KANDY AGREEMENT 1815 MARCH 2
KANDY AGREEMENT 1815 MARCH 2 கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 206வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட்டுரை. 1815 இல் கண்டி ராஜ்ஜியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்ட கதையை சென்ற வாரம் பார்த்தோம். கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்திடமுமிருந்து அன்னியரிடம் பறிபோனது. காலனித்துவத்திடம் பறிபோன கதை 1505 இல் இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோனது. போர்த்துக்கேயர் இலங்க...