SENGAI AALIYAAN EELAM WRITER BORN 1941 JANUARY 25 - 2016 FEBRUARY 28
SENGAI AALIYAAN EELAM WRITER BORN 1941 JANUARY 25 - 2016 FEBRUARY 28 1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். எனக்குத் தெரிந்த என் ஆசான் குணராசாவை நான் ஒரு புவியியல் ஆசிரியராக, சரித்திரக் கதை சொல்லியாக, பல்கலைக்கழக பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகரசபை ஆணையாளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, பல வடிவங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இலக்கியப் படைப்பாளியாக அவர்; செங்கை ஆழியானாக வகித்துக் கொண்ட அவதாரம்தான் அவரை ஈழத்து இலக்கிய உலக...