WHY ISRO WENT TO ANDHRA PRADESH
இஸ்ரோ ஏவுதளத்தை கன்னியாகுமரியில் அமைக்க விடாமல் துரத்தி அடித்த தி.மு.க அரசு – சந்தி சிரிக்கும் தி.மு.க-வின் துரோக வரலாறு – வெளியான அதிர்ச்சி உண்மைகள்!
சமீபத்தில் பத் பூஷன் விருது பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது சுய சரிதையில் தி.மு.க பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ளது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமாகும்.
விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.
பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?
விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்னியாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படும் விக்ரம் சாராபாய் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். அப்போதைய தமிழக முதல்வர் தி.மு.க-வின் அண்ணாதுரை. முதல்வருக்கு முதுகு வலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். விக்ரம் சாராபாயை சந்தித்து பேச மது அருந்தியி தெளிவற்ற நிலையில் இருந்த தி.மு.க அமைச்சரை ‘கைத்தாங்கலாக’ அழைத்து வருகின்றனர். வந்ததும் மிகவும் தாமதமாக. வந்ததும் வாய்குழறல் மற்றும் ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான எதிர்பார்ப்புகளை(லஞ்சம்) முன்வைக்கிறார் அந்த தி.மு.க அமைச்சர். தலைசிறந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தி.மு.க அமைச்சரின் செயல்பாடுகளை கண்டு வெறுத்துத் திரும்புகிறார்.
பிறகு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி தி.மு.க அமைச்சர் வேறு யாருமில்லை மதியழகன். இவ்வாறு விண்வெளி ஏவுதளத்தை தமிழகத்திற்கு வர விடாமல் செய்து இந்த மாநிலத்தை குட்டி சுவராக்கியதில் தி.மு.க-வின் பங்கு அளப்பரியது.
No comments:
Post a Comment