Showing posts with label ROME. Show all posts
Showing posts with label ROME. Show all posts

Sunday, 18 July 2021

NERO FIRED ROME ON JULY 18,64 A.D

 



NERO FIRED ROME ON JULY 18,64 A.D

தீக்கிரையாகிய ரோம் நகரம்

 


கி.பி.54ம் ஆண்டு கிளாடியர்ஸ் கொல்லப்பட்டதும் நீரோ ரோமாபுரிச் சக்கரத்தியானான். நீரோவின் தாயார் இளைய அக்கைரிப்பினா ஆவார். மகன் மூலம் மறைமுக ஆட்சி நடத்த எண்ணிய இளைய அக்கிரினாவின் எண்ணம் பலிக்கவில்லை. ஆட்சியில் தாயின் தலையீட்டை விரும்பாத நீரோ மன்னன் கி.பி.59ம் ஆண்டு அவரைக் கொன்று விட்டான்.



நீரோ மன்னன் தான் தோன்றித்தனமாக ஆட்சியை நடத்தினான். தனது முதல் மனைவி ஆக்டோவியாவைக் கொலை செய்து அவளது தலையைத் தனது ஆசை நாயகி பாபபேயா சபீனாவிற்கு அனுப்பி வைத்தான். நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு இவள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிறகு அவளும் கொலை செய்யப்பட்டாள்.


ரோம் நகரை கி.பி.64ம் ஆண்டு july 18 மிகப் பெரிய தீ விபத்து பற்றி ஆட்டியது. நீரோ மன்னன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரோம் நகரமெங்கும் வதந்தி பரவியது. அந்த வதந்தியை மறுத்து அந்த சந்தேகத்தை திசை திருப்புவதற்காக கிறிஸ்தவர்கள் மீது அந்தப் பழியை சுமத்தி ஏராளமான கிறிஸ்தவர்களைக் கொடூரமான முறையில் கொன்றான் நீரோ. அவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து தார் பூசி உயிரோடு கொளுத்தினான். இன்னும் பலர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர்.





தீக்கிரையான ரோம் நகரை திரும்பவும் உருவாக்க ஏராளமான செல்வந்தர்களைப் படுகொலை செய்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தான் நீரோ. கி.பி.68ம் ஆண்டு நீரோ மன்னனுக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு சென‌ட் இவரை மக்கள் விரோதி என்று அறிவித்து மரண தண்டனை விதித்த போது நீரோ மன்னன் தற்கொலை செய்து கொண்டான்.


நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் என்ற இயற்பெயரை கொண்ட ரோமப் பேரரசர் நீரோ வாழ்ந்த காலம் டிசம்பர் 15, கிபி 37 முதல் ஜூன் 9, கிபி 68 வரை. ரோமானிய சக்கரவர்த்தியான கிளாடியஸின் மகன் நீரோ. கிளாடியஸுக்கு இன்னொரு திருமணம் மூலம் பிரிட்டனிகஸ் எனும் மகன் இருந்தான். இருந்தும் நீரோ அவனை விட வயதில் மூத்தவனாக இருந்தான். அத்துடன் தன் திறமையால் சக்கரவர்த்தி கிளாடியஸின் மனதையும் கவர்ந்தான். அதனால் மன்னர் கிளாடியஸ் தன் இன்னொரு மனைவிக்குப் பிறந்த ஓக்டேவியா எனும் மகளை நீரோவுக்குத் திருமணம் செய்வித்து அவனை இளவரசனாக அறிவித்தான். இத்தகைய சகோதர மணம், அன்றைய ரோமில் அனுமதிக்கப்பட்டதே.





இந்தச் சூழலில் தன் மகன் ரோம் நாட்டின் மன்னனாக வேண்டும் என்ற நோக்கில் நீரோவின் தாய் அக்ரிப்பினா மன்னன் கிளாடியஸுக்கு விஷக் காளான்களை உணவாகக் கொடுத்துக் கொன்றாள். இப்படி 17 வயதில், கிபி 54 ஆம் ஆண்டு மன்னன் ஆன நீரோ, அதன்பின் தாய்க்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தி வந்தான். நீரோ வளர வளர, தாயின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக ஆட்சி நடத்த ஆரம்பித்தான். அவன் தாய் அக்ரிப்பினஸ், அதன்பின் நீரோவை ஆட்சியில் இருந்து அகற்றி, தம்பி பிரிட்டானிகஸை ஆட்சியில் அமர்த்த முயன்றாள். அதனால் நீரோ அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டான்.


