Posts

Showing posts with the label Chenkiskan

Genghis Khan ,in search of his tomb

Image
 Genghis Khan ,in search of his tomb செங்கிஸ் கானின் பொக்கிஷம்! அது மட்டும் கிடைத்துவிட்டால், உலகின் பல வரலாற்று நூல்களை மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏராளமான பேர் 800 ஆண்டுகளாக அதைத் தேடுகிறார்கள்... ஆனால், கிடைக்கவில்லை. வரலாற்றில் சாகாவரம் பெற்ற மர்மங்களில் ஒன்றாக அதைச் சொல்கிறார்கள்.  ‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’ ‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’ என்ற தேடல்தான் அது. வெறுமனே வரலாற்றை மாற்றுவதற்கு மட்டும்தான் இந்தத் தேடலா? இல்லை. செங்கிஸ் கான் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய போர்களில் கைப்பற்றிய அத்தனை பொக்கிஷங்களும் இந்தக் கல்லறையில்தான் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் இன்றைய மதிப்பை வைத்து, பல தேசங்களையே விலைக்கு வாங்கலாம். அதை அடையவே இந்த வேட்டை! ஆசியாவின் அழிவு மையம்  ‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாக...