NEPAL REVOLUTION
NEPA L REVOLUTION 2005 – FEBRUARY 1நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.. தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு. இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை. கர்னாலி ஓர் அற்புதம் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. இமாலயத் தேசமான நேபாளத்தில் பெருக்கெடுத்தோடுகிற சிறிதும் பெரியதுமான 6000 ஆறுகளில் கடைசிக் காட்டாறு கர்னாலியாகத்தான் இருக்கும். இப்பிராந்தியத்தில் ஓடுகிற மிகப் பெரிய ஆறுகளான கண்டக், மஹாகாளி இரண்டுமே இந்தியநேபாள நாடுகளுக்கிடையிலான சமனற்ற ஒப்பந்தங்களினால் நார்நாராகக் கிழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவை. இந்தியப் பெரியண்ணன் எல்லாத் தண்ணீர் மூலங்களையுமே கொள்ளையடித்துவிட்டது; சின்னஞ்சிறு நேபாள நாடோ தீராத வறட்சியிலும், தொலையாத தாகத்திலும் சிக்கித் தவிக்கிறது. கர்னாலி ஆற்றின் மீது ஜப்பானியர் மிக அற்புதமான தொங்கு பாலமொன்றைக் கட்டியிருக்கிறார்கள். காடுகளைப் போலவே இங்கும் இரவு ...