Posts

Showing posts with the label ACHIVEMENTS

NAGESH - THOUGHTS /ACHIVEMENTS

Image
  NAGESH - THOUGHTS /ACHIVEMENTS நாகேஷ் நினைவலைகள்: மூன்று முறை உயிர்த்தெழுந்த உன்னத கலைஞன் மு. நியாஸ் அகமது சர்வர் சுந்தரம்பட மூலாதாரம்,AVM தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே? அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, "இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்" என்பார் நகைச்சுவையாக. தில்லு முல்லு பட மூலாதாரம்,தில்லு முல்லு இந்த வசனத்தை அவர் வாழ்க்கையிலிருந்துதான் எடுத்துப் பேசி இருக்கிறார் போல. ஆம். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அவரே விவரித்திருக்கிறார். 'தாமரைக் குளம்' என்ற படத்தில் நடிப்பதற்காக, அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், படம் முடிந்த பின்பும் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை. தயாரிப்பு நிர்வாகத்திடம் சென்று பேசுகிறார். அப்போதும் அவர்கள் அவருக்கு ...