KALKI `S THYAGA BHOOMI
KALKI `S THYAGA BHOOMI கல்கியின் ’தியாகபூமி’ ஆனந்தவிகடனில் 1939-இல் வெளிவந்தது. சரியாக அறுபது வருடங்களுக்குப் பின் 1999-இல் எழுதிய ஒரு கட்டுரையில் ரா.கி.ரங்கராஜன் அந்த நாவலைப் படித்த அனுபவங்களைக் கூறுகிறார். படியுங்கள்! ==== மயிலாப்பூர் மாடவீதி வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு, எட்டு ஒன்பது மணியானால், ஒரு குரல் ஒலிக்கும். ‘ஆனந்தவிகடன்! ஆனந்த விகடன்’ என்று ஒரு சைக்கிள் பையன் கூவிக் கொண்டே விற்பனை செய்வான். வாடிக்கையாக வாங்குவோரின் வீடுகளில் ஒரு பிரதி போட்டு விட்டுப் போவான். . . .// . .. கோடை விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்த எட்டாம் வகுப்புச் சிறுவனான நான் அதற்காகவே விழித்துக் கொண்டிருப்பேன். ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் --திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன் --வந்து கொண்டிருந்த ‘தியாக பூமி’ கதையைப் படத்துக்காக ஒருமுறையும் கதைக்காக ஒரு முறையுமாக விழுந்து விழுந்து படிப்பேன்.அப்போதெல்லாம் ‘ஆனந்தவிகடன்’ ஏராளமான பக்கங்களுடன் மிகத் தடிமனாக வெளிவரும். பெரும்பாலான பக்கங்களில் கல்கியின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கும். ஆகவே, சனிக்கிழமை,...