Wednesday, 12 August 2020

MADHAVI SHARMA ,INDIAN ACTRESS BORN 1962 AUGUST 12



MADHAVI SHARMA ,INDIAN ACTRESS 
BORN 1962 AUGUST 12



மாதவி சர்மா (Madhavi Sharma) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் மற்றும் ஒரியா மொழிப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு தொடங்கி 1996 ஆம் ஆண்டுவரை முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
இவர் 1962 ம் ஆண்டு ஆகத்து 12ம் திகதி இந்தியாவின் தெலுங்கானா, ஐதராபாத்து எனும் இடத்தில் பிறந்தார்.[2] இவர் கணவரின் பெயர் ரால்ப் சர்மா என்பது ஆகும். இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் உண்டு. ரிப்பினி சர்மா, பிறிசில்லா சர்மா மற்றும் ஈவலின் சர்மா ஆகியோரே அம்மூவருமாவர். இவர்கள் மூவரும் நியூ ஜேர்சியில் வசிக்கின்றனர். மேலும் இவருக்கு கீர்த்தி குமாரி எனும் சகோதரியும் தனஞ்சய் எனும் சகோதரனும் உள்ளனர்[3]. இவர் பரதநாட்டியத்தை உமா மகேஸ்வரியிடமும் நாட்டுப்புறக் கலைகளை பட் ஆகியோரிடமும் கற்றார். மேலும் இவர் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஸ்டன்லி பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி பயின்றார்.[4]

திரைத்துறையில்



தெலுங்கு
இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூருப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார்.[5] இப்படம்  வெற்றி பெற்றது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் இன்ட்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா. பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் கைதி எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் இவரது இறுதி படம் பிக் பாஸ் என்பதாகும்.

தமிழ்
இவர் கே. பாலச்சந்தரின் மரோ சரித்ரா எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் ஏக் தூஜே கே லியே (1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981 ஆம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  கமலஹாசனுடன்  இணைந்து நடித்திருப்பார். இப்படத்தில் இவருடைய நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.[6] கே. பாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு "தில்லு முல்லு" எனும் படத்தின் மூலம் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இதில் ரசினிகாந்துடன் இணைந்து நடித்தார்.

மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம்" ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரசினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.



மலையாளம்
இவர் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரதானமாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவருடன் இணைந்து நடித்துள்ளார். "ஒரு வடக்கன் வீர கதா" எனும் படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார். "ஆகாசதூது" எனும் படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின்  மாநில விருதை சிறந்த இரண்டாம் நடிகைக்காக பெற்றார். மேலும் இப்படத்தில் நடித்தமையால்  1993ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "பிலிம் பேர் " விருதுகளையும் பெற்றார். இப்படத்தில் இவர் புற்றுநோயுள்ள ஒரு தாயாக நடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கேரள அரசிடம் இருந்து 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவற்றுள் ஒன்று சிறந்த நடிகைக்காகவும் மேலும் இரண்டு சிறந்த இரண்டாம் நடிகைக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கன்னடம்
இவர் பல கன்னட மொழி படங்களிலும் நடித்தவராவார். பிரதானமாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர்களான  " ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அன்னட் நக் மற்றும் அம்பரீஷ்  " ஆகியோர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன் பாராட்டுக்களையும் குவித்தன.


.மாதவி இந்த பெயரை எண்பதுகளில் உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. ரஜினி, கமல் என அந்நாளைய பாப்புலர் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர் மாதவி. சினிமாவில் அழகான தோற்றமுடைய நாயகியாக எண்பதுகளில் வலம் வந்தவர். அந்தக்கால மாதவியை பார்த்து ரசித்த 50 வயதை கடந்த அங்கிள்களிடம் இப்போதும் கேட்டால் மாதவியை சிலாகித்து பேசுவார்கள். மாதவிக்கு வெறித்தனமான ரசிகர் படை அப்போது இருந்தது என்றால் மிகையாகாது. கமல்,ரஜினி நடிக்கும் படங்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்றோர்தான் அந்த நேரங்களில் ஜோடியாக நடித்தனர் அவர்களுள் மாதவியும் ஒருவர்.கமலுடன் ராஜபார்வை, சட்டம், டிக் டிக்டிக், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட படங்களிலும் ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு , உன் கண்ணில் நீர் வழிந்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தன் நடிப்பாலும் அழகாலும் கலக்கியவர் இவர்.

