Showing posts with label SUEZ CANAL. Show all posts
Showing posts with label SUEZ CANAL. Show all posts

Saturday, 27 March 2021

TRAFFIC CLOSED IN SUEZ CANAL 2021 MARCH 23

 

TRAFFIC CLOSED IN SUEZ CANAL 2021 MARCH 23

சூயஸ் கால்வாயில் "டிராபிக் ஜாம்.." ராட்சத கப்பல் சிக்கியது எப்படி? பரபர தகவல்.. ஸ்தம்பித்த வணிகம்



கெய்ரோ: உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து கடல் பரப்பான சூயஸ் கால்வாயில் இப்போது டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. ஆம், 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான Ever Given இங்கு டிராபிக் ஜாம் செய்துள்ளது.


கடந்த செவ்வாய்க் கிழமை சூயஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதிக் கொண்டு நடுவே நின்றுபோனது. இதனால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு இந்த கப்பல் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கப்பலில் உள்ள ஊழியர்கள் 25 பேர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.



எப்படி இந்த கப்பல் சிக்கியது, ஏன் சூயஸ் கால்வாய் முக்கியமான போக்குவரத்து வழித்தடம் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.


சூயஸ் கால்வாய் என்றால் என்ன, அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

சூயஸ் கால்வாய் என்பது செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் கடல்களை இணைக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வழி. இது எகிப்துக்கு சொந்தமானது. 1869 ஆம் ஆண்டில் இது திறக்கப்பட்டது. எனவே, ஆப்பிரிக்காவின் முனையை கப்பல்கள் சுற்ற வேண்டிய அவசியத்தைத் தவிர்த்து உலகளாவிய வர்த்தகத்தை எளிமையாக்கியது.



இது எண்ணெய் சப்ளை உட்பட சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான வழித்தடமாக மாறியது.


 சூயஸ் கால்வாய் முக்கியம் 

சூயஸ் கால்வாய் முக்கியம்

இந்த வழித்தடத்தின் முக்கியத்தை உணர்ந்து, சூயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது. எனவே, 1956ம் ஆண்டில், இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை, எகிப்து மீது படையெடுத்தன. அதை கைப்பற்ற முயன்றன. ஆனால், பின்னர் அவர்களின் படைகள் பின்வாங்கின. 2015 ஆம் ஆண்டில், எகிப்து நாடு இந்த கால்வாயில் பெரும் புனரமைப்பைத் தொடங்கியது. சில மதிப்பீடுகளின்படி, உலகளாவிய வர்த்தகத்தில் 12% இப்போது சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறதாம்.


 

கப்பல் எவ்வாறு சிக்கியது?

சரக்கு கப்பல்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சூயஸ் கால்வாயின் குறுகிய பாதையை ஒவ்வொன்றாகக் கடக்கின்றன. அதாவது சின்ன பாலமாக இருந்தால் நாம் வாகனத்தை எப்படி ஒவ்வொன்றாக ஓட்டிச் சென்று கடப்போமோ அதுபோல. ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த பகுதியில் கடும் மணல் புயல் வீசியுள்ளது. இதனால் கப்பல் மாலுமியால் ரூட்டை பார்க்கவே முடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவியுள்ளது. கடும் காற்றால் கப்பலை காப்பாற்றத்தான் மாலுமி முயன்றாரே தவிர ரூட்டை சரியாக கணிக்கவில்லை. இதனால் கப்பல் மணல் பரப்பில் சிக்கியுள்ளது.


ஈபிள் டவர் நீளம் 

ஈபிள் டவர் நீளம்

இருப்பினும் வேறு ஏதாவது நடந்ததா என்பதற்குப் பின்னால் உள்ள சரியான விவரங்களை இன்னும் அறிய வேண்டியுள்ளது.


இந்த கப்பல் ரொம்பவே நீளமானது. ஒரு ஈபிள் கோபுரத்தை விட பெரியது. கப்பல் கால்வாயைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீளத்தில்தான் இந்த கப்பல் உள்ளது. எனவே சிறிய மாற்றமும் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் நடந்துள்ளது.


கப்பலை நகர்த்த என்ன முயற்சி செய்யப்படுகிறது? 

அமேசான் பங்குகளில் மாதம் ₹ 672,452 பெறுங்கள், குறைந்தபட்ச முதலீடு $200

Invest Stock





கப்பலை நகர்த்த என்ன முயற்சி செய்யப்படுகிறது?

பல நாட்களாக, மீட்பு படகுகள் கப்பலின் கனமான பகுதியை மணலில் இருந்து வெளியே தோண்டி இழுக்க முயற்சி செய்கின்றன. சில மூவ்மென்ட் உள்ளது. ஆனால் இது நீண்ட நாட்கள் தேவைப்படும் நடவடிக்கையாகும். எனவே நெதர்லாந்து போன்ற நாடுகளைச் நிபுணர் குழுக்கள் உதவி செய்ய விரைந்துள்ளன.


