Posts

Showing posts with the label ANDHRA

MADRAS MUST BE THE CAPITAL OF ANDHRA

Image
  MADRAS MUST BE THE CAPITAL OF ANDHRA மதராஸ் மனதே' கோஷமும், தமிழர் தலைநகர் மீட்பு போராட்டமும்![/size] தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி 'மெட்ராஸ் பிரசிடென்சி' செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய "மெட்ராஸ் ஸ்டேட்" உருவானது. துவக்கத்தில், மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். 1952 அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத் தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது, பிரகாசம், ம.பொ.சி.,யி...

T.PRAKASAM ,FIRST C.M. OF ANDHRA BORN 1872 AUGUST 23 - 1957 MAY 20

Image
T.PRAKASAM ,FIRST C.M. OF ANDHRA  BORN 1872 AUGUST 23 - 1957 MAY 20 .த. பிரகாசம் (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957) இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார். பிறப்பும் படிப்பும்[தொகு] பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம், ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார். சுதந்திர போராட்டத்தில்[தொகு] 1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் சந்திர பால், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக ஆந்திரத்தில் கைது செய்யப் பட்டார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரகாசம் தன் வாதத் திறமையால் பாலின் தண்டனைக் காலத்தைக் குறைத்தார். 1921 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுராஜ்யம் என்ற தேசியவா...

WHY ISRO WENT TO ANDHRA PRADESH

Image
WHY ISRO WENT TO ANDHRA PRADESH இஸ்ரோ ஏவுதளத்தை கன்னியாகுமரியில் அமைக்க விடாமல் துரத்தி அடித்த தி.மு.க அரசு – சந்தி சிரிக்கும் தி.மு.க-வின் துரோக வரலாறு – வெளியான அதிர்ச்சி உண்மைகள்! சமீபத்தில் பத் பூஷன் விருது பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது சுய சரிதையில் தி.மு.க பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி​லோ​​​ ​​மீ​ட்டர்​ வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா​ ​நகரத்தில் உள்ளது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்.​ இது​ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமாகும். விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம். பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா? விக்ரம் சாராபாய் ம...

JEGAN MOHAN REDDY FORMED SEPARATE PARTY -DIVIDED CONGRESS IN ANDHRA

Image
JEGAN MOHAN REDDY  FORMED  SEPARATE PARTY  -DIVIDED  CONGRESS IN ANDHRA அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..!' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன் 2010-ம் ஆண்டின் மத்திய பகுதி அது. அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, அவரின் மனைவி விஜயலஷ்மியும் மகள் சர்மிளாவும் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். சரியாகக் காலை 10 மணிக்கெல்லாம் டெல்லியின் ஜன்பத் சென்றடைந்துவிட்டனர். அதாவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு. சோனியா காந்தியின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததுமே இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர் இறந்த பிறகு தாங்கள் முதல்முறையாகச் சோனியாவை சந்திக்கவுள்ளதால் அவர் நம்மை உற்சாகத்துடன் வரவேற்பார் என எண்ணியபடியே இருவரும் அமர்ந்திருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. இருவரும் வீட்டுக்குள் அழைக்கப்படாமல் அருகில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வரவேற்பு அறையிலேயே இருவரும் அமரவைக்கப்பட்டனர். பத்து - பதினைந்து நிமிட கா...

FISH RAIN IN ANDHRA ON JUNE 20,2015

Image
FISH RAIN IN ANDHRA ON JUNE 20,2015 June 21, 2015 at 6:58pm ·  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி காமா மண்டலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. கொள்ளமுடி, பல்லகிரி ஆகிய கிராமங்களில் விவசா யிகள் நேற்று காலை வழக்கம் போல் தங்கள் வயல்களுக்கு சென்றனர். அப்போது இரவு பெய்த மழையில் வயல் களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் ஏராளமான மீன்கள் உயிருடன் நீந்தியது. நூற்றுக்கணக்கான மீன்கள் தரையிலும் சிதறி கிடந்தது. சுமார் 50 ஏக்கர் பரப்பில் மீன்கள் கிடந்தது. அதனை விவசாயிகள் போட்டி போட்டு அள்ளினர். உயிருடன் நீந்திய மீன்களை கட்டையால் அடித்து கொன்று பிடித்தனர். மாலை வரை இந்த மீன் வேட்டை நடந்தது. ஒவ்வொரு மீனும் அரைக்கிலோ எடையுடன் காணப்பட்டது. இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியதாக கிராம மக்கள் கூறினார்கள். ஜராவதம் கிராமத்தில் மழை பெய்தபோது சாலையில் மீன்கள் கொட்டியதாக நேரில் பார்த்த நரசிம்மராவ் தெரிவித்தார்.மீன் மழை பெய்த தகவல் ஆந்திராவில் பர...

N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA BORN 1923 ,MAY 28

Image
N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA  BORN 1923 ,MAY 28 இந்தியாவில் மிகவும் பிரபலமாக  ‘என்.டி.ராமா ராவ்’  பிறப்பு: மே 28, 1923் , தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பி...

LEPASHI ,THE ANDHRA WONDER

Image
LEPASHI ,THE ANDHRA WONDER லேபாக்ஷியின் வீரபத்ரஸ்வாமி கோவில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் எழுச்சியால் இந்து மதமும் கலைகளும் புத்துயிர் பெற்றன. முகமதியப் படைஎடுப்புகளைப் பற்றிய அச்சமின்றி தென்னக மெங்கும் புதிய புதிய ஆலயங்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று ஆந்திராவிலுள்ள லேபாக்ஷி ஆலயம் ஆமை வடிவில் அமைந்த குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது . `குர்மாசைலா’ (`ஆமைக் குன்று’) என்ற குன்றின் மீது விஜயநகரக் கட்டிடக் கலை பாணியில் இக்கோவில் கட்டபட்டுள்ளது. இந்த மாபெரும் கோவிலில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், விமானங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் இந்த இடத்தில் தான் சீதையைத் தூக்கிச் செல்லும் இராவணனோடு ஜடாயு போரிட்டுப் படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்தார். இராம இலட்சுமணர்கள் வந்து சீதையை பற்றிய செய்தியை அறிந்து கொண்டு ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த இடம் இது . ” லே பக்ஷி ” [பட்சியே எழுந்திரு]  என சொன்னதால் இந்த இடம் லேபாக்ஷி என்று பெயர் பெற்றது இந்த கோயில் கி பி 1538ல் பெனுகொண்டா விரூபண்ண செட்டியாரால் கட்டப்பட்டது. நாட்டிய மண்டபம்தான் லேபாக்ஷி ஆலயத்தின் கலை மையம் ஒரே கோயிலில் அற்புதச் சிற்பங்களையும் அப்...