Posts

Showing posts with the label MASTANI

BAJIRAO MASTANI MOVIE

Image
பாஜிராவ் மஸ்தானி நேற்றிரவு விஜயா போரம் மாலில் புதிதாக திறக்கபட்டுள் Palazzo திரையரங்கில் பாஜிராவ் மஸ்தானி பார்த்தேன். Palazzo திரையரங்கு  8-screen கொண்டது,  சிறப்பான ஒலி ஒளி இருக்கைகளுடன் உலகத்தரத்தில் உருவாக்கபட்டுள்ளது. கூடுதல் சிறப்பு பார்வையாளர்கள் சினிமா துவங்குவதற்கு முன்பும் பின்பும் அமர்ந்து பேசுவதற்கு வசதியான இருக்கைகள். காபி ஷாப்.  வளாகம் முழுவதும் ஒரே இளைஞர் கூட்டம். பாஜிராவ் மஸ்தானி இந்திய பொழுது போக்கு சினிமாவின் பெரும்சாதனை.   பிரம்மாண்டம் என்பது வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமில்லை, எடுத்துக் கொள்ளும் கதைக்களம்,  அதற்கான பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், நடிப்பு, ஆடல் பாடல்கள், சிறந்த ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் என அத்தனையிலும் சாதனை செய்திருக்கிறார்  சஞ்சய் லீலா பன்சாலி. இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை பதினைந்து ஆண்டுகளாக தான் கண்டுவந்ததாகவும் தற்போது  நிறைவேற்றியிருப்பதாகவும் பன்சாலி சொல்லியிருக்கிறார். உண்மையில்  இது பிரம்மாண்டமானதொரு கனவு தான். திரையில் தனது கனவை முழுமையாக சாத...