Sunday 18 July 2021

NERO FIRED ROME ON JULY 18,64 A.D

 



NERO FIRED ROME ON JULY 18,64 A.D

தீக்கிரையாகிய ரோம் நகரம்

 


கி.பி.54ம் ஆண்டு கிளாடியர்ஸ் கொல்லப்பட்டதும் நீரோ ரோமாபுரிச் சக்கரத்தியானான். நீரோவின் தாயார் இளைய அக்கைரிப்பினா ஆவார். மகன் மூலம் மறைமுக ஆட்சி நடத்த எண்ணிய இளைய அக்கிரினாவின் எண்ணம் பலிக்கவில்லை. ஆட்சியில் தாயின் தலையீட்டை விரும்பாத நீரோ மன்னன் கி.பி.59ம் ஆண்டு அவரைக் கொன்று விட்டான்.



நீரோ மன்னன் தான் தோன்றித்தனமாக ஆட்சியை நடத்தினான். தனது முதல் மனைவி ஆக்டோவியாவைக் கொலை செய்து அவளது தலையைத் தனது ஆசை நாயகி பாபபேயா சபீனாவிற்கு அனுப்பி வைத்தான். நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு இவள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிறகு அவளும் கொலை செய்யப்பட்டாள்.


ரோம் நகரை கி.பி.64ம் ஆண்டு july 18 மிகப் பெரிய தீ விபத்து பற்றி ஆட்டியது. நீரோ மன்னன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரோம் நகரமெங்கும் வதந்தி பரவியது. அந்த வதந்தியை மறுத்து அந்த சந்தேகத்தை திசை திருப்புவதற்காக கிறிஸ்தவர்கள் மீது அந்தப் பழியை சுமத்தி ஏராளமான கிறிஸ்தவர்களைக் கொடூரமான முறையில் கொன்றான் நீரோ. அவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து தார் பூசி உயிரோடு கொளுத்தினான். இன்னும் பலர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர்.





தீக்கிரையான ரோம் நகரை திரும்பவும் உருவாக்க ஏராளமான செல்வந்தர்களைப் படுகொலை செய்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தான் நீரோ. கி.பி.68ம் ஆண்டு நீரோ மன்னனுக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு சென‌ட் இவரை மக்கள் விரோதி என்று அறிவித்து மரண தண்டனை விதித்த போது நீரோ மன்னன் தற்கொலை செய்து கொண்டான்.


நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் என்ற இயற்பெயரை கொண்ட ரோமப் பேரரசர் நீரோ வாழ்ந்த காலம் டிசம்பர் 15, கிபி 37 முதல் ஜூன் 9, கிபி 68 வரை. ரோமானிய சக்கரவர்த்தியான கிளாடியஸின் மகன் நீரோ. கிளாடியஸுக்கு இன்னொரு திருமணம் மூலம் பிரிட்டனிகஸ் எனும் மகன் இருந்தான். இருந்தும் நீரோ அவனை விட வயதில் மூத்தவனாக இருந்தான். அத்துடன் தன் திறமையால் சக்கரவர்த்தி கிளாடியஸின் மனதையும் கவர்ந்தான். அதனால் மன்னர் கிளாடியஸ் தன் இன்னொரு மனைவிக்குப் பிறந்த ஓக்டேவியா எனும் மகளை நீரோவுக்குத் திருமணம் செய்வித்து அவனை இளவரசனாக அறிவித்தான். இத்தகைய சகோதர மணம், அன்றைய ரோமில் அனுமதிக்கப்பட்டதே.