ஆட்சியைப் பிடிப்பதில் நீரோ மூர்க்கத்தனம் காட்டினாலும் மக்களிடம் மிகவும் தன்மையாக நடந்துகொண்டான். பிரபுக்கள் சபையான செனட்டைத் தாண்டி ஏழைகள், அடித்தட்டு வர்க்கத்துக்கு நன்மை செய்தான். அன்றைய வரிவிகிதங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் வரியை 4.5%இல் இருந்து 2.5% ஆகக் குறைத்தான். அடிமைகளின் சுதந்திரத்தை எஜமானர்கள் தடுக்கலாம் என்ற சட்டத்தை ரோமானிய செனட் இயற்ற முயன்றபோது, அச்சட்டத்தை நீரோ ரத்து செய்தான். வக்கீல்கள் அன்று மக்களிடையே ஏராளமாகக் கட்டணம் வசூலித்து வந்தார்கள். அந்தக் கட்டணத்தை நீரோ மன்னன் குறைத்தான். இவையெல்லாம் மக்கள் மத்தியில் அவனுக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. நீரோ கிபி 54 முதல் 68 வரை பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு ஆகியவை முக்கியமானவை.



கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். ரோம் நகரம் தீயில் எறிந்த போது நீரோ நோய் வாய்ப்பட்டு படுகையில் இருந்தான். அப்போது துக்கம் தாளாமல் பிடில் வாசித்ததாக புராண கதைகளும் உண்டு. நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த தன்னுடைய மாளிகையை புதுப்பிக்க ரோமானிய அரசின் செல்வத்தையே அழித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது. அதுமட்டுமின்றி அம்மாளிகையின் மத்தியில் நூறு அடி உயரத்தில் தன்னுடைய வெண்கலச் சிலையையும் நிறுவினார். கொடூர குணங்களை கொண்டவராக திகழ்ந்த போதிலும், திறமையான கலைஞனாகவும் விளங்கினார். பாடல்கள் பாடுவதிலும் நடனமாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ரோமில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டார். தேர்ச்சி பெற்ற தடகள வீரராக இருந்த அவர், தேரோட்டும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


ஆனால் மன்னன் நீரோ கொடுங்கோல் ஆட்சி செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. தனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், சித்ரவதை செய்து உங்களைக் கொல்வேன் என்று கடிதம் அனுப்புவாராம். இப்படிக் கொன்றவர்களுள் அவரது தாயும், ஆசிரியர் செனேகா என்ற தத்துவ ஞானியும் அடங்குவர். 14 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நீரோ மன்னனுக்கு ரோம் நாடாளுமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், நீரோ மன்னனின் முறைப்படியே தற்கொலை செய்து கொள்ள அனுமதியும் அளித்தது. இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான் என்று வரலாறு சொல்கிறது.




Robert Taylor (1911-1969)
as Marcus Vinicius

Deborah Kerr (1921-2007)
as Lygia

Leo Genn (1905-1978)
as Petronius

Peter Ustinov (1921-2004)
as Nero

Patricia Laffan (1919-2014)
as Poppaea

Finlay Currie (1878-1968)
as Saint Peter

Marina Berti (1924-2002)
as Eunice

Sophia Loren (1934)
Lygia’s Slave

Elizabeth Taylor (1932-2011)
Christian Prisoner in Arena

Monday, 29 March 2021

NERO AND ROME FIRING

 



NERO AND ROME FIRING



மதம் கொண்ட மனிதர்கள் -3 

பன்னிரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீரோ அதிகம் கவனம் செலுத்தியது எல்லாம் விளையாட்டு, சிற்பக்கலை, இலக்கியம்தான் ஆகியவற்றில்தான். நாட்டில் உள்ள பொருளாதார மந்தத்தை,  யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உள்ள பகையைப் பற்றி எல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார்.