கப்பலின் எடையை குறைப்பது முதல் பணியாக இருக்கும். அதன் எரிபொருளை குறைக்க வேண்டும், அல்லது அதன் சரக்குகளை அகற்ற வேண்டி வரும். இது இன்னும் அதிக நேரம் எடுக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. போஸ்காலிஸின் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் பெர்டோவ்ஸ்கி இந்த கப்பலை ஒரு திமிங்கலத்துடன் ஒப்பிடுகிறார். கப்பல் முழுமையாக அகற்றப்படுவதற்கு சில வாரங்கள் ஆகலாம் என்று அவர் கூறுகிறார்.


இந்த சம்பவம் சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கிறது? 

இந்த சம்பவம் சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

சூயஸ் கால்வாயில் இன்னும் பல நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே நிதி சார்ந்த விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் தகவல்படி, 237 கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க காத்திருக்கின்றன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கச்சா எண்ணை வணிகம் பாதிக்கும். லாயிட்ஸ் லிஸ்ட் என்ற கப்பல் துறை சார்ந்த பத்திரிகை, சூயஸ் கால்வாய் மூடப்பட்டால், ஒவ்வொரு நாளும் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் வணிகம் பாதிக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



சூயஸ் கால்வாயில் இதற்கு முன்பு இப்படி நடந்ததா? 

சூயஸ் கால்வாயில் இதற்கு முன்பு இப்படி நடந்ததா?

மிக சமீபத்தில், 2017 ஆம் ஆண்டில், கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ஜப்பானிய கப்பல் இயந்திர கோளாறு காரணமாக சூயஸ் கால்வாயில் நின்று போனது. இருப்பினும், மீட்பு படகுகள் மற்றும் எகிப்திய அதிகாரிகள் விரைந்து சென்று இயந்திர கோளாறை சரி செய்தனர். எனவே இரண்டு மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்து துவங்கியது.


Monday, 28 May 2018

SUEZ CANAL ,HISTORY







SUEZ CANAL ,HISTORY




சூயஸ் கால்வாய் வரலாறு

பிரமிடுகள் எழுப்பிய காலத்துக்குக் கால்வாய்
பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்
கிரேக்கர், ரோமர் முன்பு கைவிட்ட கால்வாய்
இந்தியா போக நெப்போலியன் திட்டக் கால்வாய் 
பூர்த்தி செய்தார் பிரென்ச் பொறியியல் நிபுணர்.
நீர் மார்க்க, கடல்மட்ட சூயஸ் கால்வாய்.

[The Suez Canal (1854-1869)]

முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம சாய்வுக் கோண வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வடிவியற் கணித ஞானத்தையும் [Geometrical Mathematics], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!

பிரமிட், சூயல் & பூர்வீக எகிப்து

முதல் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப்படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.
எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு!
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!

கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.
இந்தியாவுக்கும் ஈரோப்பிற்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டுகளாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவிலிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸாவுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.
ஐரோப்பியர் கால்வாய் கட்டச் செய்த பெருமுயற்சிகள்

1798 இல் நெப்போலியன் இரண்டு கடல்களையும் நேரடியாகக் கடல்மட்டத்தில் இணைக்கத் திட்டங்கள் தயாரிக்க உத்தர விட்டார். அவரது சிவில் எஞ்சினியர் லெப்பியர் [LePere] 1799 இல் தளமட்ட அளவுகள் எடுத்துச் செங்கடல், மத்தியதரைக் கடலை விட 33 அடி அதிக உயரத்தில் இருப்பதாகத் தவறாகக் கணக்கிட்டுக் கால்வாயை வெட்டினால் செங்கடல் வெள்ளம் பல நகர்களை மூழ்க்கிவிடும் என்று எச்சரிக்கை செய்தார்! பிரென்ச் கால்வாய் சிறப்புநராகப் பெயர் பெற்ற, ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] 1831-1838 ஆண்டுகளில் இளவயதில் எகிப்து வந்த போது அந்த தளமட்ட மதிப்பீடு பிழையானது என்று நிரூபிக்கப் பட்டது. 1854 இல் கால்வாய்த் திட்டம் தயாரித்த லெஸ்ஸெப்ஸே, அதைக் கட்டி முடிக்கும் பணிக்கு பிரதம அதிபதியாக நியமனம் ஆனார்.
அதே சமயத்தில் முகமது சையத் இஸ்மெயில் பாஷா எகிப்தை ஆள வந்த போதுதான் [1854-1863], அவரது அனுமதியில் பிரென்ச் கம்பெனியின் ஆரம்ப முயற்சி வெற்றி யடைந்தது. 1858 இல் பிரென்ச் சூயஸ் கால்வாய் மாரிடைம் கம்பெனி [Universal Maritime Company of Suez Canal] துவக்க மானது. அந்தக் கம்பெனி எகிப்திடம் செய்த ஒப்பந்தப்படி கால்வாயைக் கட்டும் பொறுப்பு, பராமரித்து இயக்கி வரும் உரிமை 99 ஆண்டுகளுக்குப் பிரான்சைச் சார்ந்தது. அந்தக் கால வரையறைக்குப் பின்பு கால்வாயின் உரிமையை 1957 ஆம் ஆண்டில் எகிப்து அரசிடம் பிரான்ஸ் ஒப்படைக்க வேண்டும்.

