது இல்ல. அதுக்கு என்ன காரணம்னு அவனுக்கு தான் தெரியும். நாங்க ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தோம். எத்தனை அழகான நாட்கள் அவை. அப்பகூட அவன் ரொம்ப டிசிப்ளினா தான் இருப்பான். மேடையில நான் ஒரு ராங் நோட் பாடிட்டாகூட ‘என்னய்யா நீ... அந்த காந்தாரம் ஸ்ருதி சேராம பாடிட்டியே’னு கோவிச்சுப்பான். தொழில் ரீதியா இது.

பர்சனலா பார்த்திங்கன்னா நானும் பாரதிராஜாவும் தான் இன்னுமே அவனை வாடா போடானு பேசுற ஃப்ரெண்ட்ஸ். அதுவும் நாங்க அவன் கூட தனியா இருக்கும்போது ரொம்ப ஜாலியா ஜோவியலா பேசுவான். மேடைனு வந்துட்டா அவன் வேற.

எனக்கு என்ன தோணும்னா இவன் கலகலப்பான வாழ்க்கையை மிஸ் பண்றானேனு தோணும். நிறைய பேரை சந்திச்சு, கருத்துக்களை பரிமாறிகிட்டு இன்னும் மகிழ்ச்சியா இவன் இருக்கலாமே. சன்னியாசி மாதிரி எல்லாரையும் விட்டு தூரமா இருக்கானேனு தோணும். அது அவனைப் பொறுத்தவரை கரெக்டா இருக்கலாம். ஆனா ஒரு ஃப்ரெண்டா எனக்கு அப்படி தோணும்.


பாடகர், நடிகர், இசையமைப்பாளர்.. இதில் முழு திருப்தி தந்தது எது?


சார்... நான் ஒரு பாடகராக வரவில்லை என்றால் இது எதுவுமே நடந்திருக்காது. என்னோட ஸ்பெஷல் குவாலிட்டியா எல்லோரும் சொல்றது ஐம் எ வெரி குட் எக்ஸ்பிரசிவ் சிங்கர். அதனால இயல்பாவே எனக்குள்ள ஒரு நடிகன் எப்பவும் இருக்கான். ரிக்கார்டிங்ல பாடும்போது நான் மைக் முன்னால எப்பவுமே நடிக்கத் தான் செய்வேன்.


உங்களுக்குள் இருந்த நடிகனை முதலில் எப்படிக் கண்டுகொண்டார் கே.பாலசந்தர்?


நான் என்னோட ஆந்திரா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து மேடையிலே ஒரு 20 நிமிஷ மைம் செஞ்சேன். அதை பார்த்த கே.பி. சாருக்கு ஒரே ஆச்சர்யம். டேய்... பெரிய நடிகன்டா நீ. உனக்கொரு கேரக்டர் கொடுக்கணுமேனு சொல்லிகிட்டே இருந்தார். அதன் விளைவா கிடைச்சது தான் ‘மனதில் உறுதி வேண்டும்’ டாக்டர் கேரக்டர்.

அந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் எங்கப்பா இறந்துவிட்டார். நான் முறைப்படி மொட்டை அடிச்சு அப்பாவுக்கு எல்லா சடங்குகளும் செஞ்சேன். 15 நாட்கள் கழிச்சு தான் என்னால வீட்டைவிட்டே வெளியில வரமுடியும்ங்கிற நிலை. ஆனா சத்யா ஸ்டூடியோவுல ஆஸ்பிட்டல் செட் போட்டு ரெடியா இருந்தார் கே.பி. சார். அப்ப சுஹாசினி ரொம்ப பிசியான ஆர்ட்டிஸ்ட். அவங்க டேட்ஸ் வேற வாங்கி வச்சிருந்தார். ‘என்னால இந்தப் படம் பண்ண முடியுமானு தெரியல சார்’னு அவருக்கு போன் செஞ்சு சொன்னேன். எனக்காக எல்லா டேட்ஸையும் மாத்தி 15 நாட்கள் காத்திருந்தார் பாலசந்தர் சார். அந்த படத்துல பார்த்திங்கனா கூட மொட்டை அடிச்சு லேசா வளர்ந்த முடியோட தான் இருப்பேன். அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 65 படம் நடிச்சிட்டேன்.


டைரக்ஷன் பக்கம் இன்னும் வரலியே?


ஆசை இருக்கு. ஒரு படமாவது டைரக்ட் பண்ணிடனும். ஆனா அதுக்கு முன்னால யாருகிட்டயாவது ஒரு படமாவது அசிஸ்டென்ட்டா வேலை பார்த்து சினிமாவை முழுசா கத்துக்கணும். நான் ஒரு இன்டிபென்டன்ட் டைரக்டரா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துகிட்டு டைரக்டர் ஆகணும். நிச்சயமா டைரக்ட் பண்ணுவேன்.


எத்தனையோ பேருக்கு பாடி இருக்கீங்க. யாருக்கு உங்க குரல் அப்படியே பொருந்திப் போனதா நினைக்கிறீங்க?


ஒரு குரல் யாருக்குமே 100 சதவீதம் பொருந்திப் போகாது. நிச்சயமா இருக்கவே இருக்காது. முதல்லயே பாட்டு ரெக்கார்ட் பண்ணிடறோம். அதுக்கு ரொம்ப அழகா அவங்க நடிக்கும்போது எனக்கும் பேர் கிடைக்குது, அவங்களுக்கும் பேர் கிடைக்குது. அதே சமயத்துல நல்ல பாட்டை கெடுத்த நடிகர்களும் இருக்காங்க. ரிக்கார்டிங்ல உயிரை கொடுத்து பாடியிருப்போம். ஸ்கிரீன்ல அது வரலைனா எல்லாமே வேஸ்ட். ஆடியோவுல கேட்டு தான் சந்தோஷப்படணும்.

காமெடியன்சுக்கு பாடும்போது மட்டும் தான் குரலை மாத்தி ட்ரை பண்ணுவேன். எம்.ஆர்.ராதா அண்ணனுக்கு பாடியிருக்கேன், சுருளிராஜனுக்கு, தேங்காய் சீனிவாசனுக்கு பாடி இருக்கேன். அப்ப மட்டும் தான் லேசான மாற்றம் செய்துப்பேன். மத்தபடி வேற யாருக்குமே குரலை மாற்றிக் கொண்டது இல்லை.


ஏர்.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை எப்படி இருக்கிறது இன்றைய இசை?


இன்றைய தலைமுறையிடம் திறமைக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா அவங்க தங்கள் மனசை டெக்னாலஜி மேல வைக்கிற அளவுக்கு இசை மீது வைக்கிறது இல்ல. அந்த பாடலில் அதன் ஆத்மா வெளிப்படுவதில்லை. அதனால் தான் அந்த காலத்து பாட்டு மாதிரி இல்லனு நிறைய பேர் சொல்றதை இன்றும் கேட்க முடியுது.

ஒரு படத்துக்காக கம்போஸ் செய்யப்படுகிற பாடல் சார்ட் பஸ்டரில் இருந்தால் போதும்னு நினைக்குறாங்க. அது நீண்ட நாட்கள் நிலைச்சு நிக்குமானு யோசிக்கிறதில்ல.

அதுக்கு மியுசீஷியன்ஸை மட்டும் குறை சொல்லவும் முடியாது. பாலசந்தர், கே.விஸ்வநாத், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாடலை மிஸ் பண்ணினா கதையில் ஒரு லிங்கை தவறவிட்டுவிடுவோம். அந்த அளவுக்கு அது படத்துடன் கலந்து இருக்கும். அந்த அளவுக்கு சேலஞ்சிங்கான சிச்சுவேஷன்கள் கொடுப்பாங்க. இன்றைக்கு அப்படிப்பட்ட பாடல்கள் அதிகம் வருவதில்லை. சாங் ஃபார் த சேக் ஆஃப் சாங். அந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தாலும் பரவாயில்லை. இல்லையென்றாலும் ஒன்றும் தவறில்லை என்பது போன்ற சிச்சுவேஷன்கள் தான் அமைக்கப்படுகின்றன. அது தான் பிரச்னையே. திறமையான பாடகர்கள், மியுசீஷியன்கள் இருந்தும் நல்ல பாடல்கள் இன்றைக்கு அரிதாகத் தான் அமைகிறது.


இன்றைய இளம் தலைமுறையின் கம்போசிஷன்களில் பாடுவதற்கு முன் அவர்களை எப்படி கணிக்கிறீர்கள்?


முதலில் பாட்டை எனக்கு அனுப்ப சொல்லிடுவேன். அது அவர்களின் தகுதியை எடை போடுவதற்காக இல்லை. அந்த பாட்டை என்னால பாட முடியுமா முடியாதானு என்னை நானே எடை போட்டுக்க அப்படி சொல்லுவேன். சிலது ஸ்ருதி ரொம்ப ஜாஸ்தி வச்சிருப்பாங்க. என்னால் அந்த உயரத்தை தொட முடியாமல் போகலாம். சில பாடல்களில் இந்த வயசுல நான் பாடக்கூடாத வரிகள் இருக்கும். சிலது சின்னப் பசங்க பாடினா தான் நல்லா இருக்கும், என் குரலுக்கு செட் ஆகாது. இதையெல்லாம் ஜட்ஜ் பண்ண தான் முன்னாடியே பாட்டை அனுப்ப சொல்லி கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்றேன். ஒரு நல்ல விஷயம் என்னன்னா... இன்னைக்கும் தினமும் ஒரு பாட்டாவது ரிக்கார்ட் பண்ணிடறேன். அது போதும்.


