Posts

Showing posts with the label RAVI CHANDRAN

ANAI MALAI , TEMPLE,TREASURE, REVEALS ITS SECRECY

Image
ANAI MALAI ,  TEMPLE, TREASURE, REVEALS ITS SECRECY ``இது வெறும் மலை மட்டும் இல்ல சார்... இது ஒரு பொக்கிஷம். பிரமாண்டமான கோயில், வெளியே தெரியாத பல ரகசியங்கள், இந்த மண்ணின் உண்மையான வரலாறு உள்ளே தூங்கிக்கிட்டு இருக்கு. சமண வழி வந்த அறவோரின் ஆன்மாக்கள் இப்போதும் தியானத்தில் இருக்கின்றன. நாம அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அமைதியா வந்துட்டுப் போயிடணும். அதைத்தான் இங்கு வரவங்ககிட்டே சொல்லிட்டிருக்கேன்’’ என்கிறார், சித்தர்போலக் காட்சியளிக்கும் ரவிச்சந்திரன். மதுரை மாநகரம் ஓர் ஆச்சர்யம் என்றால், மதுரையைச் சுற்றி அரண்போல அமைந்திருக்கும் மலைகள் மற்றோர் அதிசயம். பசுமலை, நாகமலை, ஆனைமலை என உயிரினங்களின் பெயர்களை மலைகளுக்குச் சூட்டியுள்ளனர். மலையின் தோற்றத்தைவைத்து பயமுறுத்துவதற்காக அழைக்கப்பட்ட பெயர்களாக இவற்றை நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு மலைக்குள்ளும் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் சமூக, தத்துவ வரலாறு புதைந்துகிடக்கின்றன. நேரில் சென்று காண்பவர்களுக்குத்தான் அதன் தொன்மம் புரியும். மதுரையைப் பல மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், சாட்சிகளாக நிற்கும் மலைகளையோ, அதிலுள்ள வரலாற்றையோ அழ...