Qiu Jin,: the Feminist ,Rebel, of 20th Century, China,
Qiu Jin: the Feminist Rebel of 20th Century China சியூ சின் (Qiu Jin: நவம்பர் 8, 1875 – ஜூலை 15, 1907), (Xuanqing (சீனம்: 璿卿; பின்யின்: Xuánqīng) and Jingxiong (எளிய சீனம்: 竞雄; மரபுவழிச் சீனம்: 競雄; பின்யின்: Jìngxióng), sobriquet Jianhu Nüxia (எளிய சீனம்: 鉴湖女侠; மரபுவழிச் சீனம்: 鑑湖女俠; பின்யின்: Jiànhú Nǚxiá; நேர்பொருளாக "Woman Knight of Mirror Lake"), ஒரு சீனப் புரட்சியாளரும் பெண்ணிய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். சிங் அரச மரபை எதிர்த்து செய்த கிளர்ச்சியில் தோல்வி கண்டார். பின்னர் தூகிலிடப்பட்டார். இவர் தேசிய போராட்ட வீராங்கனையாக சீனாவில் மதிக்கப்படுகிறார்.[1] இளமை 1875 இல் சீனாவில் ஓர் உயர்குடியில் சின் பிறந்தார். சிறந்த கல்விகற்ற சின் எப்பொழுதும் எழுதுவதையே விரும்பினார். இக்காலத்தில் அவர் பல கருப்பொருட்களில் கவிதைகளை எழுதினார். மலர்கள், பருவகாலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நாட்டு நடவடிக்கைகள் குறித்த மகிழ்வுக் கவிதைகளை அவர் எழுதினார். மேலும் சீனவரலாற்றில் இடம்பெற்ற பெண் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் ஆகியவர்கள் குறித்து எழுதினார். இவர்களைப் பற்றிய கவித...