இசையமைப்பாளராக தொடராததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?


அதெல்லாம் ஒன்ணும் இல்ல சார். யாரும் சான்ஸ் கொடுக்கல அவ்வளவு தான். இப்பக்கூட நிறைய பேர் ஏன் சார் பாடுறதை குறைச்சுட்டீங்கனு கேட்குறாங்க. நான் எங்க கம்மி பண்ணேன். யாரும் கூப்பிடறதில்ல. நிறைய திறமையான யங்ஸ்டர்ஸ் பாட வந்துட்டாங்க. நேச்சுரலா வாய்ப்பு குறையத்தான் செய்யும். ஒருகாலத்துல நான் வந்தேன்ல. அப்படித்தான். நெக்ஸ்ட் ஜென்ரேஷனுக்கு ஹேப்பியா வழிவிடணும்.

ஆனா மியூசிக் டைரக்ஷன் ஏன் குறைஞ்சதுன்னு எனக்கு ஐடியாவே இல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம் சேர்த்து 70 படங்களுக்கு மேல இசையமைச்சுட்டேன். எந்த படத்துலயும் எனக்கு திருப்தி இல்லாத வேலையை செய்யவே இல்ல. சிகரம் முடிச்சதும் அழகன் பண்ண சொன்னார் கே.பி. சார். ஒரே சிட்டிங், 15 நாள்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணி வேணும்னு கேட்டார். என்னால முடியாதுன்னு சொல்லி நானே அறிமுகப்படுத்தி வச்சது தான் மரகதமணி. என்னைவிட திறமையானவர்கள் இருந்ததால எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராம போயிருக்கலாம்னு நினைக்கிறேன்.


பல வருடங்களாக புகைப் பிடிச்சுகிட்டு இருந்த நீங்க ஒரு கட்டத்துல அதை நிறுத்தினீங்க. ஒரு பாடகரா அந்தப் பழக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?


காலேஜ் படிக்கும்போது ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் சிங்கர் ஆகி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போது, இந்தப் பழக்கத்தை நிறுத்திடணும்னு பல முறை யோசிச்சிருக்கேன். ஆன அந்தப் பழக்கத்தை விட முடியாம 30 வருடங்கள் தவிச்சேன். கடைசியில என் பொண்ணு தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வச்சா. ஒரு நாள் எனக்கு ஏதாவது பிராமிஸ் பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டாள். என்ன வேணும்டானு கேட்டேன். நாளையில இருந்து சிகரெட் பிடிக்கக் கூடாது என்றாள். சரிடானு கையில் அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். அவ்வளவு தான். அன்னியோட அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.

நிறைய பாடகர்கள் குரலை பாதுகாப்பதற்காக ஜில்லுனு எதுவும் சாப்பிடாம, புளிப்பு சாப்பிடாம அப்படியே குரலை கடைசி வரை பாதுகாப்பாங்க. என்னைப் பொறுத்தவரை ஜில்லுனு சாப்பிடறதுக்கும் வோக்கல் கார்ட்சுக்கும் சம்மந்தமே இல்ல. முகமது ரஃபி, கச்சேரிக்கு நடுவுலயே அரைகிளாஸ் ஐஸ்கட்டி போட்டு கூல் டிரிங்ஸ் குடிப்பதை பழக்கமாவே கொண்டிருந்தவர். பாலமுரளி சாருக்கு ஐஸ் வாட்டர் இல்லாம இருக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் குரலை பாதிப்பவைகள் புகை, குறைவான தூக்கம், தூசி இவைகள் தான்.

ஒரு சிங்கர் புகைப்பதும், குடிப்பதும் தவறு. நீங்க செஞ்சீங்களேன்னா... நான் செஞ்சேன் தான். அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும்? என் வாழ்க்கையை திரும்ப ரீவைண்ட் பண்ணி வாழ முடியுமா? நான் தப்பு பண்ணிட்டேன், அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க.


50 ஆண்டு கால இசைப் பயணம் கற்றுக் கொடுத்தது என்ன?


இன்னும் கற்றுக்கிட்டே இருக்கேன். இந்த 50 வருடங்களில் நேர்த்தியை நெருங்கி வந்திருக்கிறேனே தவிர. இன்னும் நேர்த்தியை தொட்டுவிடவில்லை. செய்கிற கலையில் குறைவான தவறுகளை செய்பவன் தான் உலகிலேயே மிச்சிறந்த கலைஞன்.

எனக்கு இருக்குற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். இந்த 70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே.