கேசியஸ் ஃபிளாரஸ் , நீரோவின் மனைவி போப்பியாவின் பணிப்பெணின் கணவன்.  போப்பியாவின் அன்பிற்குரிய பணிப்பெண்ணாக கேசியஸ் ஃபிளாரஸின் மனைவி உயர,  ஃபிளாரஸிற்கு பதவி தேடி வந்தது. மக்களின் சூழல் தெரியாத மன்னரின் ராஜிய வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல ஃபிளாரஸ். சமகால மக்களுக்கு உண்டான பிரச்சனைகளும் மோதல்களும் மத வழிபாடுகளும் ஃபிளாரஸிற்கு நன்றே தெரிந்திருந்தது. கிரேக்க மத பற்றாளரான ஃபிளாரஸ் யூதர்கள் தங்கள் மதங்களை மேலோங்கி போற்றுவதும், கிரேக்கர்களும் சரி சமமாக வாழ்வதும் ஏற்புடையதாக கருதியதில்லை. இந்நிலையில் ஃபிளாரஸ் ஜூடியா மாகாணத்திற்கு முதல்வரானார். நிறைய யூதர்கள் இருக்கும் பகுதி. 


யூதர்களின் முக்கிய கோயிலான இரண்டாம் கோயில் இருக்கும் ஜெருசெலத்தை அடக்கிய மாகாணம். வணிகம் பொருளாதாரத்தில் என்றும் பரபரப்பாக இயங்கும் மக்கள். ஜெசியஸ் ஃபிளாரஸின் வருகையை மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஃபிளாரஸிற்கு இது பெரிய பாரமாக இருந்தது. யூதர்களைச் சகித்துகொண்டு வாழ்வது. அவர்களின் விழாக்களுக்குச் செல்வது. அவர்களிடம் வரிப்பணம் வாங்கி பிழைப்பது. ஃபிளாரஸ் ஒருவித மன உலைசலுடன் இதை அணுகினார். சீக்கிரமே தனக்கென சில கிரேக்க நண்பர்களை உருவாக்கினார். கிரேக்கர்களுக்கு என்று சிறப்புச் சலுகைகளை விதித்தார். போதவில்லை! யூதர்களுக்குத் தேவையில்லாத வரிகளை விதித்தார். யுதர்களுக்குள் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரேக்கர்கள் எள்ளி நகையாடத் தொடங்கினர். வேலை இடங்களில் தெருக்களில் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர் கிரேக்கர்கள். யூதர்கள் எல்லாவகையிலும் வீழ்ந்துகொண்டு இருந்தார்கள். கிரேக்கர்களின் கை ஓங்கியது. வெளிப்படையாக யூதர்களை விமர்சனம் செய்வதும் எள்ளாடல் செய்வதும் அதிகமானது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யூதர்களின் புனித கோயில் முன்பு ஒரு கிரேக்கர் கோழிகளைக் கழுத்தறுத்து வீசினார்.



கோயிலின் புனிதத்தைப் பறித்துவிட்டதாக கூச்சலிட்டார். யூதர்கள் ஒன்றுகூடி அவரைத் தாக்கி கையும் களவுமாகப் பிடித்து அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் வழக்கை வாதிக்க அன்றைய ரோம ஆட்சியின் நியதிப்படி 8 காசுகளைத் தந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. ஃபிளாரஸ் வந்தார். இருதரப்பையும் கேட்டுவிட்டு கோழியின் கழுத்தறுத்த கிரேக்கரை விடுதலை செய்து உத்தரவிட்டார். போதாதென்று அவரை அடித்த 6 யூதர்களுக்கு சிறையும், மன்னரின் வளர்ச்சிக்காக ஜெருசெலத்தில் யூதர்களின் கோயிலில் இருந்து 17 காசுகளைத் தரவேண்டும் என்றும் ஆணையிட்டார். யூதர்கள் கொதித்தனர். 


ஃபிளாரஸ் உருவ சிலையைப் பிச்சை எடுப்பதுபோல வடிவமைத்து வீதி வீதியாக எடுத்துக்கொண்டு சென்றனர். இந்த செய்தி ஃபிளாரஸிற்கு சென்று சேர்ந்தது. யூத மத தலைவர்களை அத்தனைப் பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஒவ்வொரு யூதர்களின் வீட்டிற்குள்ளும் சோதனை நடைபெற்றது. பெண்கள் குழந்தைகள் தெருவுக்குத் தள்ளப்பட்டனர். யூத மத குருக்கள் இறக்கம் இல்லாமல் சிலுவையில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த செய்தி ஜுடியா தாண்டி பரவியது. மக்கள் கலவரங்கள் ஈடுபட ஆரம்பித்தனர். ஜெருசலத்தில் உள்ள ராணுவ கிடங்கிற்கு தீ வைக்கப்பட்டது. 100 இராணுவத்தினருக்கு மேல் பலியானார்கள். யூதர்களை இனி அடக்க முடியாதென்று தெரிந்ததும் ஃபிளாரஸ் நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தார். ஜெருசலேம் தீ பற்றி எரிந்தது. சுமார் 1.1 மில்லியன் அப்பாவி மக்கள் தீக்கிறையாகினர். மன்னருக்கு இச்செய்தி போய் சேர்ந்ததும் முடி இளவரசனாக இருந்த ஹரோட் அஃறிப்பாவை ஜெருசலேதிற்கு அனுப்பிவைத்தார்.  அரசவையில் இருந்த சிரியா நாட்டு இளவரசர் கள்ளிஸ் தனது நாட்டு படையுடன் இளவரசன் அஃறிப்பாவுடன் ஜெருசலேம் விரைந்தார். 


நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர யூதர்களின் தெருக்கள் சூறையாடப்பட்டன. ஜூடியாவை விட்டு கலிலீ நகரத்திற்கு கிரேக்கர்கள் இடம்பெயர்ந்தனர். யூதர்களிடமிருந்த நிலம் வீடுகள் அபகரித்து எரிக்கபட்டனர். லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர, 97,000 யூதர்கள் அடிமைகளாக, 1700 யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழக்க, ரோம் நகரத்திற்கும் தீ பரவியது…

Tuesday, 9 February 2021

GIOVANNA RALLI,ITALIAN ACTRESS BORN IN ROME 1935 JANUARY 2

 

GIOVANNA RALLI,ITALIAN ACTRESS 

BORN IN ROME 1935 JANUARY 2




Giovanna Ralli (born 2 January 1935) is an Italian stage, film and television actress.[1]Born in Rome, Ralli debuted as a child actress at 7; at 13 she made her theatrical debut, entering the stage company of Peppino De Filippo.[2] After appearing in Federico Fellini and Alberto Lattuada's Variety Lights (1950), Ralli had her first film roles of weight in mid-fifties, often in comedy films.[3] In 1959 she had a leading role in Roberto Rossellini's General Della Rovere, that won the Golden Lion at the Venice Film Festival, while in 1960 her performance in Escape by Night, still directed by Rossellini, was awarded with the Golden Gate Award for Best Actress at the San Francisco International Film Festival.[4] Ralli was married to Ettore Boschi.





Ralli later won a Nastro d'Argento award, as best actress, for La fuga (1964).[5] In the mid-sixties she had a brief Hollywood career, starting from Blake Edwards' What Did You Do in the War, Daddy?.[6] In 1974 she won her second Nastro d'Argento, as best supporting actress, for We All Loved Each Other So Much.[5] Starting from early eighties, Ralli focused her activities on stage.[2] In 1993 she received a Flaiano Prize for her career.[3] In 2003 she was made a Grand Officer of the Italian Republic.[7] At the 2015 Taormina Film Fest, where she received a special award for her career, Ralli announced her retirement from acting.[8]







Giovanna Ralli was born on January 2, 1935 in Rome, Lazio, Italy. She is an actress and writer, known for The Mercenary (1968), We All Loved Each Other So Much (1974) and A Prostitute Serving the Public and in Compliance with the Laws of the State (1971). She was previously married to Ettore Boschi.

Spouse (1)

Ettore Boschi (14 March 1977 - 22 July 2013) ( his death)

Trivia (2)

Sister of actress Patrizia Lari

Has been romantically linked to writer Sergio Amidei.



Filmography



Ralli with Nino Taranto and Clelia Matania in Easy Years (1953)


Ralli with Maurizio Arena and Vittorio De Sica in It Happened in the Park (1953)







Ralli with Marcello Mastroianni in The Most Wonderful Moment (1957)



The Children Are Watching Us (1942, by Vittorio De Sica) – Una bambina

Variety Lights di Alberto Lattuada and Federico Fellini (1950)

La lupa by Alberto Lattuada (1953)

Rivalry by Giuliano Biagetti (1953)

It Happened in the Park by Gianni Franciolini (1953)

Easy Years by Luigi Zampa (1953)

The Ship of Condemned Women by Raffaello Matarazzo (1953)

Le signorine dello 04 by Gianni Franciolini (1954)

Madame du Barry by Christian-Jacque (1954)

The Three Thieves by Lionello De Felice (1954)

Roman Tales by Gianni Franciolini (1955)

Le ragazze di San Frediano by Valerio Zurlini (1955)

Les Hussards by Alex Joffé (1955)

A Hero of Our Times by Mario Monicelli (1955)

The Bigamist by Luciano Emmer (1956)

Peccato di castità by Gianni Franciolini (1956)

