RAGHUPATHY VENGAIYA NAIDU BORN 1887 OCTOBER 15 - 1941 MARCH 15
RAGHUPATHY VENGAIYA NAIDU BORN 1887 OCTOBER 15 - 1941 MARCH 15 ரகுபதி வெங்கய்யா நாயுடு (Raghupathi Venkaiah Naidu, 15 அக்டோபர் 1887 – 15 மார்ச் 1941) என்பவர் சென்னையில் மவுனபடக் காலத்தில் தொழில் நுட்பத்தால் மவுன படத்தை பேசும் படமாக காட்டியவர் மற்றும் திரையரங்க உரிமையாளர் ஆவார்.[1] இவரின் மகனான ஆர். பிரகாஷ் அக்காலத்தில் பல மவுனப் படங்களையும், பேசும் படங்களையும் இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநராவார். வாழ்க்கை வெங்கைய்யா இன்றைய ஆந்திர மாநிலத்தின், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர். இவரது தந்தையான ரகுபதி பிரித்தானிய படையில் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவுக்கு 18 வயது ஆனபோது அவரது பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மதராசுக்கு குடிபெயர்ந்தனர் அவர்களுடன் வெங்கைய்யாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் வெங்கய்யா தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு கலைப்போருள் கடையை ஆரம்பித்தார். அதில் ஒளிப்பட கருவிக்கு வேண்டிய ஒற்றை பிலிம்களை விற்று வந்தார். இந்த தொழிலால் பல ஒளிப்படக் கலைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டு, அதனால் ஒளிப்பட கலை மீது ...