Posts

Showing posts with the label MARUMAKKAL

NANJIL NAATTU MARUMAKKAL VALI MAANMIYAM

Image
  NANJIL NAATTU  MARUMAKKAL VALI MAANMIYAM 1916  ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.    ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று  ‘ முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை ‘  என்ற பாடலை  ‘ கல்லும் கரையும் வண்ணம் ‘  பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது   தானும் சில்லறை போட்டு நகரும்போது பண்டாரம் பின்னால் வந்தார். தன்னிடம் புதையல் பற்றிய தகவல் அடங்கிய ஒரு சுவடிக்கட்டு இருப்பதாகவும் வீட்டுக்கு சென்று வாசித்துப் பார்க்கும்படியும் சொன்னார். போய் வாசித்துப் பார்த்தால் அது ஒரு கவிதை நூல். ஏமாற்றம் ஏற்படாலும் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அதை வாசித்தார். அது வேறு வகையான புதையல் என்று தெரிந்தது.   அதுதான்  ‘ நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ‘.  இது கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடராக வந்தது. அக்காலத்தில் நாஞ்சில்நாட்டில...