1859 ஏப்ரல் 25 ஆம் தேதி தோண்டல் பணிகள் ஆரம்பமாகி, முதலில் 20,000 எகிப்தியர்கள் வேலை செய்தனர். மொத்தம் பணி செய்த 2,400,000 பேர்களில் 125,000 நபர்கள் கால்வாய் வேலைகளில் உயிரிழந்ததாக அறியப்படுகிறது! நூறு மைல் நீளமுள்ள கால்வாய் [மேல்மட்ட அகலம்: 195 அடி, கீழ்மட்ட அகலம்: 75 அடி, ஆழம்: 30 அடி] உருவாகி, 1869 நவம்பர் 17 ஆம் தேதி துவக்கவிழா கொண்டாடப் பட்டது. பிரிட்டன் 1875 ஆம் ஆண்டில் எகிப்தின் 50% ஸ்டாக்குகளை வாங்கி, சூயஸ் கால்வாய் உரிமையில் பங்கேற்றது. 1936 இல் பிரிட்டன் ஓர் உடன்படிக்கையை எழுதித் தனது இராணுவப் படை ஒன்றைக் கால்வாய் அரங்கில் நிரந்தரமாக வைக்க அனுமதி பெற்றது.
கால்வாய்த் திட்டம் ஆய்வில் இருந்த 1854 ஆண்டுகளில், பிரிட்டன் கட்டும் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் 1875 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் 4 மில்லியன் பவுன் அளித்து பெரும்பான்மையான 176,600 பங்குகளை [50%] வாங்கி, சூயஸ் கால்வாய் உரிமையில் மிக்க அதிகாரம் பெற்றது! 1936 இல் செய்த உடன்படிக்கையில் எகிப்து தனித்து விடப்பட்டு, பிரிட்டன் சூயஸ் கால்வாய்க் காப்பு உரிமையை முழுமையாகப் பெற்றுக் கொண்டது! ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன் சூயஸ் கால்வாய் அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று எகிப்து அதிகாரம் செய்தது! 1951 இல் எகிப்து அரசு 1936 இல் செய்த உடன்படிக்கையை எதிர்த்ததால், உள்நாட்டில் பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலவரங்கள் அதிகமாயின!
சூயஸ் கால்வாயை தேசீய மயமாக்கிய அதிபர் நாசர்

1952 ஆம் ஆண்டில் எகிப்தின் மன்னர் பெரோக்கைக் [King Farouk] கீழே தள்ளி, ஜெனரல் நாகீப்பை [General Naguib] வெளியேற்றிக் கர்னல் கமால் அப்துல் நாசர் [Gamal Abdel Nasser (1918-1970)] இராணுவக் கைப்பற்றுச் சதியில் [Military Coup] வெற்றி பெற்று எகிப்தின் பிரதம மந்திரி யானார்! 1956 இல் தன்னை எகிப்தின் அதிபர் [President] எனப் பிரகடனம் செய்து கொண்டார்! நீள நைல் நதியில் அஸ்வான் அணைகட்ட, மேலை நாடுகள் பண உதவி அளிக்க மறுத்த போது, எகிப்தின் அதிபர் நாசர், சூயஸ் கால்வாயைத் தேசீய மயமாக்கிப் நிதி திரட்ட விழைந்தார்! 1956 ஜூலை 26 ஆம் தேதி எகிப்து வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்ட நாள்! அன்றுதான் ‘சூயஸ் புரட்சி ‘ [Suez Crisis] எனப்படும் தேசீயப் போராட்டம் எழுந்தது! ஐரோப்பியர் ஆணைக்குக் கீழ்க் கட்டுப்பட்ட சூயஸ் கால்வாய், அன்றுதான் தேசீய மயமாக்கப்பட்டு எகிப்து நாட்டின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப் பட்டது! அப்பெரும் திடார் மாறுதலைச் செய்த எகிப்தின் தீவிர அதிபர், அப்துல் நாசரை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் வெறுத்தன.
1869 இல் கட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ‘பிரென்ச் பிரிட்டிஷ் சூயஸ் கால்வாய்க் கம்பெனியின் ‘ [Franco British Suez Canal Co] சொந்தமாக இருந்தது. சூயஸ் கால்வாய் தேசீய மயமாக்கப் பட்டால் இரு நாடுகளும், மற்ற உலக நாடுகளுடன் புரியும் வணிகத் துறைகளில் பெரும் பாதிப்பு நேரும் என்று ஆத்திர மடைந்து பிரான்ஸ், பிரிட்டன் சூயஸ் கால்வாய் இழப்பைத் தடுக்க முயற்சி செய்தன. மூன்று நாடுகள் பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் இரகசியமாய்க் கூடிச் சதி செய்து, எகிப்தைத் தாக்கி சூயஸ் கால்வாயைக் கைப்பற்ற வழி வகுத்தன!