இந்த 50 வருடங்களில் தன்னிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். நிறைய பணம் சம்பாதிச்சேன். நிறையவே இழந்தேன். இந்த 50 வருட இசை வாழ்க்கையில் 48வது வருடம் தான் கடனில் இருந்தே வெளியே வந்தேன். தினமும் 5 பாட்டு பாடிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது வீட்டுல சேட்டு காத்துகிட்டு இருப்பான். ஒரு நாள் கூட இன்னிக்கு பணம் இல்ல நாளைக்கு வா என்று சொல்லக்கூடிய நிலைமையை கடவுள் எனக்கு கொடுக்கல. ஐஸ்வர்யம் என்பது பணத்தால வராது. கடன் இல்லாத வாழ்க்கை வாழுறவன் தான் உண்மையான பணக்காரன்.

என் இசையை கேட்டு என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும். அதிலும் நான் எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள். அது போதும்.


- அருண் சுவாமிநாதன்

படங்கள்: சித்ராமணி


.

.

Sunday, 17 May 2020

RAJINIKANTH , ALWAYS TRUE HIMSELF IN HEART - NO CHANGE -NO FRAUD




RAJINIKANTH , ALWAYS TRUE HIMSELF  IN HEART - NO CHANGE -NO FRAUD 
AFTER 5 YEARS BACK


ரஜினி - மாறாதவர் இருவது வருசத்துக்கு பிறகும் #ரஜினிரஜினிதான்

1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...

1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை

என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.


2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்

இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இநதியா பேசப்படுகிற அளவுக்கு கொண்ர்ந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.

3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்.

மூன்று பேர். ஞானி, குழந்தை. பைத்தியக்காரன். ஞாநி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.

4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்.

நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.

5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்

என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்,

6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை

கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.

7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்

உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.

8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்

இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!

9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா

பாருங்க... நான் அங்க் சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநல்ம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு செர்ல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாததை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்

அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.

11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை.

சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.

12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை

இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள். (தாமஸ், திருவனந்தபுரம்)

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழுங்கிய ரெபெல் பொயட் பாரதியார்

பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி

உண்மையான படிக்காத மேதை காமராஜர்

மாபெரும் தலைவர் அண்ணா

எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? (வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி)

(சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? (சரவணன், திருச்சி)

ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? (பி. சாந்தா, மதுரை)

தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போடாமல் எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள முடிகிறது? ( கஜேந்திரன், பொள்ளாச்சி)

கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் உறக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கு மேல் ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்பு.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? (ஆன்ந்த், கடலுர்)

சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? (செல்வம், திண்டிவனம்)

வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? (வேதவல்லி, திருவல்லிக்கேணி)

அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா? (பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்)

செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி (ராம் மணி, ராஜபாளையம்)

காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? (சி. தெ. ரஜினி அருள், மணக்காடு)

இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்? (கே. தேவி, பூநகரம்)

எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்? (என். சுப்ரமணியன், கல்கத்தா)

என்னை நான் நாடிச் செல்கிறேன்.

26. ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்? (ஆர். கவுஸ், நாகூர்)

பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை.

27. தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே.. அதை கட்டுப்படுத்துவது எப்படி? (ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை)

இந்தக்கேள்வியை நிறையப் பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை டிரை பண்றாங்க. அது கட்டுப்படுத்த முடியாது. அதற்கப்புறம் கட்டுப்படுத்த முடியாமல் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துடுது. அது தேவையேயில்லை. அதைப்பற்றி கவலைப்படாதீங்க. காலையில் எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அங்கு உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் நீங்க பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டும். எது பின்னால போகட்டும். யாரு பின்னால போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க.அப்புறம் எழுந்திடுங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அப்படியே வந்து மனசு உங்க கண்ட்ரோல்ல வரும். அப்ப வந்து உங்க இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பற்றி கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும். இது எப்படின்னு சொன்னா, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதான் புதுசா போட முடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அது வந்து இயற்கை. அதைப்பற்றி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க.

28. ஒரு பத்திரிக்கையிலும் டிவியிலும் உங்களைப் பற்றி ஒரு நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளாரே.. அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க... ரத்தம் கொதிக்குது தலைவா! (லக்மான் கஜினி, திருச்சி)

கண்ணா... இது ஜனநாயக நாடு. அவுங்கவுங் கருத்தைச் சொல்ல எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு. பைதபை நான் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

29. பாம்பு என்றால் படையும் நடுங்கும். நீங்க எப்படி பாம்பு கூட நடிக்கிறீங்க? (மூர்த்தி, சமயபுரம்)

உண்மையில பாம்புன்னா எனக்கு ரொம்ப பயங்க. என்ன பண்றது படத்தில பார்த்தீங்கன்னா பாம்பை கையில பிடிச்சிக்கிறது, உடம்பு மேல போட்டுக்கிறது. இந்த மாதிரியே வருது. நான் கூட வாங்குற பணத்தை நினைச்சுக்கிட்டு செஞ்சுடறது.

