SADHANAA SARGAM , MELODY SINGER BORN 1974 MARCH 14
SADHANAA SARGAM , MELODY SINGER BORN 1974 MARCH 14 சாதனா சர்கம் (பிறப்பு: மார்ச் 14, 1974) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி ஆகக்கூடுதலான மொழிகளில் பாடியவர் என்ற மதிப்பையும் பெற்றார் [1] வாழ்க்கை சாதனா இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் உள்ள இசைக் குடும்பத்தில் பிறந்தார். தமிழ் திரையிசை பங்களிப்பு சாதனா சர்கம் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'மின்சார கனவு' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து தேவாவின் இசையில் நெஞ்சினிலே திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். 1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ...