.SEVEN PHILANTHROPISTS கடை ஏழு வள்ளல்கள்.
SEVEN PHILANTHROPISTS கடை ஏழு வள்ளல்கள். சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக இருந்திருக்கின்றனர் . அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர் . இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர் . 1.பேகன் இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் . மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமே கங்களை க் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன் இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்க பட்டன் . 2.பாரி வள்ளல் இவன் பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன் .இவன் பறம்பு மலை பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத் தன தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன். ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான். அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்க பாடலொன்று பாடியுள்ளார் 3. வள்ளல் காரி இம்மன்னன் தன கையில் உள்ள வாள் வீச்சில் பகைவர்களை வெட்டிவீழ்த...