which oil best
எந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்?! Vikatan Correspondent பொன்.விமலா, படங்கள்: ப.சரவணகுமார், பா.அருண் எந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்? ! நம் தாத்தா, பாட்டி காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களாக புழக்கத்தில் இருந்தன. ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 30 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு வந்த பின், ரீஃபைண்டு முறையிலேயே கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளுடன், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான எண்ணெய்களும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. கூடவே, 'தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களை மாரடைப்பு தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது உஷார்!', 'நல்லெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களின் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்' என்று மருத்துவர்களிடம் இருந்து புறப்பட்டு வந்த எச்சரிக்கைகளும் சேர்ந்துகொள்ள... 'எந்த எண்ணெயிலதான் சமைக்கிறதோ...' என்று குழம்பிப் போய், டாக்டர்கள், விளம்பரங்கள் மற்றும் மீடியாக்கள் அவ்வப்போது எதையெல்லாம் சொல்கிறா...