Posts

Showing posts with the label -BANGKOK

FLOATING IN SHOPPING -BANGKOK

Image
FLOATING IN SHOPPING -BANGKOK நம் காஷ்மீர் படகு வீடுகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஜீலம் நதியில் படகுகளிலேயே பல்வேறு பொருட்கள் விற்பனையாகும். இந்தப் படகு மார்க்கெட், உலகம் எங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை காந்தம்போல இழுத்தது எல்லாம் ஒரு காலம். இப்போது ஆங்காங்கே தொடர்ந்து எழும் துப்பாக்கிச் சத்தங்களும், தொடர் கலவரங்களும் மகிழ்ச்சியை உருக்குலைக்கின்றன. ஆனால், வேறு ஒரு நாட்டில், நகரில் இப்படி 'மிதக்கும் கடைத் தெரு’க்களில் பொருட்கள் வாங்கும் அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இரண்டு, மூன்று முக்கிய 'மிதக்கும் கடைத் தெரு’க்கள் உள்ளன. நாங்கள் சென்றது 'டாம்னோயென் சடெனக்’ மிதக்கும் கடைத் தெரு. இது ரட்சாபுரி என்ற பகுதியில் உள்ளது. இது மிகவும் பழம்பெரும் மிதக்கும் கடைத் தெரு. பாங்காக்கில் இருந்து 100 கி.மீ ​தூரம் தென்மேற்காகச் செல்ல வேண்டும். படகுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. அப்போது ஆளுக்கு ஓர் இளநீர் கொடுத்தார்கள். அந்த இளநீர் குடிக்கக் குடிக்கத் தீருவதாகவே இல்லை. அளவு, சுவை இரண்டுமே அதிகம்! பாங்க...