SAMANAR HILLS , ARITTAPATTI ,MELUR ,MADURAI
SAMANAR HILLS , ARITTAPATTI ,MELUR ,MADURAI மதுரை என்றதும் ஒரு கோவில் நகரம் என்று மட்டுமே கற்பனை செய்து கொள்ளாதீர்கள். மலைகள் சூழ அமைந்திருக்கும் மாநகர் மதுரை. மலை, குன்று கரடு, பாறை, குறிச்சி, கிரி, சிகரம், மேடு என இவை அனைத்தும் வெவ்வேறு பொருளுணர்த்தும் மலைகளுக்கு வழங்கும் பெயர்களாகும். அழகர்மலை, சிறுமலை, நாகமலை, பசுமலை, கூடல் மலை, உச்ச பறம்பு மலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை, பெருமலை, சிரங்கி மலை, கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, எரிச்சிமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, கபாலி மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட...