SAME SEX MARRIAGE IN INDIA
SAME SEX MARRIAGE IN INDIA ``நாங்கள் அப்பாவாகப்போகிறோம்!'' - தன்பாலினத் தம்பதியின் அன்புக்கதை சி.சந்தியா ``எங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தத் தெரியாமலேயே மூன்று நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாள்கள்தானே இருக்கின்றன என்று நான் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்கையில், அப்துல் என்னிடம் புரொபோஸ் செய்தான்..." தன்பாலினத் தம்பதியர் நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம் . நேசித்தவரையே திருமணம் செய்வது கொடுப்பினை. அது கிடைக்கப்பெற்றவர்கள் நிவேத் ஆண்டனியும் அப்துல் ரஹீமும். தன்பாலினத் தம்பதி. தற்போது பெங்களூரில் வசிக்கின்ற இவர்களின் பூர்வீகம் கேரளா. அம்மாநிலத்தின் இரண்டாவது தன்பாலின திருமணம் செய்தவர்கள் என்று இவர்கள் குறிப்பிடப்பட்டாலும், தங்களை அப்படி அறிமுகம் செய்துகொள்வதில் தங்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்கிறார்கள். நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம் நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம் முதல் சந்திப்பு..? ``ரஹீமின் ஆபீஸும் என்னுடைய ஆபீஸும் எதிரெதிரே இருக்கின்றன. அவனை முதன்முறையாகப் பார்த்தபோதே எனக்குக் காதல் அரும்பிவிட்டது. உடனே அவனை ஃபேஸ்...