Posts

Showing posts with the label கருணாநிதி

கருணாநிதி திமுக நடத்திய தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஒரு சாவு மணி 2006 OCTOBER 13

Image
கருணாநிதி திமுக நடத்திய  தமிழக உள்ளாட்சித் தேர்தல்  ஒரு சாவு மணி    2006 OCTOBER 13 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பாய் சூழ்ந்திருக்க  திமுக ரவுடிகள் பொது மக்களை அடித்து விரட்டி விட்டு  கள்ள ஒட்டு போட்ட திருநாள் 2006 அக்டோபர் 13 தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த சமயத்தில் . இம்முறையும் வன்முறை, கள்ள வாக்கு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றல், காவல்துறை உதவியுடன் ஆளுங்கட்சி அராஜகம் ஆகியன நடந்தேறியுள்ளன. முறையான உள்ளாட்சித் தேர்தல்கள்மூலம் மட்டுமே நாளடைவில் சரியான குடியாட்சி நாட்டில் நடைபெறும் என்றால் அது இன்னமும் 20-30 வருடங்களில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. சிறிது சிறிதாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்கு நிறைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தக்கூடியவர்கள் இல்லாதிருந்தனர்.  டி.என்.சேஷன் முதற்கொண்டு வரிசையாக அனைத்து தலைமை தேர்தல் ஆணையர்களுமே பக்கச்சார்புகளின்றிப் பணியாற்றுபவர்க...