CUNCOLIM REVOLT , CHURCH FATHERS MURDERED FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25
. CUNCOLIM REVOLT , CHURCH FATHERS MURDERED FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25 குங்கோலிம் கிளர்ச்சி (Cuncolim Revolt) என்பது இந்தியாவின் கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட கிளர்ச்சியைக் குறிக்கிறது.[1] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவ குருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபை இந்நிகழ்வை குங்கோலிம் தியாகம் (Cuncolim martyrdom) என அழைக்கிறது.[2] இந்நிகழ்வில் ஐந்து இயேசு சபை மதப்பரப்புனர்களும், ஒரு ஐரோப்பியரும், 14 இந்தியக் கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்.[2] கிளர்ச்சியில் ஈடுபட்ட உள்ளூர்த் தலைவர்கள் பலரும் போர்த்துக்கீச அரசினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் துக்கிலிடப்பட்டனர்.[3] 1510 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் கோவாவைக் கைப்பற்றிய பின்னர் அவ்வரசுக்கெதிராக உள்ளூர் மக்களால் நடத்தப்பட்ட முதலாவது எத...