MALAYALAM ARTISTS
MALAYALAM ARTISTS கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது. இந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன் , 1962 மார்ச்சில் வெளியான ஸ்னேகதீபம் என்னும் படத்தில் வெளிவந்தது. இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். இயற்றியவர் பி.பாஸ்கரன். அக்காலத்தில் வந்த தூய மேலைநாட்டு மெட்டு. ஆகவே அன்று இது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இசைநிகழ்ச்சிகளில் பாடுவார்கள். அதைவிட பாண்ட் வாத்தியங்களில் வாசிப்பார்கள். எம்.பி.ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ஸ்னேகதீபம். அவர் அமைத்த முதல் பாடல் ‘சந்த்ரன்றே ப்ரஃபயில்’ தான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார். மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் 1925ல் பிறந்தவர். கம்யூனிஸ்டு இயக்கத்துடன் நெருக்கமானவர். ஜெயகாந்தனின் நண்பர். ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் அவரை சினிமாவுக்குக்கொண்டுவந்தார். அவர் இசையமைத்த முதல்படம் இடதுசாரிகள் பொதுநிதி திரட்டி எடுத்த ...