அச்சதியின்படி முதலில் இஸ்ரேல் எகிப்தின் மீது போர் தொடுக்க வேண்டும்! உடனே பிரான்சும், பிரிட்டனும் கால்வாயைக் காத்திட வருவதுபோல், போரின் இடையே எகிப்தில் இராணுவப் படைகளோடு புகுந்து சூயஸ் கால்வாய்ப் பரப்பைக் கைப்பற்ற வேண்டும்! சதியின் விதிப்படி 1956 அக்டோபர் 29 இல் இஸ்ரேல் எகிப்தின் மீது படையெடுத்துத் தாக்கியது! இஸ்ரேலின் பாராட்ரூப்பர்கள் [Paratroopers] விமானத்திலிருந்து கால்வாயிக்கு 25 மைல் தூரத்தில் குதித்துக் கால்வாயை நெருங்கினர்! அடுத்த நாளே பிரென்ச் பிரிட்டிஷ் கூட்டுப் பணிக்குழு ஓர் இறுதி நிபந்தனையை [Ultimatum] இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் வெளியிட்டது! அந்தக் கட்டளை அறிவிப்பின்படி இரு நாடுகளும் போரை உடனே நிறுத்திக் கால்வாயிக்கு 10 மைல் தூரத்தில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்!
நிபந்தனைக்குக் கீழ்ப்படியாது எகிப்து நிராகரித்ததும் பிரான்ஸ், பிரிட்டன் இரு நாடுகளுகளும் அதன் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கின! அவரது விமானங்கள் எகிப்தின் விமானத் தளங்களின் மீது குண்டுகளை வீசின! உடனே எகிப்து கால்வாயில் இருந்த 40 பிரென்ச், பிரிட்டிஷ் கப்பல்களை மூழ்க்கியது! மத்திய கிழக்காசியாவில் கொந்தளிப்புகள் துவங்கி, மூன்றாம் உலகப்போர் உருவாகப் பயமுறுத்தியது! 1957 மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் பேரவை கூடிப் போரை நிறுத்தி, உடைந்த கப்பல்களை நீக்க ஒப்புக் கொண்டது! மீண்டும் கால்வாய் திறக்கப் பட்டது! இறுதியில் அமெரிக்காவின் உதவியால், நாசர் சூயஸ் கால்வாய் உரிமையைப் பிரான்ஸ், பிரிட்டனிடமிருந்து பிடுங்கி, எகிப்து நாட்டுக்குச் சொந்த மாக்கினார்.
1967 இல் மறுபடியும் எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் போர் மூண்டு ஆறு நாட்கள் நீடித்தது! அந்த பேரழிவுப் போரில் சூயஸ் கால்வாய் மிகவும் பழுதானது! கால்வாய் அருகில் உள்ள மூன்று நகரங்கள் சிதைவுற்றன! கப்பல் போக்குவரத்துத் தடைப்பட்டுக் கால்வாய் எட்டு ஆண்டுகள் மூடப்பட்டது! அடுத்து 1975 ஆம் ஆண்டில்தான் உடைந்து கிடந்த பல கப்பல்கள் நீக்கப்பட்டுக் கால்வாய் மீண்டும் பயணத்துக்குச் செம்மை யாக்கப்பட்டது! ஆயினும் எகிப்து அரசு, கால்வாய் வழியாக இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களைத் தடுக்க கட்டுப்பாடுச் சட்டங்களை விதித்தது. இஸ்ரேலின் இராணுவத் தளவாட மில்லாத பளுக்கள் கொண்ட கப்பல்கள் மட்டும், கால்வாய் வழியாகக் கடக்க அனுமதிக்கப் பட்டன. பிறகு 1979 ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் நட்பு உடன்படிக்கை செய்து, கப்பல் போக்குவரத்து நிபந்தனைகள் யாவும் நீக்கப்பட்டன.

நூறு மைல் நீளத்திலும், குறைந்தது 200 அடி அகலத்திலும் உண்டாக்கப்பட்ட சூயஸ் கால்வாய், மன்ஸாலா, டிம்ஸா, பிட்டர் என்னும் மூன்று ஏரிகளின் [Lakes Manzala, Timsah, Bitter] ஊடே செல்லும்படித் திறமையாக வெட்டப் பட்டிருக்கிறது. பிட்டர் ஏரிகள் மட்டும் 18 மைல் தூரம் நீண்டவை. பெரும்பான்மையான இடைவெளித் தூரங்கள் ஒற்றையடிப் பாதைபோல் ஒரு கப்பல் மட்டும் பயணம் செய்யும் கால்வாயாக அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றின் இடையே கப்பல்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல விரிவுப் பகுதிகள் [Passing Bays] கட்டப்பட்டுக் கால்வாய் அகன்றதாகவும் இருக்கிறது. அட்லாண்டிக் கடலிலிருந்து விரைவாக இந்து மகாக் கடலை அடைய வசதியாக இருப்பதால், உலக நவீனக் கப்பல்கள் யாவும் சூயஸ் கால்வாயைத் தவறாது பயன்படுத்திக் கொள்கின்றன.
இப்போது அனுதினமும் கால்வாய் மூலம் 50 கப்பல்களும், ஆண்டுக்குச் சராசரி 25,000 கப்பல்களும் கடந்து செல்கின்றன! 1995-1996 ஆண்டில் மட்டும் 444 மில்லியன் டன் வணிகச் சுமைகளைத் தாங்கிய 18,443 கப்பல்களும், 47 மில்லியன் டன் பளு கொண்ட 303 பூத வடிவான கப்பல்களும் கால்வாய் வழியாகப் புகுந்துள்ளன என்று அறியப் படுகின்றது! சூயஸ் கால்வாய் ஒன்றுதான் 1667 அடி நீளம், 233 அடி அகலம், 70 அடி வெளி உயரம் உள்ள [500 மீடர்X70 மீடர்X21 மீடர்] யுத்த விமானங்களை ஏவும் மாபெரும் நவீனப் போர்க் கப்பல்கள் கடந்து செல்லப் பாதை அளித்துள்ளது! கால்வாயைக் கட்டக் கணிக்கப்பட்ட பூர்வீக மதிப்பு 42 மில்லியன் டாலர் [1854 நாணய மதிப்பு]! ஆனால் பத்தாண்டுகளுக்கு பணி வேலைகள் நீடித்ததால், இறுதியில் செலவு இரட்டிப்பாகி 84 மில்லியன் டாலராக ஏறிவிட்டது!

