MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR BORN 1954 MAY 25 - 2009 AUGUST 6
MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR BORN 1954 MAY 25 - 2009 AUGUST 6 .முரளி (மலையாளம்: മുരളി, (மே 25, 1954 - ஆகஸ்ட் 6, 2009) இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு கேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நடிப்புத் துறையில் 1979ல் "ஞட்டாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் "சிதம்பரம்". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ந...