இந்தச் சூழலில் தன் மகன் ரோம் நாட்டின் மன்னனாக வேண்டும் என்ற நோக்கில் நீரோவின் தாய் அக்ரிப்பினா மன்னன் கிளாடியஸுக்கு விஷக் காளான்களை உணவாகக் கொடுத்துக் கொன்றாள். இப்படி 17 வயதில், கிபி 54 ஆம் ஆண்டு மன்னன் ஆன நீரோ, அதன்பின் தாய்க்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தி வந்தான். நீரோ வளர வளர, தாயின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக ஆட்சி நடத்த ஆரம்பித்தான். அவன் தாய் அக்ரிப்பினஸ், அதன்பின் நீரோவை ஆட்சியில் இருந்து அகற்றி, தம்பி பிரிட்டானிகஸை ஆட்சியில் அமர்த்த முயன்றாள். அதனால் நீரோ அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டான்.


ஆட்சியைப் பிடிப்பதில் நீரோ மூர்க்கத்தனம் காட்டினாலும் மக்களிடம் மிகவும் தன்மையாக நடந்துகொண்டான். பிரபுக்கள் சபையான செனட்டைத் தாண்டி ஏழைகள், அடித்தட்டு வர்க்கத்துக்கு நன்மை செய்தான். அன்றைய வரிவிகிதங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் வரியை 4.5%இல் இருந்து 2.5% ஆகக் குறைத்தான். அடிமைகளின் சுதந்திரத்தை எஜமானர்கள் தடுக்கலாம் என்ற சட்டத்தை ரோமானிய செனட் இயற்ற முயன்றபோது, அச்சட்டத்தை நீரோ ரத்து செய்தான். வக்கீல்கள் அன்று மக்களிடையே ஏராளமாகக் கட்டணம் வசூலித்து வந்தார்கள். அந்தக் கட்டணத்தை நீரோ மன்னன் குறைத்தான். இவையெல்லாம் மக்கள் மத்தியில் அவனுக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. நீரோ கிபி 54 முதல் 68 வரை பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு ஆகியவை முக்கியமானவை.



கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். ரோம் நகரம் தீயில் எறிந்த போது நீரோ நோய் வாய்ப்பட்டு படுகையில் இருந்தான். அப்போது துக்கம் தாளாமல் பிடில் வாசித்ததாக புராண கதைகளும் உண்டு. நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த தன்னுடைய மாளிகையை புதுப்பிக்க ரோமானிய அரசின் செல்வத்தையே அழித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது. அதுமட்டுமின்றி அம்மாளிகையின் மத்தியில் நூறு அடி உயரத்தில் தன்னுடைய வெண்கலச் சிலையையும் நிறுவினார். கொடூர குணங்களை கொண்டவராக திகழ்ந்த போதிலும், திறமையான கலைஞனாகவும் விளங்கினார். பாடல்கள் பாடுவதிலும் நடனமாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ரோமில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டார். தேர்ச்சி பெற்ற தடகள வீரராக இருந்த அவர், தேரோட்டும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


ஆனால் மன்னன் நீரோ கொடுங்கோல் ஆட்சி செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. தனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், சித்ரவதை செய்து உங்களைக் கொல்வேன் என்று கடிதம் அனுப்புவாராம். இப்படிக் கொன்றவர்களுள் அவரது தாயும், ஆசிரியர் செனேகா என்ற தத்துவ ஞானியும் அடங்குவர். 14 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நீரோ மன்னனுக்கு ரோம் நாடாளுமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், நீரோ மன்னனின் முறைப்படியே தற்கொலை செய்து கொள்ள அனுமதியும் அளித்தது. இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான் என்று வரலாறு சொல்கிறது.




Robert Taylor (1911-1969)
as Marcus Vinicius

Deborah Kerr (1921-2007)
as Lygia

Leo Genn (1905-1978)
as Petronius

Peter Ustinov (1921-2004)
as Nero

Patricia Laffan (1919-2014)
as Poppaea

Finlay Currie (1878-1968)
as Saint Peter

Marina Berti (1924-2002)
as Eunice

Sophia Loren (1934)
Lygia’s Slave

Elizabeth Taylor (1932-2011)
Christian Prisoner in Arena

No comments:

Post a Comment