Posts

Showing posts with the label LIVER

LIVER FUNCTIONS IN OUR BODY

Image
  LIVER  FUNCTIONS IN OUR BODY இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம். இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான். முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான். பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது. அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செ...