MARUTHU PANDIAR`S , JAMBU THEEVU DECLARATION
MARUTHU PANDIAR`S , JAMBU THEEVU DECLARATION ஜம்புத் தீவு பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி வரித் திரட்டலை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரித் திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர். மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் சிவகங்கைப் பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டது. [1] ஜம்புத் தீவு பிரகடனம் [ தொகு ] விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: ஜம்புத் தீவு பிர...