PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN 1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011
PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN 1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011 பிரேமானந்தர் ( Premananda , பிரேமானந்தா , நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய குருவும் , தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை நிறுவியவரும் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [1] வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார். [2] :¶4 ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளியில் ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர். [...