சூயஸ் கால்வாய் மீது ஜப்பானின் முறுக்கு நாண் பாலம்

1995 ஆம் ஆண்டில் எகிப்து அரசாங்கம் ஜப்பானுடன் நிதிக்கொடை, கட்டமைப்பு உடன்படிக்கை செய்து ஒரு தொங்கு பாலத்தை சையத் துறைமுகத்துக்கு 30 மைல் தெற்கே சூயஸ் கால்வாய் மீது அமைக்கத் திட்டமிட்டது. ஜப்பான் 60% நிதியும் மீதி 40% நிதியை எகிப்து அரசாங்கமும் பாலம் அமைக்கச் செலவு செய்ய ஒப்புக் கொண்டன. 500 அடி உயரம் உள்ள இரண்டு உறுதியாக்கப் பட்ட காங்கிரீட் கோபுரங்களைக் கொண்டது, தொங்கு பாலம். அவை ஒவ்வொன்றையும் தாங்க 76 நீர்த்தளத் தூண்கள் [Caisson Piers] 100 ஆழத்தில் புதைக்கப் பட்டன.
அப்பாலம் இரண்டு காங்கிரீட் கோபுரங்கள் உச்சி முனையில் முறுக்கு நாண் இறுக்கிப் பிடிக்கும் [Cable Stayed with two Pylons] நீண்ட பாலத் தட்டாக நிறுவகம் ஆனது. முபாரக் சமாதானப் பாலம் [Mubarak Peace Bridge] எனப் பெயர் பெறும் அந்த முறுக்கு நாண் பாலம், உலகத்திலே மிக உயரமான பாலமாகக் கருதப் படுகிறது. கோபுரத் தூண்களின் இடையே கப்பல்கள் புகும் மத்திய அகற்சி 400 மீடர் [Span 1330 அடி]. பாலத் தட்டின் முழு நீளம்: 3500 மீடர் [11300 அடி]. கால்வாய் நீர் மட்டத்திலிருந்து பாலத்தின் உயரம்: 70 மீடர் [230 அடி]. பாலத்தை இருபுறமும் பிணைக்கும் பக்கவாட்டுப் பாதையின் நீளம் 1120 மீடர்.
ஜப்பானின் நூதனப் பொறியியல் நுணுக்கத்தில் பாலம் கட்டப் பட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் நிலநடுக்க ஆட்டங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால், பூகம்ப தள ஆட்ட அறிவிப்புச் சாதனங்கள் பாலத்தில் அமைக்கப் பட்டன. பாலம் டிசைன் செய்யப்பட்டுக் கட்டும் சிவில் எஞ்சினியரிங் பணி ஜப்பான் காஜிமா கம்பெனியிடம் [Kajima Consortium] கொடுக்கப் பட்டது. 1000 பேர் பணி யாற்றிய அப்பாலம் 40 மாதங்களில் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப் பட்டது. எகிப்தின் அதிபர் ஹாஸ்ஸினி முபாரக் 2001 அக்டோபரில் பாலத்தைத் திறந்து வைத்த போது, ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தந்து சிறப்பித்தனர்.
கால்வாய் கரையில் ஜெர்மனியின் சுழல் அகற்சிப் பாலம்

2001 செப்டம்பர் 12 ஆம் தேதி சூயஸ் கால்வாயில் புதிதாக கட்டப்பட்ட சுழல் அகற்சிப் பாலத்தில் [Swing Span Bridge] 34 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதல் ஓர் இரயில் தொடர்வண்டி பயிற்சியின் பொருட்டு கடந்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது. அதன் பெயர் ‘எல் ஃபெர்டான் சுழற்பாலம் ‘ [El Ferdan Swing Bridge]. நவம்பர் 14 ஆம் தேதி எகிப்தின் அதிபதி ஹாஸ்ஸினி முபாரக் திறந்து வைத்தார். பாதி நீளத்தில் கட்டி யிருந்த முந்தய பாலம், 1967 இல் நிகழ்ந்த அரேபிய-இஸ்ரேல் போராட்டத்தில் தகர்ந்து போனது! இரட்டை நெம்புக் கரங்கள் கொண்ட அந்த சுழற்பாலம் [Double Swing Cantilever Bridge] ஐந்தாவது முறையாக ஆக்கப் பட்ட பாலம். கால்வாயின் முதற்பாலம் முதல் உலகப் போரின் சமயத்தில் [1914-1918] உருவானது. தாங்கும் தூண்களின் முனைக்கு இடையில் உள்ள அகற்சி [Span Between Pivot Piers] 340 மீடர் [1130 அடி]. சுழற் தட்டுகளின் மொத்த நீளம்: 640 மீடர் [2130 அடி].
1997 மே மாதம் கட்ட ஆரம்பிக்கப் பட்ட பாலம், 2001 அக்டோபரில் முடிக்கப் பட்டது. ஜெர்மன், பெல்ஜிய எஞ்சினியர்கள் கட்டி முடித்த சுழற்பாலத்தை டிசைன் செய்தவர், எகிப்து தேசிய இரயில் துறையின் ஆலோசனைக் குழுவினர், ஹால்குரோ [Halcrow Engineering Group]. 13,200 டன் பளு உள்ள பூத வடிவான சுழற்பாலத்தின் கரங்கள் இருபுறமும் திரும்பி நீளும் இரும்புச் சட்டத் தட்டுகள் காண்பதற்கு விந்தை ஊட்டுபவை!