30. உங்களுடைய ரசிகர்களில் நிறைய குழந்தைகளும் இருக்காங்க். அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க? (சரோஜா, அரக்கோணம்)

குழந்தைங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. டி.வி பார்க்கிறதை கொஞ்சம் கம்பி பண்ணிக்கோங்க. நிறைய விளையாடுங்க. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்.

31. ஆரம்பகால ரஜினி முன்கோபக்காரர், இப்போதைய ரஜினி? (ரஜினி முருகன், திருச்செந்துர்)

ஒரே ரஜினி, அதே ரஜினிதான்.

32. சமீபத்தில் நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை கூறுங்கள் (ஜி. வாசுதேவன், கோவை)

பாட்ஷா வெற்றி விழா பங்க்ஷனுங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத நிகழ்ச்சிங்க.

33. உன் பிறந்தநாளன்று மிகவும் பவர் உள்ள வெடிகுண்டு வைத்து உன்னை கொல்லப் போகிறேன். சின்னப்பயலான உன்னைக் கொல்ல எனக்கே மனசு கஷ்டமாக இருந்தாலும் உன் தொல்லை தாங்கமுடியவில்லை. (மொட்டைக்கடிதம்)

உங்க மனசாட்சியை கேட்டுப்பாருங்க. நீங்க கும்பிடற ஆண்டவனை கேட்டுப்பாருங்க. ரெண்டுபேருமே சரின்னு சொன்னா கோ அஹெட். என்னிக்கோ ஒரு நாளைக்குப் போக வேண்டியதுதானே. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்.

34. பல அரசியல் கட்சியை சேர்ந்தவங்க உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்து ? (ரஜினி கார்த்திக், திருவாரூர்)

உண்மைதான். இப்ப நடக்கிற அரசியல் எனக்குத் தெரியாது. இவங்க நடத்துற அரசியல் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அரசியல் எல்லாம், அரசியல் என்பது பொதுநலம். சுயநலவாதிங்க பொதுநலத்திற்கு வரக்கூடாது. சுயநினைப்பு உள்ளவங்கள பொதுநலத்திற்கு இழுக்கக்கூடாது. ஏழையை ஏழையா இருக்கவிடக்கூடாது. சிலர் வாழ பலரை தாழ விடக்கூடாது.

35. வெடிகுண்டு தமிழ்நாட்டுல வெடிக்கிறது மட்டும்தான் உங்க காதுல கேட்குதா? பிற மாநிலங்கள்ல வெடிக்கிறது உங்க காதுல கேட்கலையா? அதுக்கு குரல் கொடுக்காத நீங்க இதுக்கு மட்டும் குரல் கொடுக்க என்ன காரணம்? (தமிழ் மணி, கரூர்)

முதல்ல நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அதுக்கப்புறம் வேற வீட்டை பார்ப்போம்.

36. உங்களுக்கும் பிரதமருககும் நடந்த சந்திப்பு பற்றி (ரமணி, அண்ணாநகர்)

அதுபற்றி இப்ப எதுவும் சொல்ல விரும்பலை. That's not a coutesy one. It has some significance. நேரம் வரும்போது நானே சொல்றேன்.

37. தலைவா, நீங்க ஏதோ அரசியல் கட்சில சேர்ற மாதிரி பேச்சு அடிபடுதே.. இது எல்லாம் என்ன தலைவரே? ( சதாசிவம், டால்மியாபுரம்)

கண்ணா, நான் எந்தக் கட்சியிலேயும் சேரலை. சேரவும் மாட்டேன். கவலையே படாதீங்க. அப்படியே வந்தா தனிக்கட்சிதான்.

38. இலங்கையில் நடக்கும் சம்பவம் பற்றி ( வீரபத்திரன், பட்டுக்கேர்ட்டை)

இதுக்கு உடனடியா ஒரு முற்றுப்புள்ளி வெச்சுத்தான் ஆகணும். அப்பாவி மக்கள் சாகறதை பற்றி நான் ரொம்ப வேதனைப்படறேன். கடுமையாக கண்டிக்கிறேன்

Friday, 8 May 2020

KAMALAHASAN LIFE IS ALSO ACTING OR TRUE




KAMALAHASAN  LIFE IS ALSO ACTING OR TRUE



நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார்.

கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?
 தகவல் தங்கையா.

Sunday, 19 January 2020

JALLIKATTU ,A TRUE WARRIOR IN MADURAI DISTRICT


JALLIKATTU ,A TRUE WARRIOR 
IN MADURAI DISTRICT




மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. 

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். 

கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். 

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். 

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். 

அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. 

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். 

சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். 

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். 
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. 

நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்... ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்... 🌼🌼🌼

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர வரலாறு 





திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு வீரருக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்

திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது. இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது. அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப் பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும், அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர். இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால் விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப் பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.