அந்த நாள் திரைப்படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியாகவும் நடித்தவர் மாதவி. மாதவி இந்த பெயரை எண்பதுகளில் உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. ரஜினி, கமல் என அந்நாளைய பாப்புலர் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர் மாதவி.சினிமாவில் அழகான தோற்றமுடைய நாயகியாக எண்பதுகளில் வலம் வந்தவர். அந்தக்கால மாதவியை பார்த்து ரசித்த 50 வயதை கடந்த அங்கிள்களிடம் இப்போதும் கேட்டால் மாதவியை சிலாகித்து பேசுவார்கள்.மாதவிக்கு வெறித்தனமான ரசிகர் படை அப்போது இருந்தது என்றால் மிகையாகாது. கமல்,ரஜினி நடிக்கும் படங்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்றோர்தான் அந்த நேரங்களில் ஜோடியாக நடித்தனர் அவர்களுள் மாதவியும் ஒருவர்.கமலுடன் ராஜபார்வை, சட்டம், டிக் டிக்டிக், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட படங்களிலும் ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு , உன் கண்ணில் நீர் வழிந்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தன் நடிப்பாலும் அழகாலும் கலக்கியவர் இவர்.

நடிகை மாதவியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. 80 – 90 களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் மாதவி. அழகிய, வசீகரமான கண்களை கொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.. அவர் நடித்த டிக் டிக் டிக், ராஜ பார்வை, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாதவை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாதவி ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து அவர் நடித்த டிக் டிக் டிக், ராஜ பார்வை, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாதவை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாதவி ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி 1996ம் ஆண்டு ரால்ஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.


இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. நட்சத்திரங்கள் சற்று நிம்மதியாக ஓய்வெடுக்கும் நாள் . மாதவியை சந்திக்கலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றேன் .

முதல் கேள்வி: ஐந்து மொழி நாயகியான நீங்கள் எப்படி தொடர்ந்து இத்தனை மொழிகளில் வலம் வருகிறீர்கள்?

அதற்கு நான் காரணமல்ல. கால்ஷீட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் என் தகப்பனார் கவனித்து வருகிறார். நடிப்பது மட்டுமே    என் வேலை. ஹிந்தியில் வலம் வருவதற்கு எனக்கு அமைந்த நல்ல படங்கள், நிறுவனங்கள் காரணம். ஒரு படத்தில் அமிதாப்புடன் நடிக்கிறேன்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தமிழில் பேச ஆசைப்படுவார் அவர். ' வணக்கம், நல்லாயிருக்கிங்களா? சாப்பிட்டீங்களா? சின்னப் பாப்பா, வாயில விரலை வச்சா கடிக்கத் தெரியாது' இதுதான் அவருக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள். என்னிடம் தமிழ் கற்றுக் கொள்ள அவர் ஆசைப்படுவார். அவரிடம் நான் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்றேன்.  அந்த வாரம் வந்திருந்த 'ஸ்க்ரீன்' பத்திரிக்கையில் என்னுடைய படம் வண்ணத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. செட்டில் 'மாதவிஜி' என்று அவர் உரக்க கூப்பிட்டவுடன் திரும்பி பார்த்தேன்.  'ஸ்க்ரீன்' பத்திரிக்கையில் வண்ணப்படம் வந்தவுடன் 'கற்பனையில் மிதக்கத் தொடங்கி விட்டீர்களா? இனி நாங்கள் எல்லாம் எப்படி கண்ணில் படுவோம்? என்றுஅன்று முழுவதும் என்னைக் கேலி செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் திடீரென்று பேச்சின் நடுவே என் பிறந்த நாளை சொன்னேன். ஞாபகமாக அந்த நாளுக்கு முன்னதாகவே எனக்கு வாழ்த்தை தெரிவித்தார்.

தமிழ்ப்படங்களில் எல்லா கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது.ஒரு நாள் பேச்சு வாக்கில்  , "நான் அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவேன். குறிப்பாக நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு" என்றேன். அடுத்த நாள் படப்பிடிப்பின் போது, உணவு இடைவேளையில் என்னை சாபபாட்டிற்கு அழைத்தார் சிவாஜி அவர்கள். சென்று பார்த்த பொழுது எனக்காக பிரத்தேயகமாக நண்டு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.யார் கொண்டு வந்தது என்று கேட்பதற்கு முன்பாகவே "நான் தான் உனக்கு பிடிக்குமே என்று வீட்டில் செய்யச் சொன்னேன். என் மனைவி செய்து அனுப்பியிருக்கிறாள்' என்றார் சிவாஜி அவர்கள்.என்னால் சில நிமிடம் பேசவே முடியவில்லை.தன் சக கலைஞர்கள் மீது அவருக்குதான் எத்தனை பற்றும் பாசமும்? நடிப்பை பொறுத்தவரை நான்  அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

பேட்டி: சலன்   

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.10.82 இதழ்)



அந்த நாள் திரைப்படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியாகவும் நடித்தவர் மாதவி. 96ம் ஆண்டு வரை தென்னக மொழிப்படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமா நடிகைகளுக்கே உரிய பாணியில் அமெரிக்காவில் திருமணம் செய்து அங்கே செட்டிலாகிவிட்டார். அங்கு ஒரு மருந்து கம்பெனியையும் இவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்

No comments:

Post a Comment