CHANDRA SHEKHAR AZAD ,FREEDOM FIGHTER DIED 1931 FEBRUARY 27
CHANDRA SHEKHAR AZAD ,FREEDOM FIGHTER DIED 1931 FEBRUARY 27 சந்திரசேகர ஆசாத்.! பகத்சிங்கை "தம்பி இன்குலாப்.!"என்று அன்புடன் அழைத்தவர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு புரட்சிக்காரனை பிடிக்க முடியவில்லை என்று ஆங்கில அரசு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த புகழுக்கு சொந்தக்காரர். மாறுவேடமிடுவதில் கில்லாடி.சாண்டர்ஸனை சுட்டு விட்டு தப்பிய பகத்சிங்கை பிடிக்க முயன்ற கான்ஸ்டபிள் சனான்சிங்கை சுட்டு தள்ளி பகத்தை தப்பிக்க வைத்தவர். அலகாபாத்பூங்கா ஒன்றில் நண்பர்களை சந்திக்க காத்திருந்தவரை துரோகி ஒருவன் காட்டிக் கொடுக்க போலீஸ் சுற்றி வளைத்தது. உத்திரபிரதேச காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய ஹார்லிஸ் என்பவர் தனது ‘பணிக்கால நினைவலைகள்’ என்ற தலைப்பில் (1958 அக்டோபர் மாத ‘Men only’ ஆங்கில மாத இதழில்) ஆசாத்தை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். "ஆசாத்தின் முதல் துப்பாக்கிக் குண்டு வெள்ளைக்கார காவல்துறை கண்காணிப்பாளர் நாட்பாவர் கையைப் பதம் பார்த்தது. காவலர்கள் புதர்களில் மறைந்திருந்து ஆசாத்தை குறிபார்...