ரசிகர் பட்டாளம்

இன்றைய அலங்காநல்லூரை போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது. இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப் பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார். இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது. அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்பதற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது. இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.

பெண் பரிசு


இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர். அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர். மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

குடல் சரிந்தது

இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது. ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது. இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்து விட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக் கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.

கொல்ல முடிவு

தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.

உயிர் நீத்த வீரர்

இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப் பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும், அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரிய வந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.

தோழனுக்கும் சிலை

இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்.




மதுரை மண்ணில் களம் கண்ட காளைகளை சினம் கொண்டு அடக்கிய வேங்கை அழகுதேவனுக்கு அமைந்த திருக்கோவில்!
18 January 2020, 1:03 pm

Quick Share
தமிழர் திருநாளான தை 1 பிறந்ததில் இருந்தே, மண்ணின் மாண்பை போற்றும்வகையில் ஏருழுவும் காளைகளுக்கு நடத்தும் வழிபாடும், பார் போற்றும் வீரம் கொண்ட ஜல்லிக்கட்டும் தமிழரின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டே தான் இருக்கிறது. சாதியால், மதத்தால் தமிழன் பிளவுற்று இருந்தாலும் எமது பண்பாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழன் கரம் கோர்த்து தனது பாரம்பரியத்தை மீட்டும் தம் இனத்தின் போர் குணத்தை உலகிற்கு அறிவித்தான்.

Jalli- updatenews360
இன்று பாரே போற்றும் இந்த வீர விளையாட்டை ஒரு காலத்தில் தனது பொழுதுபோக்காக கொண்டு, இவர் அடக்காத காளைகள் இல்லை என பேர் வாங்கியவர் தான் மதுரை மண்ணின் மைந்தர் ” அழகுதேவன் ”. 300 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்காக வண்டல்மண் வளம் நிறைந்த பகுதி நோக்கி கருத்தமாயன் என்பவரும் அவரது உறவினர்களும் இடம் பெயர்ந்தனர். அந்த பகுதியின் பெயர் தான் சொரிக்காம்பட்டி. அந்த ஊரின் மூத்த தலைகாட்டாக நின்று அந்த ஊரை நிர்வகித்த கருத்தமாயனுக்குக்கு 4 மகன்கள். அதில் ஒருவர் தான் அழகுதேவன். ஏறுழுது களைப்படைந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு உற்சாகத்தை அளிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அப்படி அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் அழகுதேவன் கைதேர்ந்தவர். சீறிவரும் காளையின் வேகத்தையும், அதன் அசைவுகளையும் கணித்து அதனை அடக்குவதில் அழகுதேவன் கைதேர்ந்த வந்தார். அவருக்கு அவரது நண்பரான சமயன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆதரவு அளித்து வந்தார். பிற்காலத்தில் சமயனும் அழகுதேவனுடன் இணைந்து மாடுகளை பிடிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் கைதேர்ந்த மாடுபிடி வீரர்களாக வந்தனர். அந்த ஊரில் அழகுதேவன் அடக்காத காளைகளே இல்லை என்ற அளவுக்கு நிலை மாறியது. பிற்காலத்தில் மதுரை மண்ணில் நடந்த அணைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட அழகுதேவன், யாருக்கும் அடங்காத இந்த காளையை அடக்கி பாருங்கப்பா என சவால் விடுக்கப்படும் காளைகளை தனது வீரத்தாலும், ஜல்லிக்கட்டில் அவர் கற்றுத்தேர்ந்த நுண்ணறிவாலும் எப்பேர்ப்பட்ட காளையாக இருந்தாலும் அடக்கிவிடுவார்.

இப்படிப்பட்ட மாவீரரனுக்கு மதுரை மண்ணில் சொரிக்காம்பட்டியில் கோவில் அமைந்துள்ளது. முன்னோரை வழிபடுதை வழிபாடாக கொண்ட தமிழினம், அழகுதேவனும் இன்று காளைகளை அடக்கும் காளையர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார். இவர் வாழ்ந்த சொரிக்காம்பட்டி மண்ணில் தான் இவரது திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வரை ஒவ்வொரு மாடுபிடி வீரனும் இவரது கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

காலம் பல கடந்தாலும், சுழலும் பூமி பந்து ராட்சத வேகத்தில் சுழன்றாலும், பொழியும் மாரி கடலென பெய்தாலும், தமிழனின் வீரத்தையோ, அவன் வரலாற்றையோ எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது என்பதற்கு தமிழன் அவனின் முன்னோரை இறைவனாகவும், முன்னோர் அளித்த வரலாற்றை இறையாகவும் வழிபடுவதே காரணம். 300 அல்ல 3000 ஆண்டுகள் ஆயினும், அழகுதேவன் வீரத்தின் குறியீடாக மதுரை மண்ணில் நிலைத்து நிற்பார்.

