Tuesday, 9 February 2021

SAME SEX MARRIAGE IN INDIA

 

SAME SEX MARRIAGE IN INDIA



``நாங்கள் அப்பாவாகப்போகிறோம்!'' - தன்பாலினத் தம்பதியின் அன்புக்கதை

சி.சந்தியா

``எங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தத் தெரியாமலேயே மூன்று நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாள்கள்தானே இருக்கின்றன என்று நான் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்கையில், அப்துல் என்னிடம் புரொபோஸ் செய்தான்..."

தன்பாலினத் தம்பதியர் நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

.

நேசித்தவரையே திருமணம் செய்வது கொடுப்பினை. அது கிடைக்கப்பெற்றவர்கள் நிவேத் ஆண்டனியும் அப்துல் ரஹீமும். தன்பாலினத் தம்பதி. தற்போது பெங்களூரில் வசிக்கின்ற இவர்களின் பூர்வீகம் கேரளா. அம்மாநிலத்தின் இரண்டாவது தன்பாலின திருமணம் செய்தவர்கள் என்று இவர்கள் குறிப்பிடப்பட்டாலும், தங்களை அப்படி அறிமுகம் செய்துகொள்வதில் தங்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்கிறார்கள்.

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

முதல் சந்திப்பு..?

``ரஹீமின் ஆபீஸும் என்னுடைய ஆபீஸும் எதிரெதிரே இருக்கின்றன. அவனை முதன்முறையாகப் பார்த்தபோதே எனக்குக் காதல் அரும்பிவிட்டது. உடனே அவனை ஃபேஸ்புக்கில் தேடி, ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே என் நட்பு அழைப்பை அக்செப்ட் செய்துவிட்டான். அன்றைக்கே நாங்கள் சாட் செய்ய ஆரம்பித்துவிட்டோம்'' - சொல்லும்போதே நிவேதின் முகத்தில் தெரிகிற பிரகாசம் குரலிலும் சிலிர்ப்பாகப் பரவுகிறது.

.

காதலை சொன்ன தருணம்..?


``நானும் அப்துலும் நட்பானபோது, அவன் அடுத்த எட்டாவது நாள் அரேபிய நாடொன்றுக்கு வேலை விஷயமாக உடனடியாகக் கிளம்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஸோ, எங்கள் கையில் இருந்தது வெறும் ஏழு நாள்கள்தான். அந்த ஏழு நாள்களும் தினமும் சந்தித்துப் பேசினோம். எங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தத் தெரியாமலேயே மூன்று நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாள்கள்தானே இருக்கின்றன என்று நான் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்கையில், அப்துல் என்னிடம் புரொபோஸ் செய்தான்.

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம் திருமணத்தின்போது...

இந்தத் தருணத்துக்காகத்தானே இத்தனை நாள்களாக நானும் தவித்துக்கொண்டிருந்தேன். உடனே, நானும் முதல் முறை பார்த்தது, காதலிக்க ஆரம்பித்தது, அவனை ஃபேஸ்புக்கில் தேடியது என அத்தனையையும் சொன்னேன். அப்துலுக்கு சிரிப்புத் தாளவில்லை'' என்கிற நிவேதின் பேச்சை ஆமோதிக்கும் பாவனையுடன் ரசித்துக்கொண்டிருக்கிறார் அப்துல்.

இந்த ஜோடியின் காதலுக்கு வயது 5. ``எங்கள் காதலுக்கு ஆயுள் அதிகம். இந்தப் பயணம் வாழ்நாள் முழுக்கத் தொடரும்'' என்பவர்கள், தாங்கள் சந்தித்த எதிர்ப்புகளையும் சில வரிகளில் பகிர்ந்துகொண்டனர்.

.

தன்பாலினத் தம்பதியர்

``நிவேத், தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அவருடைய பெற்றோரிடம் முன்னரே சொல்லியிருந்தாலும், அப்போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர்கள், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். நாங்கள் இருவரும் எங்கள் உணர்வுகளை விளக்க, மெல்ல மெல்ல எங்களைப் புரிந்துகொண்டு திருமணத்துக்குச் சம்மதித்தனர்'' என்கிறார் அப்துல் ரஹீம்.

`உங்க லவ்வருக்கு எத்தனை ரோஸ் கொடுக்கணும் தெரியுமா?!' - `ரோஸ் டே' காதல் கணக்குகள்  


பரஸ்பரம் பிடித்த இயல்புகள்..?

``அப்துலுக்குக் கோபமே வராது. நான் கொஞ்சம் படபடப்பாக சண்டை போட்டாலும் அமைதியாகவே இருப்பான். செம கூல் அவன்'' - நிவேதின் இந்தப் பதிலைத் தொடர்ந்து, ``நிவேதின் பட பட கோபம்தான் எனக்குப் பிடிக்கும்'' என்று வெடித்துச் சிரிக்கிறார் அப்துல்.

திருமண சந்தோஷத்துடன்...


இருவருக்கும் பிடித்தமான விஷயம்..?

``எங்கள் இருவருக்குமே பிடித்தது டிராவல்தான். புதுப்புது இடங்களுக்குச் சென்று புதிய நினைவுகளைச் சேகரிக்கப் பிடிக்கும்'' என்பவர்களின் காதலுக்குள் புத்தம் புதிய உறவொன்று வரப்போகிறது. ``நாங்கள் அப்பாவாகப் போகிறோம்'' என்று பூரிக்கிறார்கள் நிவேத் - அப்துல் இருவரும். நிவேதின் தோழி ஒருவர் இவர்களுக்காக ஐ.வி.எஃப் முறைப்படி குழந்தை பெற்றுத் தர ஒப்புக்கொண்டுள்ளதால், வெகு சீக்கிரம் ஒரு குழந்தையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நிவேதும் அப்துலும்.

No comments:

Post a Comment