சூயஸ் கால்வாயில் செய்த பிற்காலச் செம்மைப்பாடுகள்

2001 அக்டோபரில் சூயஸ் கால்வாயின் மீது, முக்கிய நிலப்பகுதியைச் சினாயுடன் [Main Land Link to Sinai] இணைக்கும் 11300 அடி [3500 மீடர்] நீளம் கொண்ட பொறியியல் நூதனமான ‘முபாரக் பாலம் ‘ எனப்படும் ‘முறுக்கு நாண் பாலம் ‘ [Cable Stayed Bridge] ஒன்றை ஜப்பான் எகிப்துக்குக் கட்டி முடித்தது. அதே ஆண்டு நவம்பரில் ஜெர்மன் நிபுணர்கள் உலகிலே மிக நீண்ட சுழற்பாலம் [Swing Bridge (150m-340m-150m)] ஒன்றை இரயில் பாதைக்காக சூயஸ் கால்வாய் மீது இயங்க, கால்வாய்க் கரையில் கட்டினார்கள்.
1997 ஆண்டு திட்டப்படி கால்வாயில் நூறடி ஆழச் சகதியைச் சுத்தம் செய்யும் ஆற்றலுடைய உலகிலே பெரிய இரண்டு கால்வாய்க் கழுவிப் படகுகளை [Dredgers] எகிப்து வாங்கியது. அவற்றுடன் 800 H.P. [Horse Power] கடற்தள ரயில்கள் [Maritime Locomotives] இரண்டும், வித விதமான வடிவமும், ஆற்றலும் உடைய மோட்டார் படகுகள் [Motorboats] ஒன்பதும் வாங்கப் பட்டன.

தேசீய மயமாகி 40 ஆவது பூர்த்தி ஆண்டில் [1996] சூயஸ் கால்வாய் பல முறைகளில் புதுப்பிக்கப் பட்டது. கால்வாயின் நீளம் 173 கி.மீடரிலிருந்து 195 கி.மீடராக [104 மைல் ->117 மைல்] அதிகமாக்கப் பட்டது. அகலம் 110 மீடரிலிருந்து 190 மீடராக [367 அடி ->630 அடி] மிகையாக்கப் பட்டது. அனுதின வருவாய் 90,000 டாலரிலிருந்து 5.3 மில்லியன் டாலராக ஊதியுள்ளது! நாற்பது ஆண்டு மொத்த வருமானம் 30 பில்லியன் டாலராகப் பெருத்துள்ளது!

கால்வாய் வழியாகக் கடக்கும் கப்பலின் சுமை 90,000 டன்னிலிருந்து, நாற்பது ஆண்டுகளில் 1 மில்லியன் டன்னாக மிகுந்துள்ளது! தரணியின் 14% வணிகப் பண்டங்கள், 26% கச்சாஆயில் ஏற்றுமதி, அரேபிய வளைகுடாத் துறைமுகங்களை அடையும் 41% சுமைகள் சூயஸ் வழியாகவே கடந்து செல்கின்றன.

சூயஸ் கால்வாய் இட அமைப்பு வணிகத்தள முக்கியம் பெற்றுக் கிழக்கு, மேற்கு தேசங்களுக்கு குறுக்குப் பாதை அளிக்கிறது. உலக வணிகப் போக்குகள் புகுந்து சென்று நிதிவளம் பெருக, ஆண்டு முழுவதும் தகுந்த கடற் பாதை ஆகிவிட்டது, சூயஸ் கால்வாய்

Saturday, 17 February 2018

SUEZ CANAL HISTORY



SUEZ CANAL HISTORY





சுயஸ் கால்வாய் (அரபு மொழி: قناة السويس Qanāt al-Sūwais) எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்[1] இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது. சைய்டின் துறைமுகத்தின் வடக்கு முனையிலிருந்து சூயஸ் நகரத்தில் உள்ள போர்ட் ட்வெஃபிக்கின் தெற்கு முனைவரை இது நீட்டிக்கப்படுகிறது. இதன் வடக்கு மற்றும் தெற்கு அணுகல் கால்வாய்கள் உட்பட. இதன் நீளம் 193.30 கிமீ (120.11 மைல்), 2012 ஆம் ஆண்டில், 17,225 கப்பல்கள் கால்வாயை (நாள் ஒன்றுக்கு 47) கடந்து சென்றன.[2]