Monday, 18 June 2018

VANCHINATHAN SHOT COLLECTOR ASH DEAD ON JUNE 17,1911- TWO TRUE STORIES




VANCHINATHAN SHOT COLLECTOR ASH 
DEAD ON JUNE 17,1911
சொல்ல மறந்த கதை - 
அல்லது மறைக்கப்பட்ட உண்மை

வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.

தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஆனால் இது காரணம் அல்ல .ஆஸ் துரை தலித்துகளுக்காக போராடினார் .நன்மைகள் செய்தார் .அதுவே பிராமணர்களின் கோபத்திற்கு காரணம் என்று 
சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை .வாஞ்சி -ஆஸ் கொலைவழக்கில் குற்றவாளிகள் பெரும்பாலும் பிராமணர்கள் தான் -பாரதியார் உட்பட

இன்று ! ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள்
17.06.1911. வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது -

''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்.''என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன்
வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.

அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார்.

ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்ட வர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஆஷ் துரை,ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்

" மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள
கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்"
எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.

ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க ,அவங்க ஊருக்குள்ளேயே ரக்கூடாதுங்க
அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்
துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரை யொட்டியை பணித்தார் துரை.

ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டி யொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியான வனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.

அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான்சென்றாகவேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்.

வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின்
மனைவியும்தான் என்று விபரம் சொன்ன
பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.குதிரை யோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்

"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த
அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்த ார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார்.

மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.

ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.

அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலை செய்ய தூண்டியது.சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட
வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.

இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official
Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில்
தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது

மணியாச்சி சந்திப்பில் 

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.
ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.
போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.
கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், ‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான்.

ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன்.

பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தது.
காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்

பின்வருமாறு.
நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர்.

(அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) – விவசாயம் செய்துவந்தார்.

மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்துவந்தார்.

சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.

ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்

ஹரிஹர ஐயர் – வியாபாரி
பாபு பிள்ளை – விவசாயி
தேசிகாச்சாரி – வியாபாரி

வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
அழகப்பா பிள்ளை – விவசாயம்
வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்

பிச்சுமணி ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :
1) வி.வி.எஸ். ஐயர்
திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர்.

இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தி யதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.

2) சுப்பரமணிய பாரதி

பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

மற்ற மூவர், 3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.

ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம்.

பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.
ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.

புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்க ப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும்.

ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர். பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை.

ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்க ளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

வாழ்க வாஞ்சிநாதன்

தமிழகத்தில் புரட்சி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வாஞ்சிநாதனின் வீரம்தான் . பகத்சிங்,உத்தம்சிங் இணையாக வைத்துப் போற்றத் தகுந்த அவர் பலி தானமானமான் நாள் 17 ஜூன்.
1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.

தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.
ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்குஎதிராக களமிறங்கினார் வாஞ்சி.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.

இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று,

வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.

தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தா ருடன்கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.

வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.
இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார்.

வாஞ்சி தன் சட்டையில் வைத்திருந்த சாசனத்தில் உள்ளது இது தான்.

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திர த்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,

கேவலம்கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்.

வாஞ்சிநாதனின் நினைவாக அவர் பலியாகிய மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டப்பட்டு உள்ளது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.



1911 ஜூன் 17ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத் தில் வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரை யை சுட்டுக்கொன்றார். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள்.

வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின் பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில் திரு நாள் மகா ராஜா கல்லூரியில் படித்து முடித்தார்

கல் லூரியில் படிக்கும் காலத் திலேயே பொன்னம் மாளை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு புனலூர் காட்டிலாகாவில் அர சாங்க வேலை பார்த்தார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளியில் படிக்கும் போதே இவரை வாஞ்சி என்றே பலராலும் அழைக்க‍ப்பட்டார். பின்னாளில் இது வே இவரது பெயராகவே மாறியது.

ந‌மது பாரத தேசம், ஆங்கிலேயே அரசா ங்கத்திடம் அடிமைப்பட்டுக் கொண்டிரு ந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார். அச்சமயத்தில் நாடெங்கும் நடத்தப் பட்ட சுதந்திரப் போராட்டம், உச்ச கட்ட த்தில் இருந்தபோது கப்ப‍ல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பி ரமணிய சிவா ஆகியோர் மேடையில் முழங்கிய வீர முழக்க‍த்தினை கேட்டு, கேட்டு தன்னையும் அந்த விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல் பட்டார்.