The Most Wonderful Moment by Luciano Emmer (1957)

Nel blu dipinto di blu by Piero Tellini (1959)

Move and I'll Shoot by Mario Mattoli (1958)

The Defeated Victor by Paolo Heusch (1958)

Tuppe tuppe, Marescià! by Carlo Ludovico Bragaglia (1958)

My Wife's Enemy by Gianni Puccini (1959)

The Thieves by Lucio Fulci (1959)

General Della Rovere by Roberto Rossellini (1959)

Wild Cats on the Beach by Vittorio Sala (1959)

Escape by Night by Roberto Rossellini (1960)

Warriors Five by Leopoldo Savona (1960)

Carmen di Trastevere by Carmine Gallone (1962)

La monaca di Monza by Carmine Gallone (1962)

Let's Talk About Women by Ettore Scola (1964)

La vita agra by Carlo Lizzani (1964)

La fuga by Paolo Spinola (1964)

What Did You Do in the War, Daddy? by Blake Edwards (1966)

The Caper of the Golden Bulls by Russell Rouse (1967)

The Mercenary by Sergio Corbucci (1968)

Deadfall by Bryan Forbes (1968)

The Invisible Woman (1969, by Paolo Spinola) – Laura

Cannon for Cordoba (1970, by Paul Wendkos) – Leonora

Una prostituta al servizio del pubblico e in regola con le leggi dello stato (1971, by Italo Zingarelli) – Oslavia

Cold Eyes of Fear (1971, by Enzo G. Castellari) – Anna

What Have They Done to Your Daughters? (1974, by Massimo Dallamano) – Asst. DA Vittoria Stori

We All Loved Each Other So Much (1974, by Ettore Scola) – Elide Catenacci

To Love Ophelia (1974, by Flavio Mogherini) – Ofelia Ceciaretti

Di che segno sei? (1975, by Sergio Corbucci) – Cristina, Leonardo lover

Sex with a Smile (1976, by Sergio Martino) – Esmeralda (segment "L'attimo fuggente")

Chi dice donna dice donna (1976, by Tonino Cervi) – La signorina X (segment "La signorina X")

Colpita da improvviso benessere (1976, by Franco Giraldi) – Elisabetta

Languid Kisses, Wet Caresses (1976, by Alfredo Angeli) – Elena

Con il dovuto rispetto (1976)

Arrivano i bersaglieri (1980, by Luigi Magni) – Nunziatina

Manolesta (1981, by Pasquale Festa Campanile) – Anna

Towards Evening (1990, by Francesca Archibugi) – Pina

Per non-dimenticare (1992, by Massimo Martelli)

Once a Year, Every Year (1994, by Gianfrancesco Lazotti) – Laura

Sunday Lunch (2003, by Carlo Vanzina) – Franca Malorni

Blood of the Losers (2008, by Michele Soavi) – Giulia Dogliani

The Immature (2011, by Paolo Genovese) – Iole, Lorenzo's mother

The Immature: The Trip (2012, by Paolo Genovese) – Iole, Lorenzo's mother

A Golden Boy (2014, by Pupi Avati) – Madre di Davide


Tuesday, 21 April 2020

ROME WAS FOUNDED APRIL 21,753 BCE



ROME WAS FOUNDED 
APRIL 21,753 BCE


The tale of the founding of Rome is recounted in traditional stories handed down by the ancient Romans themselves as the earliest history of their city in terms of legend and myth. The most familiar of these myths, and perhaps the most famous of all Roman myths, is the story of Romulus and Remus, twins who were suckled by a she-wolf as infants in the 8th century BC.[1] Another account, set earlier in time, claims that the Roman people are descended from Trojan War hero Aeneas, who escaped to Italy after the war, and whose son, Iulus, was the ancestor of the family of Julius Caesar.[2] The archaeological evidence of human occupation of the area of modern-day Rome, Italy dates from about 14,000 years ago.