அசல் கால்வாயானது பலாஹ் புறவழி மற்றும் கிரேட் பிட்டர் ஏரி ஆகிய இடங்களைக் கடக்கும் ஒற்றைப் பாதை நீர்வழியாகும். [3] இக்கால்வாயில் நீரை அடைக்கும் அமைப்பு இல்லை, கடல் நீர் இந்த நீர் வழியே ஓடும். பொதுவாக, பொதுவாக குளிர்காலத்தில் பிட்டர் ஏரிகளின் வடக்கிலிருந்து கால்வாயில் நீர்பாயும் ஆனால் கோடைக் காலத்தில் தெற்கிலிலுந்து கோடை காலத்தில் பாய்கிறது.

இந்தக் கால்வாய் எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் (SCA) பராமரிக்கப்பட்டு வருகிறது. [4] கான்ஸ்டன்டினோபாலின் மாநாட்டின் முடிவின்படி, இக்கால்வாயை "சமாதான காலத்திலும் போர் காலத்திலும், ஒவ்வொரு கப்பலும் வர்தகத்துக்கோ அல்லது போர் பயன்பாட்டுக்கோ கொடி பாகுபாடு இல்லாமல்" பயன்படுத்தப்படலாம். [5]

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கால்வாய் பயணத்தின் நேரத்தை துரிதப்படுத்த 35 கிமீ (22 மைல்) க்கு பலாஹ் புறவழி விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டது. சூயஸ் கால்வாயின் திறனை ஒரு நாளைக்கு 49 என்பதிலிருந்து 97 கப்பல்கள் என இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டது. [6] $ 8.4 பில்லியன் செலவில், இந்த திட்டம் எகிப்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வட்டி ஈட்டும் முதலீட்டு சான்றிதழ்களுடன் நிதியளிக்கப்பட்டது. இவ்வாறு  "புதிய சூயஸ் கால்வாய்", விரிவாக்கப் பட்டது, இது 2015 ஆகத்து ஆகஸ்ட் 6, அன்று ஒரு விழாவில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. [7]

சுருக்கமான வரலாறு[மூலத்தைத் தொகு]
மிகப்பழைமையானது சூயஸ் கால்வாய். பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது. பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை வெளியே அகற்றி பல மராமத்துப் பணிகள் செய்து ஏறக்குறைய அதன் அமைப்பை முழுமையாக மாற்றினார். அதன்பின் அதிகம் யாரும் இந்தக் கால்வாய் மீது கவனம் செலுத்தவில்லை. துருக்கி சுல்தானின் வைசிராயாக இருந்த எகிப்தைச் சேர்ந்த கேதிவ் இஸ்மாயில் பிரெஞ்சு நாட்டின் ஆலோசனையில் பிரெஞ்சு மூலதனத்தில் உருவாக்கியதே தற்போதைய கால்வாய். பாலைவனம் வழியே செல்வதால் திரும்பத் திரும்ப மண் சேர்ந்துவிடுவதே இந்தக் கால்வாயின் குறை[8]

வரலாறு[மூலத்தைத் தொகு]
நைல் - செங்கடல் கால்வாய்[மூலத்தைத் தொகு]

பண்டைய கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குக் கட்டப்பட்டன.[9][10][11] எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட்[9][10][11] அல்லது இரண்டாம் ரமெசெஸ்[12] காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்அபடுகிறது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய்[9][10] இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.[9][10][11]

பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் நெப்போலியன் மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன.[10][13][14][15][16] வரலாற்றாளர் எரோடோட்டசின் வரலாற்றுக் குறிப்புகளின் படி,[17] ஏறத்தாழ கி.மு. 600 அளவில் புபாஸ்டிஸ் மற்றும் பைத்தோம் இடையே கிழக்கு-மேற்குக் கால்வாய் வெட்டும் பணி இரண்டாம் நெக்கோ மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது.[10] எனினும் இத்திட்டத்தை நெக்கோ மன்னன் பூர்த்தி செய்யவில்லை.[9][10] நெக்கோவின் மறைவையடுத்து இக்கால்வாய் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. பண்டைய எகிப்தை வெற்றி கொண்ட பேர்சிய மன்னன் முதலாம் தரியசினால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது.

சுயஸ் கால்வாய் நிறுவனத்தின் பணி[மூலத்தைத் தொகு]
1854-1856 காலப்பகுதியில் பிரான்சைச் சேர்ந்த ஃபேர்டினன்ட் டி லெஸ்ஸெப்ஸ் என்பவர் சர்வதேசக் கப்பற் போக்குவரத்துக்காகக் கால்வாய் ஒன்றை அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எகிப்து மற்றும் சூடான் ஆட்சியாளரான முகமது சையத் பாஷாவிடமிருந்து அனுமதியப் பெற்றார். இவர் 1830களில் பிரெஞ்சு அரச அதிகாரியாக இருந்தபோது சையத் பாஷாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. இதன்படி, இந்நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்புடையது. இவ்வொப்பந்தத்திற்கு அமைவாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சுயஸ் நிலப்பகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பதற்கான சர்வதேச ஆணையகம் கூட்டப்பட்டது. இது ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்நிபுணர் குழு கால்வாய் அமைத்தல் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட அறிக்கையை 1856 டிசம்பரில் தயாரித்தது. இதன் பின்னர் சுயஸ் கால்வாய் நிறுவனம் 1858 டிசம்பர் 15இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி 1859 ஏப்ரல் 25இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது.