இதன்மூலம் மேலும் பல சுதந் திரப் போராளிகளின் நட்பும் அவருக்கு கிடைத்தது. ஆங்கிலேயர் களின் கொடுங்கோல் ஆட்சிமுறையை இன்னும் வீறு கொண்டு எதிர் த்து வந்த‌ வாஞ்சிநாதன், தான் செய்து வந்த அரசு வேலையைக்கூட உதறிவிட்டு முழு நேர சுதந்திரப்போராட்ட‍ வீரராகவே மாறினார்.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு.ஐயர், சுப்ரமணி ய பாரதியார் ஆகி யோரின் சந்திப்புகள், வாஞ்சி நாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது மேலும் புதுச்சேரியை ஆண்டுவந்த பிரான்ஸ் அரசு, சுதந்திர‌ம் வேண்டி, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற‍ போராட்ட‍ங்களுக்கு மிகு ந்த‌ பக்க பலமாக இருந்து வேண்டிய உதவிகள் செய்து வந்தது.

இதனால் வாஞ்சிநாதனுக்கு தான் ஈடு பட்டிருந்த சுதந்திர போராட்ட‍த்திற்கு மேலும் தீவிரப் படுத்துவதாக அமைந்தது .இச்சமயத்தில் வாஞ்சிநாததன் மனதில் ஒரு மாறாத வடுவை ஏற்படு த்திய சம்பவம் ஒன்று நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந் தியர்களுக்கென்றே ஒரு கப்பலை வாங்கி அதை வெற்றிகரமாக ஓட்டி, ஆங்கிலேயர்களுக்கு பெருத்த‍ நெருக் கடியை ஏற்படுத்திய திரு.வ உ. சிதம்ப ரனார் அவர்கள், மேலும் பிபின் சந்திர பால் என்ப வர் சுதந்திர போராட்ட வீரர் ஆவார்,

இவர் சுதேசி இயக்கத்தை வெ ற்றிகரமாக நடத்தியவர் என்பதால், இவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட இருந்த நேரத்தில் ஆங்கி லேய கலெக்டர் ஆஷ் துரை அதற்கு தடை விதித்த‌து, வ• உ.சி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட‍ பல சுதந்திரப் போரா ட்ட‍த் தலைவர்கள் தடையை மீறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனால் கலெக்டர் ஆஷ்துரைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத் தியதாக நினைத்து, வ.உ.சிதம்பரனாரையும், சுப்பரமணிய சிவாவை யும் கைதுசெய்து சிறையில் அடைத்தான். ஆங்கிலேய நீதிமன்றம் தேசத் துரோக குற்ற‍த்தில் இவர் ஈடுபட்ட‍தாக கூறி, இவருக்கு 40 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதித்து தீர்ப்ப‍ளித்த‍து.

வ•உ.சி. ஐயா அவர்களுக்கு நேர்ந்த இந்த கொடு மையை எதிர்த்து திருநெல்வேலி மாவட் ட‍ம் முழுவதும் கலவரம் பரவியது. அந்த கலவரத்தை ஆஷ் துரை, ஊரடங்கு உத்த ரவு அமல்பத்தப்படுத்தி இரும்புக்கரம் கொ ண்டு அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் டதில் நான்கு வீரர்கள் பலியாயினர் மேலு ம் பலர் காயமடைந்தனர். 
இதனால் வாஞ்சிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்தார்,

வீறு கொண்டு எழுந்தான். தனது தலைவனை சிறையிலஅடைத்ததன் பின்ன‍ணியில் செயல்பட்ட ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல‍ தீர்மா னித்து, அதற்கான‌ சரியான சந்தர்ப்ப‍த்தை எதிர்பார்த்திருந்தார் வாஞ் சிநாதன்!

வாஞ்சி எதிர்பார்த்த‍து போலவே 1911 ஜூன் 17ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத் தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்துடன் கொடைக்கான லுக்குச் புறப்பட இருந்த சமயம், அந்த ரயில் பெட்டிக்குள் திடீரென்று புகுந்த வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரை யை சுட்டுக்கொன்றார்.

தன்னை பிடி க்க‍ வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி , உயிரிழப்ப‍தைவிட தன்ன‍த்தானே சுட்டுக்கொன்று தனது இன்னுயிரை இந்த தேசத்திற்காக கொடுத்தார்.
அந்த வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில், உள்ள‍ ஒரு கடிதத்தில், தான் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான‌ காரண த்தையும், தன்னுடன் சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட போராளிகள் இருப்பதாக வும் அக்கடித‍த்தில் குறிப்பிட்டதோடு மட்டுமி ன்றி, ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்ற கையெழுத்தும் இருந்ததாக தகவல்கள் தெரி விக்கின்றன.

அமரர் ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்தபோ து, வாஞ்சி மரணமடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந் திப்பு என்று பெயர்சூட்டி, வாஞ்சி பிறந்த செங் கோட்டையில் வாஞ்சிக்கு ஒரு உருவச்சிலை யும் திறந்து வைத்து சிறப்பித்துள் ளார்.

வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைய தலை முறையினருக்கு நிச்சயம் உத்வேகத்தை அளித்திருக்கும் என்றே சொல்ல‍லாம்.