Founding myths and sources
Aeneas


Aeneas flees burning Troy, Federico Barocci, 1598. Galleria Borghese, Rome.
The national epic of mythical Rome, the Aeneid of Virgil, tells the story of how Trojan prince Aeneas came to Italy. The Aeneid was written under Augustus, who claimed ancestry through Julius Caesar and his mother Venus. According to the Aeneid, the survivors from the fallen city of Troy banded together under Aeneas and underwent a series of adventures around the Mediterranean Sea, including a stop at newly founded Carthage under the rule of Queen Dido, eventually reaching the Italian coast. The Trojans were thought to have landed in an area between modern Anzio and Fiumicino,
southwest of Rome, probably at Laurentum or, in other versions, at Lavinium, a place named for Lavinia, the daughter of King Latinus whom Aeneas married. This started a series of armed conflicts with Turnus over the marriage of Lavinia.[3] Before the arrival of Aeneas, Turnus was betrothed to Lavinia, who then married Aeneas, starting the war.[3] Aeneas won the war and killed Turnus.[3] The Trojans won the right to stay and to assimilate with the local peoples. The young son of Aeneas, Ascanius, also known as Iulus, went on to found Alba Longa and the line of Alban kings who filled the chronological gap between the Trojan saga and the traditional founding of Rome in the 8th century BC.

Toward the end of this line, King Procas was the father of Numitor and Amulius. At Procas' death, Numitor became king of Alba Longa, but Amulius captured him and sent him to prison; he also forced Numitor's daughter Rhea Silvia to become a virgin priestess among the Vestals.[1]

Forests have a prominent role in the founding myth-when Aeneas arrives at the site that would become Rome it is still forest:
Romulus and Remus

Main articles: Romulus and Remus and Romulus
The myth of Aeneas was of Greek origin and had to be reconciled with the Italian myth of Romulus and Remus. They were purported to be sons of Rhea Silvia and either Mars, the god of war, or the demi-god hero Hercules. They were abandoned at birth, in the manner of many mythological heroes, because of a prophecy that they would overthrow their great-uncle Amulius, who had overthrown Silvia's father Numitor. The twins were abandoned on the river Tiber by servants who took pity on the infants, despite their orders. The twins were nurtured by a she-wolf until a shepherd named Faustulus found the boys and took them as his sons. Faustulus and his wife Acca Larentia raised the children. When Remus and Romulus became adults, they killed Amulius and restored Numitor. They decided to establish a city; however, they quarreled, as Romulus was on Palatine Hill, while Remus wanted to found the city on Aventine Hill, until Remus and his followers attacked, and Romulus killed his brother.[1] Thus, Rome began with a fratricide, a story that was later taken to represent the city's history of internecine political strife and bloodshed.

The most familiar date given for the foundation of Rome, 753 BC, was derived by the Roman antiquarian Titus Pomponius Atticus, and adopted by Marcus Terentius Varro, having become part of what has come to be known as the Varronian chronology.[15] An anecdote in Plutarch where the astrologer Lucius Tarrutius of Firmum provides an argument based on a non-existent eclipse and other erroneous astronomical details that Rome was founded in 753 BC suggests that this had become the most commonly accepted date.[16] Through its use by the third-century writer Censorinus, whose De Die Natali was the ultimate influence of Joseph Justus Scaliger's work to establish a scientific basis of ancient chronology, it became familiar.[16]

Recent discoveries by Andrea Carandini on Rome's Palatine Hill have also yielded evidence of a series of fortification walls on the north slope that can be dated to the middle of the 8th century BC.[citation needed] According to the legend, Romulus plowed a furrow (sulcus) around the hill in order to mark the boundary of his new city

Thursday, 15 March 2018

JULIUS CAESAR ,DICTATOR OF ROME DIED MARCH 15, 42 B.C






JULIUS CAESAR ,DICTATOR OF ROME 
DIED MARCH 15, 42 B.C





ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!
உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். 

வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. 

பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.

அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'.

இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும்,மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர் . உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது . 

சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார்,பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார் ;பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார். 

ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்,எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். 

ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். 

தலைமைப் பதவிக்குத் தேர்வு!

தன்னுடைய 18-வது வயதில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார், சீசர். அவர், சிறந்த சொற்பொழிவாளராகவும், வழக்கறிஞராகவும் வளர்ந்தார். கிரீஸ் நாட்டுக்குக் கிழக்கே உள்ள ரோட்ஸ் தீவுக்குச் சென்றபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டார். பின்னர், அவர்களிடமிருந்து விடுதலையான அவர், தன்னுடைய கப்பற்படை மூலம் அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றார். பின்னர் ரோம் திரும்பிய ஜூலியஸ், கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நில விநியோகம் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார். செனட் சபையில் நடந்தவற்றைப் பதிவு செய்து, பொது இடத்தில் வைத்தார்.

ரோமின் முதல் மூவராட்சி!