கால்வாய் அமைப்பு[மூலத்தைத் தொகு]

இந்தக் கால்வாய் சுமார் 20 மீட்டர் (66 அடி) வரையான நீரில் அமிழும் உயரம் அல்லது 240,000 இறந்தநிறைத் தொன் வரையான எடையும், 68 மீட்டர் (223 அடி) வரையான உயரமும், 77.5 மீட்டர் (254 அடி) வரையான அதிகபட்ச அகலமும் கொண்ட கப்பல்கள் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இக்கால்வாயூடாக பனாமா கால்வாயூடாகப் பயணிக்கக் கூடியதை விட பெரிய கப்பல்கள் பயணிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் சில மிகப்பெரிய கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்க முடியாது. சில கப்பல்கள் பயணிக்க ஏதுவான முறையில் எடையைக் குறைக்கும் பொருட்டு, கால்வாய் நுழைவிடத்தில் கால்வாய்க்குச் சொந்தமான படகுகளில் தமது பொதிகளை இறக்கிவிட்டுக் கால்வாயூடாகப் பயணித்து மீண்டும் கால்வாய் முடிவிடத்தில் பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன.

பொதுவாக ஒரு நாளில் மூன்று கப்பற்றொகுதிகள் இக்கால்வாயைக் கடக்கின்றன. இவற்றில் ஒரு தொகுதி வடக்கு நோக்கியும் இரண்டு தொகுதிகள் தெற்கு நோக்கியும் பயணிக்கின்றன. இவை ஏறத்தாழ மணிக்கு 8 கடல்மைல் (மணிக்கு 15 கி.மீ) வேகத்தில் பயணிக்கின்றன. கால்வாயைக் கடக்கும் பயண நேரம் சுமார் 11 முதல் 16 மணித்தியாலங்கள் ஆகும். கப்பல்கள் குறைந்த வேகத்தில் பயணிப்பது கால்வாயின் கரைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.

இக்கால்வாய் சிறியதாக இருப்பதால் சுதந்திரமான இருவழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

மாற்று வழிகள்[மூலத்தைத் தொகு]



















வட கடலூடான வழியையும் (நீலம்) சுயஸ் கால்வாயூடான வழியையும் (சிகப்பு) காட்டும் வரைபடம்

சுயஸ் கால்வாய்க்கு பிரதான மாற்று வழியாக ஆபிரிக்காவின் தென் முனையான கேப் அகுலாஸ் ஊடான கடல் மார்க்கம் விளங்குகின்றது. சுயஸ் கால்வாய் அமைப்பதற்கு முன்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான ஒரேயொரு கடல்மார்க்கமாக இதுவே விளங்கியது. கால்வாயூடாகப் பயணிக்க முடியாதளவு பெரிய கப்பல்களுக்கான பாதையாக இப்பொழுதும் இதுவே விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சம் காரணமாக சுயஸ் காலவாயூடான கப்பற் போக்குவரத்தில் ஏறத்தாழ 10% இவ்வழியைப் பயன்படுத்தின. சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு எண்ணெய்க் கப்பல் சுயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமல் இவ்வழியைப் பயன்படுத்தினால் 2,700 மைல்கள் (4,345 கி.மீ) அதிகமாகப் பயணிக்க வேண்டும்.

அண்மைக் காலமாக ஆர்க்டிக் பெருங்கடலில் பனிமூடிய பகுதி சுருங்க ஆரம்பித்ததிலிருந்து, கோடைகாலத்தில் 6 முதல் 8 வார காலப்பகுதிக்கு வட கடலூடாக ஐரோப்பாவிலிருந்து கிழக்காசியாவுக்கான கப்பற் போக்குவரத்து நடைபெறுவது சாத்தியமாயிற்று. இது சுயஸ் கால்வாயூடான பயணத்தை விட பல்லாயிரம் மைல்கள் குறைவான தூரத்தைக் கொண்டது.

நெகெவ் பாலைவனத்தினூடாக ஒரு புகையிரதப் பாதையை அமைக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

சூழலில் ஏற்பட்ட தாக்கம்[மூலத்தைத் தொகு]

சுயஸ் கால்வாயின் தோற்றம், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையில் முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக[18] இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும், கால்வாயின் நடுப்பகுயிலுள்ள Great Bitter Lake இல், நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் நடுப்பகுதியிலுள்ள இந்த Great Bitter Lake அலைகள் கூடியதாகவும், அலைகள் சுயசில் வேறுபட்டதாகவும் இருக்கும். இந்த Great Bitter Lake ஆனது, மிகவும் உவரானதான இயற்கை ஏரியாக இருப்பதனால், உயிரினங்கள் இடப்பெயர்வு தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உவர்த்தன்மை ஓரளவு சமமானதாக வந்திருப்பதால், செங்கடலிலிருந்து உயிரினங்கள் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன.