A HUNDRED QUESTIONS OF KANNADASAN AGAINST ANNADURAI
"கவியரசு" #கண்ணதாசன் முன்வைத்த #அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்! 1. 'மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூடுவது' என்று திராவிடக் கூட்டாட்சிக்கு இலக்கணம் அமைக்கிறீர்களே! அப்படி மொழி வழி பிரிகிற தமிழர்கள் ஒரு கூட்டமா, அல்லது ஒரு தனி இனமா? 2. தமிழர்கள் தனியான இனம் அல்ல என்றால் பிரிந்து, பிறகு கூட வேண்டிய அவசியம் என்ன? 3. ஒரு மொழியுணர்வு இன அடிப்படையாகாது என்றால், அந்த ஒரு மொழியுணர்வுக்குப் பெயர் என்ன? 4. இனத்தால் ஒன்றுபட்டவர்கள் மொழி வழி பிரிந்து நிற்கவேண்டிய அவசியம் என்ன? 5. ஓரின ஆட்சியாக, திராவிடக் கூட்டாட்சி அமையும் போது விரும்பினால் பிரிந்து போகும் உரிமை எதற்கு? 6. இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்காளாயினர் என்ற சேதி கிடைத்ததும், தமிழகத்திலே பரந்து காணப்படுகிற துயர் திராவிடத்தின் மற்றைய பகுதிகளில் காணப்படாதது ஏன்? 7. 'திராவிடத்தின்' பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றால், திராவிட விடுதலைக்குப் போராடும் கழகத்துக்கு, தமிழில் பெயர் ஏன்? 8. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைத் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டுள்ள திராவிட ஸ்தாபனத்துக்கு, ஆந்திரத்தில் எத்தனை...