இந்தக் காலகட்டத்தில் பாம்பே (ராணுவத் தளபதி), சிராசஸ் (செல்வந்தர்), ஜூலியஸ் சீசர் ஆகிய மூவரும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ரோமை ஆட்சிபுரிந்தனர். ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. பின்னர் நடந்த போர் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். அதனால், அந்த மூவர் ஆட்சி அத்துடன் முடிவு பெற பாம்பேவுக்கும் சீசருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது. வலிமையும் புகழுமிக்கவராக இருந்த சீசரிடம், ''தங்களுடைய படைகள் கலைக்கப்பட வேண்டும்'' என பாம்பே வேண்டுகோள் வைத்தார். அதற்கு, சீசர் மறுத்தார். இதன் காரணமாக உள்நாட்டுப்போர் மூண்டது. பாம்பே, கிரீஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றார். பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். பின், அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றபோது... சீசருக்கு பாம்பேயின் வெட்டப்பட்ட தலை நட்பின் பரிசாக அளிக்கப்பட்டது. அதன் பிறகு, எகிப்திய மன்னன் டாலமியைப் போரில் வென்று, அவரது மனைவியான பேரழகி கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி, தன் காதலியாக்கினார்.

கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர். அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.

“சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாகச் சாவதேமேல்'' 

என இந்தச் சாட்டையடி வார்த்தைக்குச் சத்ய பிரமாணம் எடுத்தவர் ஜூலியஸ் சீசர். இந்தப் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகள் அரசு அதிகாரத்துக்கு அடையாளமாக நீடித்த ஒன்று. இவர் பெயரும், இவரது தந்தையின் பெயரும் ஒன்றே. கேயஸ் ஜூலியஸ் சீசர் என்பதே அது. அவர் கொல்லப்பட்ட தினம் இன்று.
                                                     

அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். 

Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு  ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். 

நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல... வரலாற்று உண்மை!.


'ஜூலியஸ் சீசர்' என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.



ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், 'Gaul' பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை "De Bello Gallico" என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் "I came, I saw, I Conquered" என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.


சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர். 


பல பிரதேசங்களை கைப்பற்றிய வீரமும், தன்னிடம் வீழ்ந்தவர்களை கெளரவமாக நடத்திய விவேகமும், முறையற்ற ஆணைகளுக்கு அடிபணியாத தைரியமும், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும், இவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையாக விளங்கிய கட்டொழுங்கும்தான் சீசருக்கு "ரோம சாம்ராஜ்யம்" எனும் வானத்தை வசப்படுத்தின. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு கைகொடுத்த அதே பண்புகள் இப்போது நமக்கும் கைகொடுக்கும், விடாமுயற்சியோடு போராடினால் நாம் விரும்பும் வானத்தை நமக்கும் வசப்படுத்தும்.



ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று .(மார்ச் பதினைந்து ) .சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும்,மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர் . உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது . 

சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார்,பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார் ;பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார். 

ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்,எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். 
ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். 

போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட,நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான் 

அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது

செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள் ;அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .

'ஜூலியஸ் சர்வாதிகாரி!''


சென்ற இடமெல்லாம் வெற்றி வீரனாக வலம் வந்தார். இதனால் ''ஜூலியஸ் சர்வாதிகாரிபோல மாறிவிடுவார்'' என்று நினைத்த செனட், ''தன்னுடைய படைகளை விட்டுவிட்டு மிகச் சாதாரண ஒரு குடிமகனாக வரவேண்டும்'' எனக் கூறியது. செனட்டின் பதிலை ஏற்காத ஜூலியஸ், அவருடைய படைகளுடனேயே நாட்டுக்குள் நுழைந்தார். இதனால், அவருக்கும் செனட்டுக்கும் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போரில், ஜூலியஸே வென்று ரோமின் சர்வாதிகாரியாக இடம்பிடித்தார். ''நாட்டில் குடியாட்சி மலராமல் போனதே'' என்று அவர்மீது வருத்தப்பட்ட சிலர், அவரைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.



சீசரின் மரணம்!

சீசரின் மரணத்தைப் பற்றி ஓர் வரலாற்று ஆசிரியர், ''சீசரைக் கொல்ல நினைத்தவர்கள் எப்படி, எங்கே அவரைத் தீர்த்துக்கட்டலாம் என நிறையத் தீட்டங்கள் பற்றிப் பேசினர். அதில் சிலர், 'சீசர் எப்போதும் நடந்துசெல்லும் புனித பாதையில் மடக்கிக் கொன்றுவிடலாம் என்றும், தேர்தலின்போது கொன்றுவிடலாம் என்றும், கத்திச்சண்டை போட்டி நடக்கும்போது அவரைத் தீர்த்துக்கட்டிவிடலாம் என்றும், அரசவையிலேயே வைத்துக் கொன்றுவிடலாம்' என்றும்... அவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த ஐடியாக்களைக் கொடுத்தனர்.

ஜூலியஸ் சீசர்

சதித் திட்டம் அறிந்தவர்கள்!


இதில், பெரும்பாலானவர்கள், சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். காரணம், அங்கு உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அத்துடன், கத்திகளை மறைத்துவைப்பதும் சுலபமாகிவிடும். இந்தக் கொலை குறித்துச் சதித் திட்டம் நடக்கும் செய்தியறிந்த சீசரின் நெருங்கிய நண்பர்கள், 'தாங்கள் அரசவைக்கு வரவேண்டாம்' என்று சீசரிடம் வேண்டுகோள் வைத்தனர். அந்தச் சமயத்தில் உடல்நிலையைக் கவனிக்குமாறு வற்புறுத்திய மருத்துவர்களும், அவரை 'அரசவைக்குப் போக வேண்டாம்' என்று வற்புறுத்தினர். இதுதவிர, தாம் கண்ட கெட்ட கனவுகளால்... எங்கே, தம் கணவருக்கு ஆபத்து வந்திடுமோ என்று அஞ்சிய சீசரின் மனைவியும், அவர் அரசவைக்குச் செல்வதை விரும்பவில்லை.

மனதை மாற்றிய ப்ருட்டஸ்!

இதனால் மனமுடைந்திருந்த சீசரிடம்... ப்ருட்டஸ் (அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களில் முதலாமவன்), 'இது என்ன பைத்தியக்காரத்தனம்... ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் சில அறிவில்லாதவர்களின் வார்த்தைகளையும் கேட்டு அவைக்குச் செல்லாமல் இருக்கலாமா... இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா? நான் சொல்வதைக் கேளுங்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு அவைக்கு வராமல் இருக்க வேண்டாம்' என்று மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டுவாய் சீசரின் நெருங்கிய நண்பனாய் இருந்து அவரது மனதை மாற்றினான்.

ப்ருட்டஸின் வார்த்தையில் மனம் மாறிய சீசர் அவைக்குச் செல்ல நினைத்தார். அவர், அரசவை செல்லும் முன் அவரது குருமார்கள் அவருக்காக பலி ஏற்பாடு செய்யப்பட்டபோது கண்ட சகுனங்கள் பற்றி எடுத்துச் சொல்லி, 'மாலை வரை அரசவைக்குச் செல்ல வேண்டாம்' என்று எச்சரித்தனர். சீசரும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதனால் தங்கள் திட்டம் வீணாகிவிடுமோ என்று எண்ணிய ப்ருட்டஸ், மீண்டும் சீசரிடம் சென்று... 'யாரோ, சிலர் வேலையில்லாதவர் உளறுவதைக் கேட்டு அரசவைக்கு வராமல் இருக்காதீர்கள். தாங்கள் கூட்டிய அரசவை, தங்களுக்காகக் காத்திருக்கிறது. கெட்ட சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்' என்று கூறி அவரது வலதுகையைப் பிடித்தப்படியே அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றான்.

''தாம் எதையும் கேட்கவில்லை''!

கொலுமண்டபத்துக்குச் சென்ற சீசரை அங்கிருந்த உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் அவர் அருகில் நின்றனர். அதில் ஓர் உறுப்பினர், நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்த அந்த வேளையில், சீசரின் கரங்களை மேலங்கியுடன் சேர்த்துத் இறுகப் பிடித்துக்கொண்டார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்றுணர்ந்த அவருடைய எதிரிகள், அவரைப் பதம்பார்த்தனர். ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தியுள்ளனர்'' என்கிறார், அந்த வரலாற்றாசிரியர்.


அந்தச் சமயத்தில், ப்ருட்டஸும் கத்தியை உயர்த்துவதைப் பார்த்ததும், ''நீயுமா குழந்தையே'' எனச் சிலர் சொன்னதாக அந்த வரலாற்றாசிரியர் குறிக்கிறார். ஆனால், ''தாம் எதையும் கேட்கவில்லை'' என்றே அங்கே இருந்த பிளினி முதலிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.